Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
உங்க காதலி எந்த இடத்தில் முத்தம் கொடுக்கிறாங்கனு சொல்லுங்க... அதன் அர்த்தம் என்னனு நாங்க சொல்றோம்!
காதலின் வெளிப்பாடாகவும், காதலை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் காதல் மிகவும் அவசியமானதாகும்.
காதலின் வெளிப்பாடாகவும், காதலை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் முத்தம் மிகவும் அவசியமானதாகும். காதலர் தின கொண்டாட்டத்தில் முத்தங்கள் மிகவும் முக்கியமானவை மற்றும் அவசியமானவை. செயற்கையாகவோ அல்லது கடமைக்காகவோ இல்லாமல் முத்தம் எப்போதும் இயற்கையாகவும், காதல் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முத்தத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு, நீங்கள் எந்த இடத்தில் முத்தம் கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அதன் அர்த்தங்கள் மாறுபடும். எனவே அடுத்தமுறை உங்கள் காதலர்/காதலியை முத்தமிடும் முன் அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொண்டு முத்தமிடுங்கள். இந்த பதிவில் ஒவ்வொரு முத்தத்திற்கும் உள்ள தனித்துவமான அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்.

கையில் முத்தம்
உங்கள் காதல் துணை கையில் முத்தமிடுவது உங்கள் மீதான அன்பின் வெளிப்பாடாகும். அவர்கள் உங்களை சிறப்பு, தனித்துவமான மற்றும் மதிப்புமிக்கவர்களாகக் கருதுகிறார்கள் என்று அர்த்தம். உங்களின் உண்மையான குணத்தை அறிந்து அதற்காக அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள். இந்த கலாச்சாரம் ஐரோப்பிய நாடுகளில் உருவானது மற்றும் ஒரு இளவரசர் எப்போதும் பெண்ணின் கைகளை முத்தமிடும் பாப் கலாச்சாரத்தால் வளர்க்கப்பட்டது.

நெற்றி முத்தம்
நெற்றியில் முத்தமிடுவது அக்கறை, பாசம் மற்றும் பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது. உங்கள் துணை உங்களைக் கவனித்துக்கொள்வதற்கு அவர்/அவள் பொறுப்பாக இருப்பதாகவும், நீங்கள் அவர்களுடன் பாதுகாப்பாக உணர வேண்டும் என்றும், உறவில் பாதுகாப்பையும் போற்றுதலையும் வெளிப்படுத்தி, நெருக்கம் மற்றும் நம்பிக்கையை அதிகரிக்க நெற்றியில் முத்தமிட வேண்டும்.

வயிற்றில் முத்தம்
நெற்றியில் முத்தமிடுவதைப் போலவே, வயிற்றில் முத்தமிடுவது என்பது உங்கள் துணை உங்களை பாதுகாப்பதை வெளிப்படுத்துவதன் அறிகுறியாகும், மேலும் நீங்கள் அவர்களை நம்பலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதன் வெளிப்பாடாகும். இந்த சென்சிட்டிவான பகுதியில் முத்தமிடுவது, நீங்கள் அரவணைத்துக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது அல்லது ஃபோர்ப்ளேயின் போது உங்கள் இருவருக்கும் இடையே ஒரு வலுவான நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.

மூக்கில் முத்தம்
இந்த முத்தம் உங்கள் க்ரஷ் அல்லது துணை மீது நீங்கள் தீவிர அன்பைக் கொண்டுள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்தும் முத்தமாகும். இது ஒரு மென்மையான முத்தம், காமத்தை வெளிப்படுத்துவது அல்ல, மேலும் உங்கள் காதல் துணை மீது அன்பு, அக்கறை மற்றும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.

கழுத்தில் முத்தம்
இது ஃபோர்ப்ளே மற்றும் காமம், பாலியல் தூண்டுதல்கள் மற்றும் நீங்கள் பாலியல் நோக்கங்களை வெளிப்படுத்துகிறது மற்றும் பெரும்பாலும் உடலுறவுக்கு வழிவகுக்கும் தீவிர உணர்வுகளைத் தூண்டுகிறது.

தோள்பட்டை மற்றும் முதுகில் முத்தம்
இது மிகவும் தந்திரமான முத்தமாகும். ஏனெனில் உங்கள் துணை இதனை ஆழ்ந்த தொடர்பு மற்றும் நெருக்கத்திலிருந்து விலகி இருக்க விரும்புகிறார் வெளிப்படுத்தும் நேரத்தில், நீங்கள் அதை கவர்ச்சியாகக் காணலாம் மற்றும் பாலியல் உந்துதல் என்று நினைக்கலாம்.

பிரெஞ்சு முத்தம்
பிரெஞ்சு முத்தம் மிகவும் பிரபலமான மற்றும் அனைவராலும் விரும்பப்படும் முத்தமாகும். இது உங்கள் பாலியல் விருப்பத்தின் மிகவும் வெளிப்படையான வெளிப்பாடாகும். இது உங்கள் துணை உங்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள் மற்றும் மேலும் உங்கள் உறவை அடுத்த நிலைக்கு இழுத்துச்செல்ல விரும்புகிறார்கள் என்பதன் வெளிப்பாடாகும்.

கன்னத்தில் முத்தம்
கன்னத்தில் முத்தம் பொதுவாக இந்திய கலாச்சாரத்தில் இரண்டு நபர்களிடையே பாசத்தையும் நெருக்கத்தையும் குறிக்கிறது. ஆனால் பல கலாச்சாரங்களில், கன்னத்தில் முத்தமிடுவது 'ஹலோ' என்ற வாழ்த்துக்களை தெரிவிக்கும் முறையாகும். உங்கள் துணையின் கன்னத்தில் உதடுகளை சிறிது சில நொடிகள் வைப்பது உடனடி உற்சாகத்தை இருவருக்கும் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications