குழந்தைகளை ஆற்றில் மூழ்கடித்து கொன்ற தாய்! அதிர்ச்சியளிக்கும் காரணம்

Posted By:
Subscribe to Boldsky

காதல் கதைகள் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். காதல் அரும்பியதிலிருந்து திருமண பந்தத்தில் இணையும் வரை ஏராளமான போராட்டங்கள், உணர்வுகள், சந்திக்க நேரிடும். கடைசி நிமிடம் வரை ஓர் பரபரப்பு இருந்து கொண்டேயிருக்கும். தூரத்தில் நின்று கொண்டு என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் அந்த வாழ்க்கையை நேரடியாக களத்திலிருந்து சந்திப்பவர்களுக்கும், வாழ்பவர்களுக்குமே அதன் வீரியம் புரியக்கூடும்.

இந்தியாவில் நடைப்பெற்ற புராணக்கதைகளில் ஒன்று மகாபாரதம். பாண்டவர்கள் கௌரவர்களை வீழ்த்தினார்கள்,கிருஷ்ணரின் கீதை உபதேசம் என்று ஆங்காங்கே படித்திருப்போம் அல்லது தெரிந்து கொண்டிருப்போம். இதைத் தாண்டியும் மஹாபாரதத்தில் ஏராளமான கதைகள் ஒளிந்திருக்கின்றன.

Surprising Love stories from Mahabharata

Image Courtesy

அவற்றில் தற்போது காதல் கதைகள், ஆம் மஹாபாரதத்தில் இடம் பெற்று நாம் கவனிக்க மறந்த சில காதல் கதைகள் உங்களுக்காக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராதா கிருஷ்ணர் :

ராதா கிருஷ்ணர் :

எங்கும் கிருஷ்ணரை வணங்கும் போது உடன் ராதா இருப்பாள். ராதா கிருஷ்ணர் என்றே அழைக்கப்படுவதும் உண்டு என்ன தான் சேர்த்து வணங்கினாலும், கிருஷ்ணரின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவாரக இருந்தாலும் ராதாவை திருமணம் செய்து கொள்ளாது ருக்மணியைத் தான் திருமணம் செய்திருக்கிறார் கிருஷ்ணர்.

வேதங்களிலும் ராதவின் பெயர் அதாவது கிருஷ்ணருடன் இணைத்து பேசப்படவில்லை.அவர் கோபியர்களில் ஒருத்தி என்றதோடு நின்று விட்டது. அதில் ருக்மணி தான் கிருஷ்ணரின் எட்டு மனைவிகளில் மிகவும் ப்ரியமானவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது

Image Courtesy

அவதாரம் :

அவதாரம் :

ருக்மணியின் மேல் காதலில் விழுந்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கிருஷ்ணரும் ருக்மணியும் திருமணம் செய்து கொண்டாரக்ள். ஏனென்றால் பெருமாளின் அவதாரமாக கிருஷ்ணர் பிறந்த அதே நேரத்தில் லக்‌ஷ்மியின் அவதாரமாக ருக்மணி பிறந்திருக்கிறார்.

Image Courtesy

அர்ஜுனன் மற்றும் உலுப்பி :

அர்ஜுனன் மற்றும் உலுப்பி :

உலுப்பி என்பவர் நாக தேவதை. அர்ஜுனருக்கு இருக்கிற நான்கு மனைவிகளில் உலுப்பி இரண்டாவது. உலுப்பிக்கு அர்ஜுனனின் மேல் காதல் மேலோங்கியது. தன் தீவிர காதலினால் அர்ஜுனனைக் கடத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும் படியும் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என்றும் சொல்லி அர்ஜூனையே கரம் பிடித்திருக்கிறார் உலுப்பி.

இவர்களுக்கு இரவன் என்ற மகனும் உண்டு. அர்ஜூனன் கேட்டு கொண்டதற்கு இணங்க அர்ஜுனனுக்கு உலுப்பி ஒரு வரமும் கொடுத்திருக்கிறாள். அதாவது தண்ணீரில் வாழக்கூடிய அனைத்து விலங்குகளும் அர்ஜுனனுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் அதோடு அர்ஜூனன் தண்ணீருக்கு அடியில் பார்வையில் படாமல் இருப்பார் என்ற வரம் அர்ஜூனனுக்கு கொடுத்தாள் உலுப்பி.

கங்கா சாந்தனு :

கங்கா சாந்தனு :

அஸ்தினாபுரத்தின் அரசர் சாந்தனு கங்கரை கரையோரத்தில் வெள்ளைப்புடவை அணிந்து நீளமான கூந்தலுடன் நடந்து சென்ற ஒரு பெண்ணைப் பார்த்து மனதை பறிகொடுத்தார். அவளிடம் சென்று தன் காதலைச் சொல்ல, அவளோ காதலை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இதற்கு சம்மதிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு கண்டிசன் போட்டிருக்கிறாள்.

அதன்படி அந்தப் பெண் செய்கிற எந்த செயலுக்கும் கேள்வி எழுப்பக்கூடாது என்பதே. சாந்தனுவும் சம்மதிக்க இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடித்து பிறந்த முதல் குழந்தையை ஆற்றில் மூழ்கடித்து கொன்றாள். அடுத்தடுத்து ஏழு குழந்தைகள் பிறந்தது அனைத்தையும் அப்படியே கொன்றாள். தான் செய்து கொடுத்த சத்தியத்தினாள் அமைதி காத்த சாத்துனுவாள் எதிர்த்து கேள்வி கேட்க கூட முடியவில்லை ஏன் என்ன காரணம் என்று கூட கேட்க முடியவில்லை.

Image Courtesy

நான் போகிறேன் :

நான் போகிறேன் :

எட்டாவது முறையாக கங்கா கர்ப்பமானாள். குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை கொல்வதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றாள், அப்போது தாங்க முடியாத சாந்தணு கங்காவை தடுத்து நிறுத்தினான், ஏற்கனவே நமது ஏழு குழந்தைகளை கொன்றுவிட்டாய் தற்போது நமக்கு பிறந்திருக்கும் இந்த எட்டாவது குழந்தையையும் கொல்லப்பார்க்கிறாய் ஏன் இப்படிச் செய்கிறாய் காரணத்தைச் சொல்.... என்று கேட்டுவிட்டார்.

தனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி கேள்வி கேட்டதினால் இனி உன்னுடன் வாழ மாட்டேன் உரிய பருவத்தில் குழந்தை உன்னிடம் வந்து சேரும் என்று சொல்லி குழந்தையுடன் மறைந்துவிட்டாள் கங்கா. அதன் பின்னர் பதினாறு ஆண்டுகள் கழித்து தேவ்ரத் என்ற சாந்தனுவின் எட்டாவது குழந்தை வந்து சேர்ந்தது. அந்த குழந்தை தான் பீஷ்மர்.

Image Courtesy

ஹிடிம்பி பீமா :

ஹிடிம்பி பீமா :

லக்‌ஷ்கிரகாவிலிருந்து தப்பித்த பாண்டவர்கள் காட்டில் தஞ்சமடைந்தனர். காட்டில் பல மைல் தூரம் நடந்து வந்த களைப்பில் எல்லாரும் தூங்கி விட்டிருந்தனர் ஆனால் பீமன் மட்டும் தூங்காமல் முழித்துக் கொண்டிருந்தான்.

அதே காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ராட்சஷி தான் ஹிடிம்பி இவள் தன் சகோதரன் ஹிடிம்பாவுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். இவர்கள் மனித மாமிசத்தை சாப்பிடக்கூடியவர்கள். காட்டில் இருந்த ஹிடிம்பாவுக்கு பாண்டவர்களின் வாசனை துளைத்தெடுத்தது.

Image Courtesy

கவர்ந்து வா :

கவர்ந்து வா :

உடனே ஹிடிம்பா தன் சகோதரியை அனுப்பி அங்கேயிருக்கும் பீமனை கவர்ந்து வா நாம் பங்கிட்டுச் சாப்பிடுவோம் என்று அனுப்பி வைத்தான். ஹிடிம்பியும் கவர்ந்து வரச் சென்றாள், ஆனால் பீமனைப் பார்த்ததும் ஹிடிம்பிக்கு காதல் வந்துவிட்டிருந்தது. வெட்கத்துடன் அருகில் சென்று தான் எதற்காக இங்கே வந்தேன் என்ற உண்மைக் காரணத்தைச் சொல்லி தன் தவறை ஒப்புக் கொண்டாள் அதோடு தான் விரும்புவதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கேட்டாள்.

மறுத்த பீமன், தன்னை சாப்பிட வேண்டும் என்று நினைத்த ஹிடிம்பாவை சண்டையிட்டு கொன்றான். ஹிடிம்பியையும் கொல்லத் துணிந்த போது யுதிஸ்டிரர் அதனை தடுத்து விடுகிறார்.

Image Courtesy

திருமணம் செய்து கொள் :

திருமணம் செய்து கொள் :

இவ்வளவு நடந்த பிறகும் ஹிடிம்பிக்கு பீமனின் மேல் உள்ள காதல் குறையவே இல்லை. நேராக குந்தி தேவியிடம் சென்று கெஞ்சினாள் பீமானை தான் உளமாற நேசிப்பதாகவும், பீமன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் கெஞ்சி அழுதாள்.

பின்னர் குந்தி தேவி பீமனை சமாதானம் செய்து ஹிடிம்பியை திருமணம் செய்து கொள்ள சொன்னார். பீமனும் திருமணத்திற்கு சம்மதித்தான் ஆனால் ஒரு கண்டிஷனுடன் தான் திருமணத்திற்கு சம்ம

Image Courtesy

முதல் குழந்தை :

முதல் குழந்தை :

நான் ஹிடிம்பியை திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் எங்களுக்கு முதல் குழந்தை பிறந்ததும் நான் உன்னை விட்டு விலகி விடுவேன் என்று சொன்னான் பீமன். ஹிடிம்பியும் அதற்கு சம்மதித்தாள். ஒரு வருடம் சேர்ந்து வாழ்ந்திருந்த இவர்களுக்கு முதல் குழந்தையாக கடோத்கஜா பிறந்திருக்கிறான். திருமணத்திற்கு முன்னர் சொன்னது போலவே முதல் குழந்தை பிறந்ததும் பீமன் ஹிடிம்பியை விட்டு விலகினான்.

திரௌபதி :

திரௌபதி :

இது எல்லாருக்கும் தெரிந்த கதை தான். பல இடங்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள். திரௌபதி பாஞ்சாலி என்று வர்ணிக்கப்படுபவள் அதற்கு காரணம், அவள் பஞ்ச பாண்டவர்களின் மனைவியானது தான். அர்ஜூனன் சுயம்வரத்தில் வென்று பாஞ்சாலியை திருமணம் செய்து கொண்டு வந்தான்.

சுயம்வரத்தில் வென்று அம்மா குந்தி தேவியிடம் சொல்ல ஆறு பேரும் வீட்டிற்கு வருகிறார்கள். அம்மா... இங்கே பார் நான் போட்டியில் வென்ற பொருள் என்று சொல்ல குந்தி தேவி திரும்பி பார்க்காமலேயே அந்த பரிசை ஐந்து பேரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.

Image Courtesy

தாய்ச்சொல்லை தட்டாதே :

தாய்ச்சொல்லை தட்டாதே :

அம்மாவின் கட்டளையை மீற முடியாமல் திரௌபதி ஐந்து பேருக்குமே மனைவியானாள். பாஞ்சலி ஐந்து பேருக்கும் தலா ஒரு குழந்தையை பெற்றுக் கொடுத்தாள். இந்த ஐவரில் தன்னை சுயம்வரத்தில் வென்ற அர்ஜுனன் மீது தன திரௌபதிக்கு காதல் அதிகம்.

ஆனால் அர்ஜுனனோ சுபத்ராவை விரும்பிக் கொண்டிருந்தான். இந்நிலையில் திரௌபதிக்கு அப்போது ஆறுதலாக இருந்தது யுதிஸ்டிரர் தான். பீமனும் திரௌபதிக்கு அன்பு செலுத்தினான்.

Image Courtesy

அர்ஜுனன் சுபத்ரா :

அர்ஜுனன் சுபத்ரா :

கிருஷ்ணரின் சகோதரி சுபத்ரா. துரியோதனனிடமிருந்து காப்பாற்ற சுபத்ராவை கடத்திச் சென்றான். அப்போது சுபத்ராவின் அழகில் மயங்கிய அர்ஜுனன் சுபத்ராவின் மேல் காதல் அரும்பியது. சுபத்ராவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரகசியமாக விரும்பினான், ஆனால் அதனை வெளிப்படுத்த வில்லை. கிருஷ்ணன் அதனை உணர்ந்து அர்ஜுனனுக்கும் சுபத்ராவுக்கும் திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் அபிமன்யு.

Image Courtesy

காந்தாரி திரிருதுராஸ்டிரர் :

காந்தாரி திரிருதுராஸ்டிரர் :

பெண்களுக்கு எல்லாம் பதிவிரதை என்பதன் எடுத்துக்காட்டாக விளங்கியவள் காந்தாரி. திரிருதுராஸ்டிரர் அஸ்தினாபுரத்தின் மகாராஜா. இவருக்கு பார்வையில்லை, தன் கணவர் பார்க்க முடியாத இந்த உலகத்தை இனி தானும் பார்க்க மாட்டேன் என்று சொல்லி கண்களை கட்டிக் கொண்டாள். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கண்களைக் கட்டிக் கொண்டே தான் வாழ்ந்தாள். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் கௌரவர்களான 100 சகோதரர்கள்.

பரசுராமர் சத்யவதி :

பரசுராமர் சத்யவதி :

பரசுராமர் ஒரு மகரிஷி. ஒரு முறை சத்யவதி பரசுராமருடன் யமுனை நதியில் படகில் பயணம் மேற்கொண்ட போது , தன்னோடு உறவு கொள்ளுமாறு அழைத்திருக்கிறார். மீன் மணம் வீசும் ஒரு பெண்ணை பிராமணர் விரும்பக்கூடாது அல்லவா என்றாள்.

ஆனால் பரசுராமர் விடுவதாய் இல்லை. ஒரு வழியாக சம்மதித்த சத்யவதி படகு கரையை அடையும் வரை காத்திருக்கச் சொல்லி விட்டு தன்னோடு உறவு கொள்ள வேண்டுமானால் மூன்று விதிமுறைகளை விதித்தா

மூன்று விதிகள் :

மூன்று விதிகள் :

முதலில் தன்னிடமுள்ள மீன் வாடை பரிசுத்தமான வாடையாக மாறிட வேண்டும். இரண்டாவது தாங்கள் இருவரும் உறவு கொள்வதை யாரும் பார்க்கக்கூடாது. மூன்றாவது, பரசுராமரால் தனக்கு குழந்தை பிறந்தாலும் தனக்கு கன்னித்தன்மை போகக்கூடாது.

மூன்றுக்கும் சம்மதித்தார் பரசுராமர். இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் வியாசர் மஹாபாரதத்தை எழுதி

Image Courtesy

அர்ஜுனன் சித்ரங்கதா :

அர்ஜுனன் சித்ரங்கதா :

மணிப்பூரின் இளவரசி சித்ரங்கதா. காவேரி நதிக்கரையில் அர்ஜுனன் சித்ரங்கதாவை சந்திக்கிறார். அழகில் மயங்கி காதலில் விழுந்த அர்ஜுனன். சித்ரங்கதாவின் தந்தையிடம் மகளை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்கிறார்.

அதற்கு அரசர் சித்ரவாஹனா, உங்களுக்கு பிறக்கும் குழந்தை இங்கே மணிப்பூரிலேயே வளர வேண்டும். இந்த அரியாசனத்தை பிடிக்க வேண்டும் என்கிறார். அர்ஜுனனும் சம்மதிக்கிறார்.

Image Courtesy

அப்பாவை வென்ற மகன் :

அப்பாவை வென்ற மகன் :

அர்ஜுனனுக்கும் சித்ரங்கதாவுக்கும் திருமணம் நடக்கிறது. இவர்களுக்கு பப்ருவாஹனா என்ற மகன் பிறக்கிறான். திருமணத்திற்கு முன்னர் சொன்ன விதிமுறையின் படி மனைவி மற்றும் குழந்தையை விட்டு விட்டு தன் சகோதரர்களுடன் இந்திரபிரஸ்தத்தில் தங்கியிருக்கிறான்.

பப்ருவாஹனா வளர்ந்து மணிப்பூரின் அரசனாக அரியாசனத்தில் அமர்கிறான். தந்தையையே போரில் தோற்கடித்தார் மகன்.

சத்யவதி சாந்தனு :

சத்யவதி சாந்தனு :

சாந்தனு மகாராஜா காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது ரம்மியமான மஞ்சள் வாசனை மூக்கை துளைத்தது, அந்த வாசனை வந்த இடத்தை நோக்கி பின் தொடர்ந்து செல்ல அங்கே சத்யவதி இருந்தாள்.படகு ஓட்டிக் கொண்டிருந்த அவளிடம் அக்கறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி ஏறி உட்கார்ந்து கொண்டார் சாந்தனு, அக்கறையை நெருங்கியதும், மீண்டும் ஏறிய கரையிலேயே கொண்டு போய் விடுமாறு சொல்லியிருக்கிறார்.

இப்படியே பல நாட்கள் தொடர்ந்திருக்கிறது, ஒரு கட்டத்தில் சத்யவதியை தீவிரமாக நேசித்த சாந்தனு திருமணம் செய்து கொள்ள விரும்பி சத்யவதியின் தந்தையிடம் பேசியிருக்கிறார்.

எந்த மகனுக்கு அரியாசனம் :

எந்த மகனுக்கு அரியாசனம் :

சாந்தனுவுக்கு ஏற்கனவே கங்காவின் மூலம் ஒரு மகன் இருப்பதை அறிந்திருந்த சத்யவதியின் தந்தை தன் பேரன் தான் அரியாசனத்தில் அமர வேண்டும் அதற்கு சம்மதம் என்றால் திருமணத்திற்கு சம்மதம் என்றார். ஆனால் இதற்கு சாந்தனு ஒப்புக் கொள்ளவில்லை.

இதனால் மனம் தளர்ந்த சாந்தனு தன் அரசாட்சியை விட்டு வெளியேறினார். இந்த காலத்தில் சாந்தனுவுக்கும் கங்காவுக்கும் பிறந்த எட்டாவது குழந்தையான பீஷ்மர் சத்யவதியின் தந்தையிடம் பேசி தான் இந்த அரியானத்திற்கு போட்டியிட மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்து தந்தையின் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறான்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Love stories from Mahabharata

Surprising Love stories from Mahabharata
Subscribe Newsletter