For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்திய இளம் பெண்கள் அதிகம் மூடி மறைக்கும் இரகசியங்கள் #DarkSecret

  By Staff
  |

  குழாயடி சண்டையில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் தெருவிற்கு இழுக்கும் அளவிற்கு திட்டித் தீர்ப்பார்கள். ஆனால், நாப்கின் கேட்டு வாங்க கூச்சப்படுவார்கள். வெளியுலகில் இருந்து காணும் போது இந்திய பெண்களின் வாழ்க்கை கொஞ்சம் காண்ட்ராஸ்டாக தான் இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் வளர்ந்த விதம் மற்றும் சமூகத்தின் ஒடுக்குமுறை.

  What is it that Most Indian Young Girls Do Secretly?

  எத்தனை பெரிய தவறு செய்தாலும் அவன் ஆண். சின்ன பிழையானாலும் நீ பெண்... என்ற பாகுபாடு வளர்ப்பில் இருந்து படிப்பு, திருமணம், வேலை, என அனைத்திலும் காணப்படுகிறது. 80களில் இது சகஜமாக காணப்பட்டது... ஆனால், சில பெரு நகரங்களை தாண்டி 2020லும் இந்தியாவில் பெண்கள் இப்படியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது கொடுமை.

  ஒரு காண்ட்ராஸ்டான வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்திய பெண்கள் எதை எல்லாம் தங்கள் டார்க் சீக்ரெட்டாக வைத்துள்ளனர் என்று இந்த தொகுப்பில் காணலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  வாக்ஸிங்!

  வாக்ஸிங்!

  வாக்ஸிங் அவசியமற்றது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஆனால், 24x7 டிவியில் பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்றால் சருமத்தில் முடி இருக்க கூடாது. சருமம் பொன் போல ஜொலிக்க வேண்டும் என்று விளம்பரம் செய்வதால் பெண்கள் வாக்ஸிங் செய்வது தான் அழகு என்று கருதுகிறார்கள்.

  வாக்ஸிங் செய்வது அழகாக இருந்தாலும், அது எத்தகைய வலி மிகுந்த செயல் என்பது பெண்களுக்கு மட்டுமே தெரியும். சரியான நேர இடைவேளையில் வாக்ஸிங் செய்ய வேண்டும். இல்லையேல் அதுவே கொஞ்சம் அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கவும் காரணமாகிவிடும். ஒருவேளை வாக்ஸிங் செய்ய வேண்டியது மறந்துவிட்டால், அதை இரகசியாமாக வைத்துக் கொள்வார்களாம் பெண்கள்.

  பர்பெக்ட் செல்பி!

  பர்பெக்ட் செல்பி!

  இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் ஸ்டேட்ஸ், ஃபேஸ்புக் என பெண்களின் செல்பி அலப்பறைகளை தாங்கவே முடியாது என்று ஆண்கள் புலம்பினாலும். முதல் ஆளாக வாவ் மற்றும் ஹார்ட் ஸ்மைலி போடுவதும் அதே ஆண்கள் தான். நீங்கள் ரசித்து விரும்பி போடும் அந்த செல்பிக்கு பின்னால் ஒரு நூறு செல்பிக்களாவது இருக்குமாம்.

  அந்த செல்பிக்களில் ஒன்று, இரண்டு தான் தேறும், மற்றவை எல்லாம் எப்போதாவது மீண்டும் பதிவிட பயன்படுத்துக் கொள்ளலாம் என்று சேமித்து வைத்துக் கொள்வார்களாம் பெண்கள். நேரம் வரும் போது பில்டர், மேக்கப் எல்லாம் செய்து பதிவிட்டு லைக்ஸ்களை வாரிக்குவித்து விடுகிறார்கள். எடிட்டிங் பிராசஸ் முடியும் வரை அந்த செல்பிக்கள் சீக்ரெட்டாக தான் இருக்கும்.

  பார்ன்!

  பார்ன்!

  ஆண்கள் மட்டும் தான் பார்ன் பார்ப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு உலகிலேயே பார்ன் பார்க்கும் பெண்கள் பட்டியலில் இந்திய பெண்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய இன்டர்நெட் யுகத்தில் பார்ன் பார்ப்பது எல்லாம் மிக எளிது. அதன் முன்பு இருட்டு அறையில் முரட்டு குத்து எல்லாம் ஜுஜுபி.

  தாங்கள் பார்ன் பார்ப்பதை மிகவும் இரகசியாமாக வைத்துக் கொள்கிறார்கள் பெண்கள். இச்சை என்பது மனித உணர்வுகளில் ஒன்று. இதற்கு ஆண், பெண் பேதம் எல்லாம் இல்லை. இதை தவறு என கூற முடியாது. ஆனால், அடிக்ட் ஆகாமல் இருந்துக் கொண்டால் நல்லது.

  துன்புறுத்தல்!

  துன்புறுத்தல்!

  இந்திய பெண்கள் அதிகம் இரகசியமாக வைத்துக் கொள்வது எதை தெரியுமா? தாங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதை. கற்பழிப்பு, தகாத முறையிலான தீண்டுதல், தவறான பேச்சு என இந்திய பெண்களை கண்களால், கைகளால், வார்த்தைகளால் தினம், தினம் துன்புறுத்துகிறார்கள்.

  இதை ஏனோ இந்திய பெண்கள் அதிகம் பெற்றோர் கவனத்திற்கு எடுத்து செல்வதில்லை. எங்கே கூறினால் வேலைக்கு போக வேண்டாம், கல்லூரிக்கு போக வேண்டாம் என்று தடை விதித்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்குள் அதிகமாவே இருக்கிறது.

  இதனால், நீதி கேட்டு குரல் உயர்த்த வேண்டிய இடத்தில், மௌனம் சாதித்து அதை இரகசியமாக தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்து விடுகிறார்கள் இந்திய பெண்கள்.

  போதை!

  போதை!

  படத்தில் காணும் போது அரிதாக இருக்கிறது. ஆனால், சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, போன்ற இந்திய பெரு நகரங்களில் பெண்கள் போதைக்கு அடிமையாவது மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.

  பார்ட்டி, கிளப் என்று எங்கு போனாலும் பெண்களுக்கு இலவசம். பெண்கள் கூட்டம் வருவதை அறிந்தால் ஆண்கள் கூட்டம் அலைமோதும் என்ற மார்கெட்டிங் யுக்தியை பயன்படுத்தி பெண்களை போதை வலையில் விழ வைக்கிறார்கள். சிலர் பணத்திற்காக மயங்குகிறார்கள். சிலர் தேவைக்காக மயங்குகிறார்கள்.

  உறவு!

  உறவு!

  இந்திய பெண்கள் உறவில் எதிர்பார்ப்பது காதல், அக்கறை, அரவணைப்பு மற்றும் மரியாதை. ஆனால், அவர்களை இச்சை, உறவு, தாம்பத்தியம், கொஞ்சி, குலவுதல் போன்றவற்றுக்கு காதல் என்ற பெயரில் பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் தான் அதிகம். அன்று காதலில் இருந்து காமம் பிறந்தது. இன்று காதல் என்ற பெயரில் காமம் பிறக்கிறது.

  உறவுகளில் தாங்கள் ஏமாற்றப்படுவதை, ஏமாறுவதை பெண்கள் அதிகம் வெளியே கூறுவதில்லை. அவை எல்லாம் இரகசியமாக அவர்கள் மனதினுள் புதைந்துவிடுகிறது. ஆண்கள் தாடி வளர்த்து, சரக்கு அடித்து வெளிக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், பெண்களால் அது முடிவதில்லை. ஆகையால் இரகசியமாக்கி கொள்கிறார்கள்.

  பொய்!

  பொய்!

  ஒரே வீட்டில் இருக்கும் ஆண், பெண்ணால் இந்தியாவில் நண்பர்களுடன் சினிமாவிற்கு சென்று வருகிறேன் என்று பெற்றோரிடம் மிக எளிதாக கூறிவிட முடியாது. ஆண், நண்பர்களுடனும் சினிமா சென்று வருகிறேன் என்று கூறுவது இயல்பு. அதுவே மகள் கூறினாள்... வீட்டுக்கு அடங்காதவள். ஊர் மேய செல்கிறாள். நல்ல பொண்ணு பண்ற காரியமா இது என திட்டு தான் கிடைக்கும்.

  இதனால் சினிமாவிற்கு செல்வதில் இருந்து, பிறந்தநாள் பார்ட்டி, தோழிகளுடன் வெளியே செல்வது என எதுவாக இருந்தாலும் மூட்டை, மூட்டையாக பொய்களை கொட்டி விடுகிறார்கள் பெண்கள். இந்த பொய்களை எல்லாம் மிக இரகசியாக கட்டிக் காப்பாற்றுவதில் பெண்கள் கில்லாடிகள்.

  க்ரஷ்!

  க்ரஷ்!

  பெரும்பாலும் க்ரஷ் என்ற வார்த்தை ஆண்கள் வாயில் இருந்து தான் வரும். காதலை மட்டுமல்ல, தங்களுக்கு ஒரு ஆண் மீது க்ரஷ் இருந்தாலுமே கூட அதை பெண்கள் வெளியே சொல்வதில்லை. எனக்கு உன்மேல க்ரஷ் இருக்கு என்றால் அதை காதலாக எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சமும் இதற்கு காரணம். க்ரஷ் என்பது கானல் நீர் போல. அது கொஞ்ச நேரம் தான் நீடிக்கும். அது நிலையானது அல்ல.

  இதனாலேயே, தங்களுக்கு பிடித்திருந்தாலும் அந்த உணர்வை பெண்கள் வெளிப்படுத்தாமல் இரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள்.

  டைரி!

  டைரி!

  பெரும்பாலான பெண்களுக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கும். தினமும் எழுதாவிட்டாலும் கூட, தங்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தும் நிகழ்வுகளை சில பக்கங்களில் எழுதி அதை இரகசியமாக வைத்துக்கொள்வதை பெண்கள் காலம், காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

  கடவு சொல்!

  கடவு சொல்!

  இப்போது ஃபிங்கர் பிரிண்ட், ஃபேஸ் ஐடி லாக் வந்துவிட்டதால்... கடவு சொல் என்பது கற்கால மனிதர்கள் உபயோகப்படுத்தியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், எந்த ஒரு எச்சரிக்கையும் இன்றி... எழுத்து, குறியீடு, எண்கள் என அனைத்தையும் கலந்து ஒரு ஸ்ட்ராங்கான கடவு சொல் வைப்பதில் முற்காலத்தில் இருந்தே வல்லவர்கள் பெண்கள். பெண்களின் மொபைலை அன்லாக் செய்வது கொஞ்சம் கஷ்டம் தான்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  What is it that Most Indian Young Girls Do Secretly?

  From App Lock pics to Missed Waxing Session There are so many things indian young Women keeps Secret. and They Do not want to show to this society. and Check Out the full list here.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more