Latest Updates
-
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த கர்நாடகா ஸ்டைல் சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு நச்சுனு இருக்கும் -
சனிபகவானின் கோபத்தால் ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம் - ஜாக்கிரதை -
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. -
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா? -
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
ஜூலையில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்.. -
ஜூன் 29-ல் நிகழும் புதனின் வக்ர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் துரத்தப்போகுதாம் -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. -
ஐயங்கார் ஸ்டைல் கதம்ப சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் கூட இந்த சுவை கிடைக்காது
இந்திய திருமணங்கள் வெற்றிகரமாக அமைவதற்கான 12 காரணங்கள்!!!
இந்திய திருமணங்கள் ஏன் வெற்றிகரமாக அமைகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? அயல் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விவாகரத்து வீதம் குறைவே. திருமணத்தின் புனிதம், ஏழு சபதங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்வது ஆகியவற்றில் இந்தியர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
வீட்டில் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தில் நம்பிக்கை கொண்ட இந்தியர்கள், காதலில் விழுவதை விட தங்கள் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமே நீடித்து நிலைக்கும் என கூறுவார்கள். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படும் திருமணங்கள் சிறப்பாக திட்டமிடப்பட்டு நடைபெறும். திருமணமாகப்போகும் பையனுக்கும் பெண்ணுக்கும் பொருத்தம் நன்றாக அமைந்திட பார்த்து பார்த்து அனைத்தையும் செய்வார்கள்.
வெள்ளைக்கார பெண்கள் ஏன் இந்திய ஆண்களை திருமணம் செய்ய விரும்புகின்றனர்?
திருமண சித்தாந்தத்தை இந்திய ஜோடிகள் பார்க்கும் விதம் தான் இந்திய திருமணங்கள் வெற்றிகரமாக அமைவதற்கு இரண்டாவது காரணமாக உள்ளது. 'சாகும் வரை சேர்ந்து வாழ்வோம்' என்பதை தான் இந்தியாவில் உள்ள ஒவ்வொருத்தரும் பின்பற்ற விரும்புவார்கள். திருமணம் முடிந்து விட்டால், ஏழேழு ஜென்மத்திற்கும் இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என நம்புகிறார்கள்.
இதே போல், இந்திய திருமணங்கள் வெற்றிகரமாக அமைய பற்பல காரணங்கள் உள்ளது. அவைகளை பார்க்கலாமா?
திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை தான்
திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை தான் நடக்கும். அதனால் இரண்டு குடும்பமும் சேர்ந்து அதனை கோலாகலமாக நடத்துவார்கள். திருமணத்தை வெற்றிகரமாக்க இப்படி செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

விவாகரத்து என்பது நீண்ட செயல்முறையாகும்
மேலை நாடுகளை போல் இல்லாமல், இந்தியாவில் விவாகரத்து கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும். அதன் முடிவில் விவாகரத்து வாங்க வேண்டும் என்பதையே நாம் மறந்து விடுவோம்.

இரண்டு குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும்
தம்பதிகள் சம்பந்தப்பட்ட சின்ன சின்ன விஷயங்கள் அனைத்திலும் இரண்டு குடும்பங்களும் சம்பந்தப்படும். இதனாலும் கூட இந்த திருமணங்கள் வெற்றிகரமாக அமைகிறது.

இந்திய பெண்கள் சமரசமடைவார்கள்
இந்திய திருமணங்களில், ஆண்களை விட பெண்களே அதிகளவில் சமரசமடைவார்கள். ஆணை சந்தோஷமாக வைத்துக் கொள்ள திருமணத்திற்கு முன் அவளே தான் வாழ்க்கையை எடுத்து வைக்கிறாள்.

சாகும் வரை இணைந்திருக்கும் மனப்பக்குவம்
'சாகும் வரை இணைந்திருக்கும்' சித்தாந்தம் இந்திய திருமணங்களை வெற்றிகரமாக அமைக்கிறது. திருமண வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை கடந்து சென்றாலும் கூட, இரண்டு பேரும் ஒன்றாக இருக்கிறார்களே, அது தான் அங்கே உள்ள சூட்சமம்.

திருமணம் நிரந்தரமானதாக விளங்குகிறது
தம்பதிகளுக்கு மத்தியிலான நிரந்தரமான ஒப்பந்தம் இது - எழுதி முத்திரை குத்தப்பட்டது. நிரந்தரமாக இருவரும் ஒன்றாக வாழும் காரணத்தினாலும் கூட இந்திய திருமணங்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

சமுதாய பாதுகாப்பு
சமுதாய பாதுகாப்பிற்காகவும் இந்திய பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்கள் தனித்து தன் கணவனை விட அதிகமாக சம்பாதித்தாலும் கூட, சமுதாய களங்கத்தில் இருந்து தப்பிக்க திருமணம் செய்து கொள்கின்றனர்.

திருமணத்தில் குழந்தைகளின் பங்கு அதிகம்
குழந்தைகளின் நலனை கருதி, இந்தியாவில் பல திருமணங்கள் விவாகரத்தில் முடிவதில்லை. குழந்தைகளின் வாழ்வு சிதறி விடக்கூடாது என்ற காரணத்தினால் தம்பதிகள் சேர்ந்தே வாழ்கின்றனர், திருமணம் வெற்றிகரமாக அமைய இதுவும் ஒரு காரணமாகும்.

மாமியாரின் அன்பு
நீங்கள் இருக்க வேண்டாம், எங்கையாவது போய் விட வேண்டும் என உங்கள் மாமியார் உங்களை பற்றி நினைப்பார் என நீங்கள் எண்ணலாம். ஆனால் உங்கள் திருமண வாழ்வு முடிந்து விடக்கூடாது என அவர் நினைப்பதில்லை. உங்கள் மீது அவருக்கு உண்மையான பிரியம் இருக்கவே செய்யும்.

ஒழுக்கக் கேடு என்பது சமுதாயத்தை கெடுக்கும் பழக்கம்
இந்தியாவை பொறுத்த வரை, ஒழுக்கக் கேடு எம்பது சமுதாயத்தை கெடுக்கும் பழக்கமாகும். அதனால், தன் கணவன் தனக்கு துரோகம் புரிந்தாலும், அவன் சுலபமாக மன்னிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்திய தம்பதிகளுக்கு பொறுமை அதிகம்
அதிர்ச்சிகள் மற்றும் ஆண்களின் ஈகோ போன்றவைகளை திருமணமான இந்திய பெண்கள் பொறுமையுடன் கடந்து செல்கிறார்கள். அதற்கு எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டியது நம் கடமை. பொறுமையே இந்திய திருமணங்களை வெற்றி பெற செய்கிறது.

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது
பலர் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு கட்டத்தில், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் சிறந்து விளங்கும்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications