Latest Updates
-
இந்த 5 ராசிகளில் பிறந்தவர்களின் தன்னம்பிக்கை மலையை விட பெரிதாம் - இவங்க நினைச்சதை சாதிக்காம விடமாட்டாங்க -
10 வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி அருமையான புலாவ் செய்யுங்க - வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க -
உதட்டில் முத்தம் கொடுக்கும் போது கண்கள் ஏன் தானாக மூடுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு ரகசியம் இருக்கா? -
புதன் மிதுன ராசிக்குள் நுழைவதால் உருவாகும் பத்ர யோகம் இந்த 3 ராசிகளை ஜெயிக்கிற குதிரையாக மாத்தப்போகுதாம் -
இந்த 4 விஷயங்களை பின்பற்றுபவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆவார்களாம் - சாணக்கியர் சொல்லும் வாழ்க்கை ரகசியம் -
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்தும் நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
சமூகத்துக்கு எதுக்கு பயப்படுறீங்க? அது உங்களுக்கு ஒரு மண்ணும் செய்யாது - My Story #215
எக்ஸ் காதலி போல தோற்றமளித்த காரணத்தால், கொடுமை செய்தான் - My Story #215
நான் அந்த நிறுவனத்தில் சேர்ந்து ஒருசில மாதங்கள் இருக்கும். பிராஜக்ட் விஷமாக வேறொரு அணிக்கு இடமாற்றப்பட்டேன். அப்போது தான் அவனது அறிமுகம் எனக்கு கிடைத்தது. அந்த அணியில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த எனது புதிய தோழியும், அவனும் அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த நாட்களில் இருந்து நண்பர்கள். ஆகையால், அன்று இரவே, அவனது மொத்த பயோடேட்டா மற்றும் வரலாறு அறிந்துக் கொள்ள முடிந்தது.
அவன் ஏற்கனவே அதே நிறுவனத்தில் வேலை செய்துவந்த பெண்ணை உருக, உருக காதலித்து பிரிந்தவன். என் தொளிக்குமே கூட அவர்கள் காதல் என்ன காரணத்தால் பிரிந்தது என்று தெரியவில்லை. ஆனால், அவன் அந்த பெண் ஏமாற்றி சென்று விட்டால் என்று கூறி வருவதாகவும், அவனது தோழர்களும் அதையே தான் சொல்கிறார்கள் என்று தோழி கூறினாள்.

ஒரே இடம்!
நானும், அவனும் ஒரே கம்பெனி மட்டுமல்ல, தங்கியிருந்ததும் ஒரே இடம் தான். ஆகையால் பெரும்பாலும் தினமும் ஒரே பேருந்தில் தான் செல்வோம். பல முறை ஒன்றாக அமர்ந்து செல்லும் வாய்ப்புகள் அமைந்தன. நிறைய பேசி இருக்கிறோம், நிறைய பழகி இருக்கிறோம். எப்படியும், மாதம் ஒரு முறையாவது அவனது காதல் சோக கீதத்தை பாடிவிடுவான்.

வெளியிடங்கள்!
வார இறுதியில் ஊருக்கு செல்லவில்லை எனில், சென்னையை சுற்றி எங்காவது சுற்றிக் கொண்டிருப்போம். சிலமுறை அவனது நண்பர்கள், தோழிகளுடன் வெளியே சென்றுள்ளோம். என்னுடைய நண்பர்கள், தோழிகளுடனும் அவன் வெளியே வந்துள்ளான். எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவானது அந்த காலகட்டத்தில் தான். ஏறத்தாழ இப்படியாக எங்களுக்குள் துவங்கிய உறவு ஓராண்டு காலத்தை தாண்டிவிட்டது.

ஒரு நாள்!
அந்த வாரம் நான் ஊருக்கு போக வேண்டியிருந்தது. ஆனால், அலுவலக தோழமைகள் எல்லாம் சேர்ந்து ஒரு சிறிய ட்ரிப் ஏற்பாடு செய்திருந்த காரணத்தால். ஊருக்கு போவதை தவிர்த்தேன். எப்போதும் போல கிளம்பினோம். நாங்கள் சென்றது ஒரு ரிசார்ட். அனைவரும் அவரவருக்கு என்ன தேவையோ, அங்கே சென்று விளையாடவும், சிலர் குடிக்கவும் ஐக்கியம் ஆகிவிட்டனர்.

அமைதியாக...
கிட்டத்தட்ட மதியவேளை நெருங்கி கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவில் அனைவரும் சுற்றி உலாவிக் கொண்டிருந்தனர். நான் தனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், என்னருகே வந்து அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான். எப்போதும், ஏதாவது பேசிக் கொண்டே இருப்பவன், அன்றைய தினத்தில் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
என்ன ஆச்சுடா... ஏன் இன்னிக்கி ரொம்ப அமைதியா இருக்க? என்று கேட்டேன். அதற்கும் அவன் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான்.

பிரபோஸ்!
சிறிது நேரம் கழித்து, என்னிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்றான். நாம ஏற்கனவே தனியா தான் இருக்கோம். என்னன்னு சொல்லு. ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டதற்கு. உடனே என்னை காதலிப்பதாக கூறி பிரபோஸ் செய்தான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் ஏற்கனவே அவனது மொத்த வரலாறையும் அறிந்தவள். அதுப்போக, அவனே பலமுறை அதில் பல திருத்தங்கள் செய்து என்னிடம் ஒப்பித்துள்ளான்.

அப்பாவுக்கு கால்..
நான் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும் என்று கூறி நகர்ந்துவிட்டேன்.
நான் தங்கியிருந்த ஹாஸ்டல் அறைக்கு சென்றதும், முதலில் என் தோழியிடம் நடந்ததை கூறினேன். அவள் 50:50 உன் சாயிஸ் என்று கூறிவிட்டாள். பிறகு, அப்பாவுக்கு கால் செய்து, இப்படியாக என்னுடன் பணிபுரியும் ஆண் பிரபோஸ் செய்ததை கூறினேன். நாங்கள் இருவருமே ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும், இந்த காலக்கட்டத்தில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் திருமணம் செய்துக் கொள்வது சகஜமாக கருதிய அப்பா, சிறுது நேரம் யோசித்து ஓகே என்றார்.

கல்யாண ஏற்பாடுகள்!
நான் என் வீட்டில் சம்மதம் வாங்கியது போலவே, அவனும் தன் வீட்டில் சம்மதம் வாங்கினான். இரண்டு குடும்பமும் ஒன்றாக பேசி ஒரு முடிவு எடுத்தனர். ஜாதகம் பார்த்ததில், ஆறு மாதம் கழித்து கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்றனர். சரி, என்று இருவீட்டாரும் தலை அசைத்தனர். ஆனால், அதன் பின்னரே ஒரு நிகழ்வு ஒரு புயலை வீசியது.

எக்ஸ்!
நாங்கள் இருவரும் ஒருமுறை தனியாகள் மால் சென்றிருந்தோம். படம் பார்த்து முடித்து ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்த போது, அவனது எக்ஸ் காதலி அங்கே வந்திருந்தாள். அவளை பார்த்தவுடன் இவனுக்குள் ஏதோ மாற்றம். முகம் எல்லாம் வியர்த்து போனது. கோபம் கொண்டான். அவளிடம் எதுவும் பேசவில்லை. நாங்கள் இருவரும் கிளம்பி வந்துவிட்டோம்.

மறுநாளே!
அடுத்த நாளில் இருந்தே அவனது நடத்தையில் மாற்றங்கள் தென்பட்டன. எனக்கு கால் செய்து நான் அட்டன்ட் செய்யாவிட்டால், உடனே எனது அப்பா, அம்மாவுக்கு கால் செய்து அவர்களுடன் பேசுகிறேனா, இல்லை வேறு நபருடன் பேசிக் கொண்டிருக்கிறேனா? என்று சந்தேகிக்க துவங்கினான். அவனது சந்தேக புத்தி பல ரூபங்களில் வெளிப்பட்டன.
இதன் காரணத்தால் எங்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் காரணமாக ஒரு மாத காலம் பேசாமல் இருந்தேன். அவனது அழைப்புகள் எதையும் நான் ஏற்கவில்லை.

பேருந்தில்!
ஒரு நாள் பேருந்தில் என் அருகே வந்து அமர்ந்தான். ஏன் நான் அவனிடம் பேச மறுக்கிறேன் என்று கேட்டான். அதற்கான காரணம் உனக்கே தெரியும். உனது திடீர் சந்தேக புத்திதான் என்றேன். அதற்கு அவன் அளித்த பதில் என்னை அதிர வைத்தது.
"ஆமா, நீயும் அவள மாதிரி தான் இருக்க (பார்க்க). அவள மாதிரியே நீயும் என்ன ஏமாத்திட்டு போயிட்டா நான் என்ன பண்றது. நான் இன்னும் அவள மறக்கல. உன்னோட ரூபத்துல அவள பார்த்துட்டு தான் இருக்கேன்" என்று கூறினான்.

போதுமடா சாமி!
உடனே அப்பாவுக்கு கால் செய்து நடந்தவற்றை பற்றி கூறினேன். ஏறத்தாழ எங்கள் சுற்றத்தில் முக்கால்வாசி பேருக்கு இவன் தான் என்னை திருமணம் செய்துக் கொள்ள போகும் நபர் என்று தெரிந்தது. அம்மா சமூகத்தில் என்ன நினைப்பார்கள் என்று கருதினார், அப்பா தான் எனக்கு துணையாக இருந்தார்.
முதலில் அவனது பெற்றோர் காதுகளுக்கு இந்த செய்தியை கொண்டு சென்றோம். அவர்கள் அவனை மனம் மாற்றிவிடலாம் என்றனர். ஆனால், அப்பா மாப்பிளையை நாங்கள் மாற்றிக் கொள்கிறோம் என்று ஒரே பதிலாக கூறி, திருமணத்தை நிறுத்தினார்.

வெளிநாடு!
அதன் பிறகு, நான் வெளிநாட்டுக்கு சென்று விட்டேன். ஏறத்தாழ இது நடந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. சந்தேகம் என்ற பெயரில் அந்த ஓரிரு மாதம் அவன் எனக்கு விளைவித்த கொடுமைகள் சொல்லி மாளாது. எங்கே சென்றாலும், பின் தொடர்வதும், என் தொழிகளுடம் என் நடத்தை குறித்து விசாரிப்பது. நான் இரவு தூங்கிய பிறகு கால் செய்து செக் செய்வது என ஒரு வெறிப்பிடித்தவன் போல மாறிவிட்டான்.

மாற்றம்!
காதல், திருமணம் அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு அவமானத்துடன், அவமதிப்புடன், கொடுமைக்கு இணங்கி வாழ்வது அல்ல. எந்த கட்டமாக இருந்தாலும் சரி, நீங்கள் அது சரிப்பட்டு வராது என்று கருதினால், சமூகத்தை கண்டு அஞ்சாமல், அதிலிருந்து வெளிவாருங்கள்.



Click it and Unblock the Notifications