Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
கல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்? My Story #260
கல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்? My Story #260
அப்போது நான் முதலாமாண்டு படித்து வந்தேன். நானும் என்னை விட ஒரு வயது மூத்தவரான எனது சீனியரும் காதலித்து வந்தோம். அவன் என்னை திருமணம் செய்துக் கொள்வேன் என்று வாக்குறிதி அளித்த காரணத்தால் நாங்கள் அப்போது ஒருமுறை உடலுறவில் இணைந்தோம்.

ஆனால், அப்போது திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று கூறுவதற்கும், செக்ஸ் வைத்துக் கொள்வதற்கும் சம்மந்தமே இல்லை என்று நான் அறிந்திருக்கவில்லை. எங்கே நான் யாரிடமாவது நாங்கள் இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டதை கூறிவிடுவேனோ என்ற அச்சம் அவனுக்குள் இருந்தது.
ஆகையால், எங்களுக்குள் நடந்த அந்த சம்பவத்தை குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டான். காலம் கடந்தது, நான் யாரிடமும் அந்த சம்பவத்தை பற்றி கூறவில்லை.

அன்பானவன்!
அவன் மீது மிகவும் அன்பாகவும், அரவணைப்புடனும் தான் இருந்தான். ஆனால், ஒரு சமயத்தில் அவனுக்கு என் மீது அக்கறை, சந்தேகமாக மாற துவங்கியது. அக்கறை என்ற பெயரில் நான் யாரிடமும் பேசக் கூடாது என்று கூறினான்.
பிறகு, மெல்ல, மெல்ல நான் நண்பர்களிடம் பேசுவதற்கும் தடை விதிக்க துவங்கினான். இங்கே தான் அவன் மீது எனக்கு அச்சம் பிறக்க துவங்கியது.

அச்சம்!
அதெப்படி நண்பர்களுடன், தோழிகளுடன் பேசாமல் இருக்க முடியும், திடீரென அவர்களை விட்டு விலகுவது என்பது முடியாத செயல். அதே நேரத்தில், நான் என் நண்பர்களுடன் பேசுவதை அறிந்தால், அவர்களை ஏதாவது அடித்து துன்புறுத்துவானோ என்ற அச்சமும் என்னுள் அதிகமாக இருந்தது.
எனக்கு இத்தனை தடைகள் விதிக்கும் அவன் மட்டும் நிறைய பெண்களுடன் பேசி வந்தான். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

திசை மாறியது!
ஆனால், ஒரு கட்டத்தில் எனது நண்பர்கள் தான் என்னை அவனிடம் இருந்து காப்பாற்றினார்கள். அவன் என் வாழ்வில் என்ன செய்துக் கொண்டிருக்கிறான், அவனால் என் வாழ்க்கை எப்படி திசை மாறிக் கொண்டிருக்கிறது என்று நான் அறியவே இல்லை. நண்பர்கள் மூலமாக தான் அதை நான் உணர துவங்கினேன்.
அவன் முன்னிலையில் எனது கருத்துக்களை தைரியமாக பேச துவங்கினேன். அன்றில் இருந்து தான் அவனது உண்மை முகம் வெளிப்பட துவங்கியது. என்னுடம் சண்டையிட ஆரம்பித்தான்.

கொலை மிரட்டல்!
சண்டை என்பதை தாண்டி என்னை துன்புறுத்தினான் என்பதே உண்மை. சில சமயங்களில் என்னை அவன் அடித்ததும் உண்டு. ஒரு என்னை கட்டாயப்படுத்தி அவனது வீட்டுக்கு அழைத்தான்.
நானும் வேறு வழியின்றி அவன் வீட்டுக்கு சென்றேன். வீட்டுக்குள் சென்றதும், என்னை ஒரு படுக்கையில் தள்ளி, உடல் முழுதும் மதுபானத்தை ஊற்றி, எரித்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டினான். ஒருவழியாக, அன்று அவனிடம் இருந்து உயிருடன் தப்பித்து வந்தேன்.

தயக்கம்!
பிறகு சில முறை மீண்டும் அவனது வீட்டுக்கு அழைத்தான். ஆனால், எனக்கு அங்கே செல்ல தயக்கம் இருந்தது. வராவிட்டால் எனது பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று அச்சுறுத்தினான்.
இந்த விஷயங்களை அவர்களிடம் எடுத்து செல்லாமல் ஒரு தீர்வுக் காண வேண்டும் என்று கருதினேன். அவர்களுக்கு தெரிந்தால் நிச்சயம் என் படிப்பு பாதிக்கப்படும். எனவே, அவன் வீட்டுக்கு வர முடியாது... வெளியே எங்கேனும் சந்திக்கலாம் என்று கூறினேன்.

இடைஞ்சல்கள்!
ஒரு சாலை ஓரத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். அங்கே திடீரென என் கையில் இருந்து மொபைலை பிடுங்கி அதை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வெறி கொண்டு அடித்து உடைத்தான்.
அதன் பிறகு தொடர்ந்து ஒரு மாத காலம் என் வாழ்வில் பல இடைஞ்சல்கள் செய்தான். ஒரு கட்டத்தில் நண்பர்கள் மற்றும் சகோதரியிடம் அவனை பற்றி கூறி ஒரு தீர்வு காண விரும்பினேன்.

உதவி!
என் நண்பர்களும் சகோதரியும் தான் எனக்கு தைரியம் கொடுத்தனர். அவர்கள் மூலம் காவல் நிலையம் சென்று அவன் மீது புகார் அளித்தேன். புகார் அளித்த காரணத்தால் கோபம் கொண்டு எங்கள் வீட்டில் கல் எறிந்தான். புகாரை வாபஸ் வாங்கும் படி மிரட்டினான்.
ஆனால், அதை எல்லாம் எதிர்கொண்டேன். அம்மா எனக்கு நிறைய உதவியாக இருந்தார். அம்மா, நண்பர்கள், சகோதரி மட்டும் என்னுடன் இல்லை என்றால் நான் அவனிடம் இருந்து தப்பித்திருக்க இயலாது.

கெட்ட கனவு!
இதெல்லாம் நடந்து நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அதை ஒரு கெட்ட கனவாக தான் கருதுகிறேன். நான் அவனிடம் இருந்து விலகி வர நிறைய யோசித்ததற்கு காரணம், நானும் அவனும் உடலுறவில் இணைந்தது தான். அது ஒரு பெரும் தடையாக இருந்தது. அவன் என் எதிர்காலத்தில் அந்த விஷயத்தை வைத்துக் கொண்டு என் திருமண வாழ்வில் தொந்தரவு செய்வானோ என்று கருதி அச்சம் கொண்டேன்.

தவறு கூடாது!
இன்று, எனக்கான சரியான காதலை தேர்வு செய்துள்ளேன். அவன் எனது நெருங்கிய நண்பன். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் அவன் தான். என் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் அவன் தான்.
சில முறை நமது முதல் தேர்வை காட்டிலும், இரண்டாவது தேர்வு தான் சிறந்ததாக இருக்கும். ஆயினும், காதலில் முடிந்த வரை முதல் தேர்வில் தவறு செய்யாமல் தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications
