Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
9 வருட காதலில், ஒரு நாய் அளவிற்கு கூட அவள் என்னை மதிக்கவில்லை - My Story #177
9 வருட காதலில், ஒரு நாய் அளவிற்கு கூட அவள் என்னை மதிக்கவில்லை - My Story #177
எனக்கு இப்போது 26 வயதாகிறது. நாங்கள் இருவரும் காதலிக்க துவங்கி 9 வருடங்கள் ஆகிறது. சரியாக கூற வேண்டும் என்றால், கடந்த 2009ம் ஆண்டு... நானும் அவளும் 11ம் வகுப்பு பயின்று கொண்டிருந்தோம். நானும் அவளும் ஒரே பள்ளி என்ற போதிலும், அவளுடன் நான் நெருக்கமாக பழக உதவியாக இருந்தது நாங்கள் சென்ற டியூஷன் தான். முதல் பேட்ச் மாணவர்கள் நேரம் முடிவதற்கு 30 நிமிடங்கள் முன்னரே டியூஷன் சென்று விடுவோம். அங்கே பேசி பழகிய போதுதான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது.
அன்றைய காதல் கதைகள் யுகங்கள் கடந்தாலும் காலாவதியாகாமல் வரலாற்றில் நிலைத்து நிற்கின்றன. ஆனால், இன்றைய காதல்.. மலரும் போதே, பேகேஜ் உணவு போல காலாவதி தேதியுடன் தான் பயணிக்கிறது. எங்கள் காதல் அப்படியானதாக இருக்காது என்றே நான் கருதினேன். அவளும் மூச்சுக்கு முன்னூறு முறை ஐ லவ் யூ, நான் எப்பவும் உன்னைவிட்டு போகமாட்டேன். நீ தான் உயிர் என்று கூறிக் கொண்டே இருந்தாள்.

மகிழ்ச்சியான தருணம்...
11, 12வது படித்துக் கொண்டிருந்த போது எங்கள் இருவருக்குள்ளும் ஓர் அற்புதமான உறவு இருந்தது. நாங்கள் அந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு நாளையும், ரசித்து, ரசித்து வாழ்ந்து வந்தோம். மகிழ்ச்சி என்றால் என்ன, அதன் உச்ச வடிவம் எப்படியாக இருக்கும் என்று நான் உணர்ந்தது அப்போது தான். ஆனால், வருடங்கள் ஒவ்வொன்றாக கூட, கூட அவள் என்னைவிட்டு விலகி செல்வாள் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

போரிங்!
நாங்கள் கல்லூரி வரை ஒரே நகரத்தில் தான் பயின்று வந்தோம். அப்போது வரை எங்கள் காதலுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அவளுக்கும் நான் ஒரு போரிங் நபராக இருக்கவில்லை. ஆறு வருட காதல் உறவுக்கு பிறகு தான் அவளுக்கு நான் போரடிக்க துவங்கிவிட்டேன் போல. அப்போதே அவள் கூறியிருக்கலாம். பிறகும் தொடர்ந்து மூன்றாண்டுகள் நான் தான் அவளுக்கு எல்லாமே என்று கூறியது தான் ஏன் என்று தெரியவில்லை.

முட்டாள்!
அவள் ஒவ்வொரு முறை என்னிடம் ஐ லவ் யூ என்று சொல்லியது எல்லாம் வெறும் வார்த்தைகள். அதில் துளியும் உணரவில்லை. நான் தான் முட்டாள்தனமாக அவள் என்னை நேசிக்கிறாள் என்று அவளுக்காக உருகிக் கொண்டிருந்தேன். நான் கல்லூரி படித்து முடித்த பிறகு வேலைக்கு சென்று விட்டேன். ஆனால், அவள் மேல்படிப்பு படிக்க போவதாக கூறினாள்.
அவள் வீட்டு சூழலில், உடனே வேலைக்கு போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆகவே இடையே ஒருவருட காலம் அவள் ஓய்வெடுத்தாள்.

எம்.எஸ்!
பிறகு, நான் வேலை செய்து வந்த நகரிலேயே அவள் எம்.எஸ் படிக்க கல்லூரியில் சேர்ந்தாள். நானும் என்னை பார்க்காமல் இருக்க முடியாது எனக்காக என்னுடன் நேரம் செலவழிக்க அதே நகரம் வந்தாள் என்று கருதி மீண்டும் ஏமார்ந்து போனான். அந்த காலக் கட்டத்தில் அவள் என்னை ஏமாற்றவெல்லம் இல்லை. ஒவ்வொரு வார இறுதியிலும் ஷாப்பிங், சினிமா, பீச் என்று எங்கள் நாட்கள் நன்கு சென்றுக் கொண்டிருந்தது.

வேலை!
இரண்டாண்டு காலம் எம்.எஸ் படித்து முடித்தாள். பெங்களூரில் அவளுக்கு வேலை கிடைத்தது. அப்போது தான் முதல் முறையாக அவள், நானும் இல்லாது, அவளது அப்பா, அம்மாவும் இல்லாது தனியாக ஒரு வாழ்க்கையை துவக்கினாள். அதுவும் வெறும் ஆறு மாதங்களுக்கு முன்னர். அதற்குள் அவளது மனம் வேறு உறவை தேடி அலைபாய துவங்கிவிட்டது.

ஒரு நாள்...
ஒரு நாள் நான் ஊரில் இருந்த போது என்னை காண வேண்டும் என்று அவசரமாக அழைத்தாள். இருவரும் நாங்கள் எப்போதும் செல்லும் கோவிலுக்கு சென்றோம். கோவிலுக்கு சென்று மீண்டும் வெளியே வரும் வரை அவள் எதுவுமே பேசவில்லை.
திடீரென அவளுக்குள் கோபம் வந்தது, நான் அவளை ஏமாற்றிவிட்டேன். அவள் மீது எனக்கு அக்கறை இல்லை. நான் அவளுக்கு அரவணைப்பாக இல்லை என்று அடுக்கடுக்காக குற்றம் சுமத்த துவங்கினாள். என்னை ஒரு நொடி கூட பேச அனுமதிக்கவில்லை. நான் பேசுவதையும் அவள் காது கொடுத்து கேட்கவில்லை.

காரணம் நான் அல்ல...
பிறகு தான் அறிந்துக் கொண்டேன்... அவள் கோபத்திற்கு காரணம் நானல்ல, அவளது புதிய காதலன் என்று. என்னைவிட்டு பிரிந்த வெறும் ஆறே மாதங்களில் அவளுக்கு வேறு ஒருவன் மீது காதல் வந்தது என்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
பிறகு எந்த ஒரு உணர்வில் என்னுடன் ஷாப்பிங், சினிமா மற்றும் பீச் போன்ற இடங்களுக்கு அவள் சுற்றினாள்? நாங்கள் இருவரும் அன்யோன்யமாக இருந்த தருணங்களில் அவள் எந்த எண்ணத்துடன் என்னுடன் இருந்தாள்? என்று எதுவும் எனக்கு விளங்கவில்லை.

காதலே இப்படி தான்!
இந்த நிகழ்வுக்கு பின் எனக்கு காதல் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. அவளும், நானும் பிரிந்து சில மாதங்களே ஆகிறது. என்னால் அவளை மறக்க முடியவில்லை. அவளுக்கு நான் போராக இருந்தாலும், அவளை நான் அப்படி ஒரு கண்ணோட்டத்தில் காணவே இல்லை. அவளை பெரிதும் நம்பி இருந்தேன். எனது எதிர்காலமே அவள் தான் என்று நினைத்து வந்தேன்.

நோகடித்தாள்!
என்னுடன் சண்டையிட்டு சென்றதில் இருந்து நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதில்லை. அவளது பிறந்த நாள் என்று இருப்புக் கொள்ளாமல், அவளுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன். நான் மெசேஜ் செய்த சிறிது நேரத்தில் அவளது புது காதலன் எனக்கு கால் செய்து, இப்படி எல்லாம் மெசேஜ் செய்யாதீங்க என்று கூறினான். சரி! என்று பதில் கூறி அழைப்பை கட் செய்துவிட்டேன்.

அவளே கூறியிருக்கலாம்...
நான் மெசேஜ் செய்தது பிடிக்கவில்லை என்றால் அவளே என்னிடம் நேரடியாக கூறி இருக்கலாம். எந்த மெசேஜ்க்கு ரிப்ளை மட்டுமே கூட செய்திருக்கலாம். ஆனால், இந்த சிறு விஷயத்திற்கு கூட அவனிடம் கூறி ஒரு முடிவு கொண்டு வருவதெல்லாம் மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஒரு நாய் அளவிற்கு கூட அவள் என்னை மதிக்கவில்லை என்பதை அன்றே நான் புரிந்துக் கொண்டேன்.
என்னால் அவளை மறக்க இயலாது. அவள் மீதான் என் காதல் வாழ்நாள் முழுக்க இருக்கும். பல நேரங்களில் என் வாழ்வில் துணையாக, உதவியாக என்னுடன் இருந்திருக்கிறாள். என்னை மறந்து இன்னொருவனுடன் செல்ல அவளுக்கு எப்படி மனது வந்தது என்று தான் இன்று வரை எனக்கு புரியவில்லை.



Click it and Unblock the Notifications











