For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகத்'துகள் யாஷிகா'க்கள் மீது காதல் வயப்பட காரணம் என்ன?

|

ஏற்கனவே பல ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் உறவில் இருந்து வரும் மகத். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபலம் அடைந்த யாஷிகா மீது காதல் வயப்பட்டது ஒரு பெரும் குற்றமாகவும், மனிதத்தன்மையற்ற செயலாகவும் காணப்படுகிறது. ஆம்! இது தவறு தான். இந்த ஏமாற்று வேலையை யாராக இருப்பினும் தவிர்க்க வேண்டும் தான்.

சில நாட்களுக்கு முன் கமலின் முன்னிலையில் தனக்கு மகத் மீது காதல் ஏற்பட்டது உண்மை தான் என்று யாஷிகா வாக்குமூலம் அளித்தார். அதே, போல இன்று வெளியான நிகழ்ச்சியின் விளம்பர கானொளியில் குற்றவாளி கூண்டில் நின்றுக் கொண்டிருக்கும் மகத், யாஷிகா கேட்கும் ஒரு கேள்விக்கு, நான் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்தாலும், உன் மீதும் காதல் வந்தது என்று வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.

மகத் மட்டுமின்றி, யாஷிகாவிற்கும் வெளியே வேறு ஒரு காதலர் இருக்கிறார் என்ற தகவல் பிக் பாஸ் வீட்டுக்குள் சில நாட்களுக்கு முன்னர் பேசப்பட்டது.

சரி! ஏற்கனவே கமிட்டான நபர்கள் அல்லது திருமணமான நபர்களுக்கு வேறொரு நபரின் மீது காதல் ஈர்ப்பு பிறக்க காரணம் என்ன? எதனால் இவர்கள் நிலையான உறவில் இருக்கும் போதிலும், வேறொரு நபருடன் உறவில் இணைய அல்லது சல்லாபப்பட்டு போகிறார்கள்...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிடைக்காத, காணாத ஒன்று

கிடைக்காத, காணாத ஒன்று

ஏற்கனவே நேர்மையான / உண்மையான உறவில் இருப்பவர் வேறொரு நபர் மீது ஆர்வம் அல்லது ஈர்ப்பு பிறக்க காரணம் என்ன?

அந்த நாள் வரை தான் நேசித்து வந்த நபரிடம் இருந்து கிடைக்காத / காணாத ஒன்று.. அல்லது தான் விரும்பி கேட்டும் நிறைவேறாத ஒன்று வேறொரு நபரிடம் காணப்படுகிறது எனில்., ஆண்கள் தடுமாற வாய்ப்புகள் உண்டு. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கூட. விகிதத்தில் பார்த்தால்... நம்ம ஊர் கலாச்சாரத்தில் ஆண்கள் கொஞ்சம் அதிகம் என்பதை ஒப்புக் கொள்ள தான் வேண்டும்.

அதுவாக...

அதுவாக...

ஒரு பொருள்... ஒரு நபரிடம் நீண்ட நாட்களாக வேண்டி, விரும்பி, கெஞ்சி கேட்கிறோம். ஆனால்,, அந்த நபர் அந்த பொருளை நமக்கு அளிக்க மறுக்கிறார்... அல்லது கொஞ்ச நாள் போகட்டும்... அல்லது நீ இன்னும் அதை பயன்படுத்த தயாரான நிலையில் என்று கூறி தட்டிக்கழித்து வருகிறார்... அந்த சமயத்தில்.. அதே பொருளை.. வேறொரு நபர் கேட்காமலேயே முன்வந்து அளிக்கும் பட்சத்தில்... அந்த நபர் மீது ஒரு ஆர்வம் பிறக்க வாய்ப்புகள் உண்டு. அந்த பொருள்... ஒரு பொருளாக இருக்கலாம்... உணர்வாக இருக்கலாம்... காதல் கூடலாக இருக்கலாம்...

பொதுவாகவே...

பொதுவாகவே...

உன்னாலே உன்னாலே படத்தில் ஒரு காட்சி வரும்... சென்னையில் பிரிந்த காதலர்கள்... வெளிநாட்டில் சந்தித்துக் கொள்வார்கள். அப்போது, மீண்டும் நாயகனை கவர நாயகி தன் தோற்றத்தை மாற்றிக் கொள்வார். அதற்கு கருவாக அதற்கு முந்திய காட்சி அமையும்... அதாவது காலை ஒருமுறை கூடிய பசுவுடன் கூடாது.

எனவே, அதன் தோற்றம் மற்றும், அதன் மீது வீடும் வாசனையை எல்லாம் மாற்றி மீண்டும் கூட செய்வோம் என்று கூறுவார்கள். இது ஆண்கள் சிலர் மத்தியிலும் காணப்படுகிறது. ஒரே மாதிரியான வாழ்க்கை உறவில் அவர்களுக்கு அலுப்பு ஏற்படும் போது , கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் வேறொரு நபர் மீது அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படலாம்.

நம்மில் சிலரே...

நம்மில் சிலரே...

ஒரு சிலர் அடிக்கடி மொபைல் மாற்றிக் கொண்டே இருப்பார்கள், சிலர் ஒரே காலனியை தொடர்ந்து அணிய மறுப்பார்கள். சிலருக்கு புதுபுது பைக், கார் ஊட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை வரும். இப்படியான ஒரு ஆசையின் உச்சக்கட்டம் தான்... பல்வேறு பெண்களுடன் காதல் உறவில் இணைய வேண்டும் என்ற ஈர்ப்பு பிறக்க ஆசை. இவர்களை காதல் மன்னர்கள் என்றும் கூறலாம், இச்சை உணர்வு அதிகம் உள்ளவர்கள் என்றும் குறிப்பிடலாம்.

ஈர்ப்புவிசை!

ஈர்ப்புவிசை!

ஒரு உறவு நீடித்திருக்க வேண்டும் என்றால், அந்த ஆண் - பெண் மத்தியிலான ஈர்ப்பு விசையில் விரிசல் விழுந்துவிட கூடாது.வெள்ளம் வரும் காலத்தில் அனைத்து பாலங்களும், அணைகளும் உடைந்துவிடுவது இல்லை. ஒருசில வலுவில்லாத பாலங்கள் தானே உடைகின்றன. எனவே, அதிக கவர்ச்சி, ஈர்ப்பு விசை கொண்ட வெள்ளங்கள் சிலவன வந்து போகலாம். ஆனால், நமது பாலம் வலிமையாக இருந்தால், யாராலும் அதை உடைக்க முடியாது. புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

அட்ஜஸ்ட்மெண்ட்!

அட்ஜஸ்ட்மெண்ட்!

அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் எதுவும் நிலைக்காது.. கொஞ்சம் வளைந்து, நெளிந்து விட்டுகொடுக்கவும் வேண்டும். கறாராக இருக்கும் பட்சத்தில் லாபத்தில் சேதாரம் ஏற்பட வைப்புகள் உண்டு. அதற்காக இழுத்த இழுப்புக்கு எல்லாம் போய்விட கூடாது. அதாகப்பட்டது நாய்க்கு சங்கலி கட்டவேண்டியது அவசியம் தான்.

ஆனால், அதை இரும்பு சங்கிலியாக இல்லமால், வலி ஏற்படாத கொஞ்சம் தூரம் வரை இழுத்துக் கொண்டு ஓடும் வகையிலான எலாஸ்டிக் பெல்ட் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அட்ஜஸ்ட்மென்ட் இருவரிடமும் இருக்க வேண்டும். அதாகப்பட்டது இருவர் கழுத்திலும் சங்கிலி நிச்சயம் இருக்க வேண்டும்.

மன எழுச்சி!

மன எழுச்சி!

ஆண்களிடம் எப்போதுமே எக்சைட்மெண்ட் கொஞ்சம் அதிகம். அபாயமனத்தை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அந்த வகையில் அவர்கள் உறவிலும் சில அபாய எல்லைகளை எட்டிப் பார்க்க முயல்வது உண்டு. அந்த எல்லையின் ஒரு முனை தான் கமிட்டட் அல்லது திருமண உறவில் இருக்கும் போது, வேறொரு பெண்ணுடன் உறவில் இணைய முயற்சி செய்வது.

சிலருக்கு எண்ணத்தின் அளவில் இந்த ஆசை இருக்கும், சிலர் பேச்சளவில் நிறுத்திக் கொள்வார்கள். சிலர் செயல்பாடுகள் வரை நீட்டித்து செல்வார்கள்.

மன்னித்துவிடுவார்கள்...

மன்னித்துவிடுவார்கள்...

பெரும்பாலான ஆண்கள் துணிந்து தவறு செய்வதற்கான காரணம், தன் துணை / காதலி / மனைவி தங்களை மன்னித்துவிடுவார்கள் என்று அவர்கள் முன்பே அறிந்திருப்பது தான்.

இவை எல்லாம் முன்ஜாமீன் வாங்கி வைத்துக் கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு சமமான காரியம். எனவே, பெண்கள் தான் கொஞ்சம் கூடுதல் ஸ்ட்ரிக்டாக இருந்து ஆண்களை கிடுக்குபிடி போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

இருபாலரும்!

இருபாலரும்!

சில சமயம் மகத்துகள் யாஷிகாக்கள் மீது ஈர்ப்பு கொள்வதுண்டு, சில சமயம் யாஷிகாக்கள் மகத்துகள் மீது ஈர்ப்பு கொள்வதுண்டு. மனிதன் ஒன்றும் வானில் இருந்து பறந்து வந்தவன் இல்லையே... இவனும் மிருக ஜாதிகளில் ஒன்று தானே.. ஆகவே, பலருடன் கூடுதலில் இவனுக்கும் ஆர்வம் மிகுதியாக இருக்க தான் செய்கிறது. நான்கு எழுத்து படித்துவிட்ட காரணத்தால் அதை பிறந்தமேனியில் பொதுவெளியில் செய்யாது.. இரகசியமாக கள்ளத்தனமாக செய்து வருகிறான்.

உறவில் இந்த தில்லுமுல்லு வேலைகளில் ஆண் - பெண் இருபாலரும் ஈடுபடுவதுண்டு. சிலரை சொல்லி திருத்தலாம்.. சிலர் பட்டு தான் திருந்துவார்கள். சொல் கேட்டு திருந்தினால் கௌரவமாக இருக்கும், பட்டு திருந்தினால்... கடைசி வரை உறுத்தல் உடனே வாழ்க்கை நடத்த வேண்டும்... அவ்வளவு தான் வித்தியாசம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Men Get Interest on Other Woman, When They are Already in a Relationship

Reasons Why Men Get Interest on Other Woman, When They are Already in a Relationship
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more