நண்பனின் தங்கையுடன் உறவு வைத்துக் கொண்டேன் - இரகசிய டைரி #007

Posted By: Staff
Subscribe to Boldsky

கடந்த சில மாதங்களுக்கு முன் நான் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டேன். அந்த நிகழ்வுக்கு பிறகு மனதுக்குள் பெரும் பயம் சூழ்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணங்களும் மனதில் எழுகின்றன. நான் உலகில் யாரும் செய்யக் கூடாத பாவத்தை செய்துவிட்டேன். அதுவும், என் நெருங்கிய தோழனுக்கு.

ஆம்! நான் கடந்த சில மாதங்களுக்கு முன் உறவில் இருந்த பெண், என் நெருங்கிய தோழனின் சகோதரி. அவள் என்னைவிட இரண்டு வயது சிறியவள். என் நண்பன் வீட்டில் இல்லாத சமயத்தில் ஒருமுறை நாங்கள் இருவரும் உடலுறவில் இணைந்தோம். அவள் அப்போது ஒயின் பருகியிருந்தாள். அதன் விளைவாக, நாங்கள் இருவரும் செய்யக் கூடாத தவறுகளை எல்லாம் செய்துவிட்டோம்.

ஒரு சிறிய அணைப்பில் துவங்கிய அந்த தீப்பொறி, பிறகு காட்டுத்தீயாக மாறிவிட்டது. ஒருநொடியில் சல்லாபப்பட்டு என் வாழ்நாள் தோழனுக்கு பெரும் துரோகம் செய்துவிட்டேன். அவளது ஒத்துழைப்புடன் தான் எல்லாம் நடந்தது எனிலும், நான் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்க வேண்டும். அவள் சிறியவள். சரியான முதிர்ச்சி இல்லை. 25 வயதான நான் தான் அந்நிகழ்வு நடக்காமல் தடுத்திருகக் வேண்டும்.

பிரச்சனை என்னவெனில், எங்கள் இருவர் மத்தியில் காதல் எதுவும் இல்லை. ஆனால், ஏதோ ஒரு மாய சூழலில் தெரியாமல் இணைந்துவிட்டோம். நான் என் நண்பனை ஏமாற்றிவிட்டேன். நான் என்னையே வெறுக்கிறேன். நான் இப்போது என்ன செய்வது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோழரே!

தோழரே!

உங்கள் சூழல் புரிந்துக் கொள்ள இயல்கிறது. தெரியாமல் செய்த தவறை எண்ணி, நீங்கள் மிகவும் வருந்துகிறீர்கள். போதை கண்ணை மறைக்கும், உறவை அழிக்கும் என்பதை நீங்கள் கண்கூட அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சூழல், நீங்கள் கடந்து வரும் நிலைமை கனல் போல கொதித்துக் கொண்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது. ஆனால், இதற்காக தற்கொலை செய்துக் கொள்ள முயல்வது தவறு.

மனநல ஆலோசகர்!

மனநல ஆலோசகர்!

நீங்கள் இப்போது உடனே செய்ய வேண்டிய விஷயம், நல்ல மனநல ஆலோசகரை கண்டு, ஆலோசனை பெற வேண்டியது தான். உங்களுக்குள் பல எண்ணக் கலவை ஓடிக் கொண்டிருகிறது. அது உங்கள் அன்றாட வேலைகள் மட்டுமின்றி, உங்கள் எதிர்காலத்தில் தாக்கம் உண்டாக்குவதற்கும் நிறைய வாய்ப்புகள் உண்டு. முதலில், அந்த அழுத்தத்தில் இருந்து வெளியே வாருங்கள்.

ஒருமுறை!

ஒருமுறை!

தவறுகள் நடப்பது இயல்பு. ஆனால், செய்த தவறை, தவறு என்று அறியும், புரியும், ஏற்கும் மனம் வேண்டும். உங்களிடம் அந்த மனம் இருக்கிறது. நீங்கள் செய்தது தவறு என்பதை நீங்கள் முழு மனதாக உணர்ந்துள்ளீர்கள். எனவே, செய்ததை தவறு என்று அறிந்த நீங்கள். அதை மறக்கவும் வேண்டும்.

மனம் திருந்திய திருடன், தனது பழங்காலத்தை நினைத்துக் கொண்டே இருந்தால், நிகழ் காலத்தையும் சரியாக வாழ இயலாது. எதிர் காலத்தையும் சிறந்ததாக அமைத்துக் கொள்ள இயலாது.

உண்மை மறைக்க வேண்டாம்!

உண்மை மறைக்க வேண்டாம்!

உங்களுக்கும், உங்கள் தோழரின் சகோதரிக்கும் நடுவே ஒரே ஒருமுறை தான் தவறு நடந்துள்ளது என்று கூறுகிறீர்கள். இருவருக்குமே ஒருவர் மீது ஒருவர் காதல் இல்லை. ஒருவேளை, அவர் உங்களை திருமணம் செய்துக் கொள்ள கூறினால், தோழரிடம் உண்மையை மறைக்காமல், திருமணம் செய்துக் கொள்ள ஒப்புதல் கேளுங்கள். அடித்தால் சில அடிகள் வாங்கிக் கொள்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், உண்மையை மறைக்கக் வேண்டாம். இவை அனைத்தும், அவர் சகோதரி உங்களை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறார் எனும் பட்சத்தில் மட்டுமே.

தாக்கம்!

தாக்கம்!

எந்த ஒரு தவறையும் நாம் எத்தனை நாட்களுக்கு மறைக்கிறோமோ, உண்மை வெளிப்படும் போது அத்தனை தாக்கத்தை வெளிப்படுத்தும். ஒருவேளை, நீங்களே அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள விரும்பினாலும் கூட, அவரிடம் பேசி, தோழர் வீட்டில் இதுகுறித்து பேச்சினை துவக்கலாம். அதன் முன் உங்களது தோழரிடம் மட்டும் உண்மையை கூறிவிடுவது நல்லது.

பிரயாணம்!

பிரயாணம்!

ஒருவேளை உங்கள் இருவருக்குமே திருமணம் செய்துக் கொள்ளும் யோசனை இல்லை. அன்று நடந்தது சுயநினைவு இல்லாத போது நடந்த தவறு தான் எனில், பேசாமல் இதுக்குறித்து நினைத்துக் கொண்டிருப்பதை விட்டு, வேறு வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பிக்கலாம்.

குறிப்பாக, இங்கே நீங்கள் மட்டும் தான் மனம் வருந்துவதாக தெரிவித்திருக்கிறீர்கள். அந்த பெண்ணின் மனநிலை என்ன? அவர் எத்தகைய சூழலை கடந்து வருகிறார்? என்று நீங்கள் குறிப்பிடவில்லை.

ஒருவேளை, அவர் இதை வெளியுலகம் அறியாமல் இருக்க விரும்புகிறார் எனில், நீங்கள் கொஞ்ச காலம் வேறு ஊருக்கு சென்று வேறு ஒரு வாழ்க்கை வாழ முயற்சிக்கலாம்.

தினம், தினம்!

தினம், தினம்!

ஒருவேளை, நீங்கள் தினமும் அதே நண்பனை பார்த்துக் கொண்டிருப்பதால், அந்த நண்பனின் சகோதரியை சந்தித்து வருவதால் கூட இந்த நினைவுகளை மறக்க முடியாமல் போகலாம்.

எனவே, நீங்கள் வேலையில் பணியிடமாற்றம் பெற்று வேறு ஊருக்கு சென்று ஒருசில மாதம் அல்லது ஓரிரு வருடங்கள் தங்கி வாருங்கள். உங்கள் மனம் மேலும் பக்குவப்படும். உங்கள் மனதை ஆட்கொண்டிருக்கும் அந்த நினைவுகள் மெல்ல, மெல்ல காணாமல் போகும்.

தவறு!

தவறு!

தற்கொலை என்பது சட்டவிரோதமான செயலும் கூட. நம் உலகில் தவறு செய்யாத ஒருவனும் இல்லை. அடிப்பட்டு எழும் போது தான், ஒரு தவறை செய்யக் கூடாது என்ற ஞானோதயம் பிறக்கும்.

மேலும், நீங்கள் செய்த தவறை நூறு சதவிதம் மனதால் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். எனவே, மனதை பல எண்ண அலைகளுக்குள் சிக்கவிடாமல், கொஞ்சம் சாந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மன்னிப்பு!

மன்னிப்பு!

மற்றவர் செய்த தவறை மட்டுமல்ல, நீங்கள் செய்த தவறை நீங்களே முழுவதாக அறிந்தாலும் கூட, உங்களை நீங்களே மன்னித்துக் கொள்ளலாம். உங்கள் அனுபவத்தில்... தவறு இருவர் மீதும் இருக்கிறது. நீங்கள் மட்டுமே அந்த பெண்ணை வற்புறுத்தி உறவுக் கொள்ளவில்லை. அவரது போதையும், உங்களது சல்லாபமும் தான் நடந்த தவறுக்கு காரணம். அதை அந்த பெண்ணும் அறிகிறார், மறைக்கவே முனைகிறார் எனும் பட்சத்தில். உங்களுக்கு இப்போது தேவையானது மன அமைதி மட்டுமே. உங்கள் மனம் எதை கொண்டால் மன அமைதி பெறுமோ, அதை தேடி செல்லுங்கள்.

தற்கொலை எண்ணத்தை முதலில் கைவிடுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret Confession: I Had Intercourse with My Friends Sister!

Secret Confession: I committed relationship with a woman. The girl i had sex was sister of my best buddie. I unable to wrap my head around this. So, I feel suicidal and difficult to face the world for the sin I committed.