Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
மிலிட்டிரியில் இருப்பவர்கள் அன்பை பறிமாறிக்கொள்ள இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்!
இமோஜிக்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் இந்த காலத்தில் பல வண்ணங்களில் இருக்கிற ஹார்ட்டீன்கள் குறித்தும் அவற்றின் அர்த்தங்கள் குறித்தும் இங்கே பார்க்கலாம்
சமூக வலைதளத்தை இன்றைக்கு பலரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அதனைச் சுற்றியே மிகப்பெரிய சந்தையும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் சமூக வலைதளங்களை நோக்கி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இப்படி ஒருபக்கம் வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் தான் தான் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறும் மக்களைப் பற்றியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
சாதரணமாக சாட்டிங்கில் பேசும் போது சுருக்கமாகவும் வேகமாகவும் பதிலளிக்க ஏதுவா வார்த்தைகளை சுருக்கி, பயன்படுத்துவார்கள் அதோடு ஸ்மைலிக்கள் அதிகம் பயன்படுத்துவதுண்டு. ஸ்மைலிக்களை கூட எப்டியாவது தட்டுத்தடுமாறி கண்டுபிடித்துவிடலாம் ஆனால் இந்த ஹார்டீனை என்ன செய்வது?
அதுவும் நமக்காக என்றே நம்மை குழப்புவதற்கென்றே கலர் கலராகவேறு ஹார்டீன்களை இறக்கிவிட்டிருக்கிறார்கள். எல்லா ஹார்டீனுக்கும் ஒரே அர்த்தமா இல்ல கலருக்கு ஏத்தபடி மாறுதான்னு ஒண்ணும் தெர்லயேன்னு புலம்புபவர்களுக்காக இந்த கட்டுரை.

ப்ளூ :
ப்ளூ நிறத்திலான ஹார்டீன்கள் உங்களுக்கு வந்தால் அது அட்ராக்ஷனை குறிக்கிறது . நீங்கள் சொன்ன விஷயம், அல்லது செய்த விஷயம் அவர்களை ஈர்த்திருக்கிறது என்று அர்த்தம். அதே நேரத்தில் இது ஆழத்தையும் குறிக்கும் என்பதால் சிலர் உன் நிலைமையை புரிந்து கொண்டேன் என்பதற்கான சிம்பளாகவும் பயன்படுத்துவார்கள்.

டபுள் மீனிங் :
அதே நேரத்தில் இந்த நீள நிறத்தில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. செக்ஸுவல் வாட்டர் ஸ்போர்ட்ஸை குறிக்க நீள நிறத்தினை தான் பயன்படுத்துவார்கள். அதைத் தவிர உறவுநிலைக்கு முன்னதாக நடக்கிற பிடிஎஸ்எம் ஆக்டிவிடிக்கும் இதே வண்ணத்தை தான் கோடாக பயன்படுத்துகிறார்கள்.
அதனை பயன்படுத்தும் சூழல்,நபரைப் பொறுத்து இதன் அர்த்தங்கள் வேறுபடும் என்பதால் ஜாக்கிரதையாகவே இருக்கவும்.

பச்சை :
பச்சை நிற ஹார்ட்டீன் சுமுகமாக முடிந்துவிட்டது. இனி சண்டை வேண்டாம் போன்றவற்றை குறிக்க பயன்படுத்துகிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த விஷயத்தை இதோ விடு என்று சொல்லலாம். இயற்கையை நேசிப்பவர்கள், ஏதேனும் ஒன்றுடன் பிடிப்பு நிலையை தேடுபவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
அதே நேரத்தில் இது உங்களுடனான பொறாமை உணர்வு இருக்கிறது என்பதை வெளிகாட்டவும் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் :
தூய்மைக்கு இதனை பயன்படுத்துகிறார்கள். நான் தவறு செய்யவில்லை, என்னை நம்பு என்பதன் சுருக்கமாக அல்லது அதனை உணர்த்த மஞ்சள் நிறத்திலான ஹார்டீன் பயன்படுத்தப்படுகிறது. புதிய துவக்கம், உறவின் புதிய வருகை ஆகியவற்றை கொண்டாட அதனை உணர்த்த மஞ்சள் நிற ஹார்டீன் பயன்படுத்துகிறார்கள்.
அதைத் தவிர நம்முடைய சாட்டிங்கை இதோடு முடித்துக் கொள்ளலாம் என்பதை உணர்த்தவும் இந்த நிறத்தை பயன்படுத்துகிறார்கள். ஸ்நாப்சாட்டில் இந்த நிறம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

ஊதா :
ஊதா நிறத்திலும் ஹார்டீன்கள் இருக்கிறது. இதனை க்ளாமருக்கு பயன்படுத்துகிறார்கள். பல நாடுகளில், பல்வேறு கலாச்சாரங்களில் இந்த நிறத்தினை வெவ்வேறு வடிவங்களில் பின்பற்றுகிறார்கள்.அழகாக இருக்கிறது, ராயல் லுக் போன்றவற்றிற்கும் இதே வண்ணத்தை பயன்படுத்துகிறார்கள்.
என்னுடைய பெர்ஃபெக்ட் சாய்ஸ் நீ என்பதை குறிக்கவும், இந்த நிற ஹார்டீனை பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர மிலிட்டிரி மற்றும் ஆயுதம் தாங்கிய படையினர் தங்கள் காதலர்களிடம் பேசும் போது இந்த நிறத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.காதலையும் அதே நேரத்தில் மரியாதையையும், கடமையையும் குறிக்கும் என்பதால் இதனை பயன்படுத்துகிறீர்கள்.
உங்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது என்பதை குறிக்கவும் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது.

சிகப்பு :
உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் காதல் என்றால் ஹார்டீனைத் தான் பயன்படுத்துகிறார்கள். உண்மையான காதலுக்கு இதனை பயன்படுத்துகிறார்கள். நட்பு,ரொமேண்டிக்,அளவிடமுடியாத காதல் என்பதை குறிக்க இந்த சிகப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது.
காதலர்கள் மட்டுமல்லாது நெருங்கிய உறவுகள்,நட்பு மத்தியிலும் இது அன்பை,பாசத்தை, ஆதரவை குறிக்கும் விதமாக பயன்படுத்தப்படுகிறது.

நட்சத்திரம் :
ஹார்டீனிலேயே இரண்டு நட்சத்திரங்கள் மின்னுவது போல ஒரு ஹார்ட்டீன் இருக்கும். இந்த ஹார்டீன் பிங்க் நிறத்தில் இருக்கும். இதற்கு அர்த்தம் கவர்சியை குறிக்கிறது. நன்றி சொல்வதற்கும், பதிலுரைக்கும் போதும் இந்த ஹார்ட்டீன் பயன்படுத்தப்படுகிறது.

ட்ரிப்பில் ஹார்ட் :
இது பாசிட்டிவிட்டியை குறிக்கிறது. அழகு, தன்னம்பிக்கையை இது குறிக்கிறது. வாழ்த்துக்களைச் சொல்ல, கொண்டாட இது பயன்படுத்தப்படுகிறது. உற்சாகமாக சாட்டினை நிறைவு செய்ய, உங்களுடனான இந்த உரையாடல் மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது என்பதை உணர்த்தவும் இந்த ஹார்டீன் பயன்படுத்துகிறார்கள்.

என்வலப் ஹார்ட் :
காலங்கள் எவ்வளவு வேகமாக முன்னேறிச் சென்றாலும் பழசை மறக்காமல் இருக்கிறவர்கள் பயன்படுத்தும் இமோஜி இது. காதல் கடிதத்தை இது குறிக்கிறது. ஓர் உண்மையை சொல்லப்போகிறேன், மனம் விட்டு உங்களுடன் பேச வேண்டும் என்பதை குறிக்க இது பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர உங்களது விருப்பத்தை தெரிவிக்கவும் இது பயன்படும்.
பெரும்பாலும் இது டேட்டிங் ஆப்ஸ்களில் நிறைய பயன்படுத்துகிறார்கள்.இதைத் தவிர ஹார்ட்டினும் அதனைச் சுற்றி மஞ்சள் புள்ளி, குட்டி குட்டி ஹார்ட்டீன்கள் சேர்த்து ஓர் வட்டம் ஆகியவை வாட்சப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவை உன்னைக் கொண்டாடுகிறேன் உன்னுடனான இந்த நேரத்தை கொண்டாட்டமாக கருதுகிறேன் ஆகியவற்றை சொல்ல இந்த ஹார்டீன்களை பயன்படுத்துகிறார்கள்.



Click it and Unblock the Notifications
