Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இந்திய நடிகர், நடிகைகளின் முதல் காதல் அனுபவங்கள் - டாப் ஸ்டார்ஸ் சீக்ரெட் லவ்!
பிரபலமாவதற்கு முன் உங்க அபிமான நடிகர், நடிகை யாரை காதலித்துக் கொண்டிருந்தார் தெரியுமா?
காதல், கீதல் எல்லாம் பிரபலங்கள் வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா... பெரும்பாலும் நமக்கு பரிச்சயம் ஆன நடிகர், நடிகைகள் அவர்கள் உடன் நடித்தவர், இயக்குனர் போன்றவர்களுடன் காதல் உறவில் இருந்து ப்ரேக்-அப் ஆனதை நாம் அறிந்திருப்போம்.

ஆனால், அவர்கள் திரை துறையில் பிரபலம் அடைவதற்கு முன் ஏற்பட்ட முதல் காதல் அனுபவங்கள்? அவர்கள் யாருடன் டேட் செய்து வந்தனர். அவர்களுடன் எந்த காரணத்தால், சூழலில் ப்ரேக்-அப் செய்துக் கொண்டனர் என்பதெல்லாம் நமக்கு தெரியாத விஷயங்கள்.
அந்த வகையில், இன்று இந்தியாவின் மிகப்பெரும் பிரபலமாக கருதப்படும் நடிகர் - நடிகைகளின் முதல் காதல் அனுபவங்கள் என்னென்ன, அந்த உறவு யாருடன் இருந்தது என்பது குறித்து தான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

தீபிகா படுகோனே - நிஹார் பாண்டியா!
தீபிகா படுகோனே மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்தவர். தீபிகா படுகோனேவும், நிஹார் பாண்டியா என்பவரும் மும்பையில் ஒரே நடிப்பு பள்ளியில் நடிப்பு பயின்றதாக அறியப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் இவர்கள் இருவரும் ஆல்பம் பாடல்களில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. சிலர் மூலம் அரசல்புரலசாக இவர்கள் இருவரும் அப்போது லிவ்-இன் உறவில் இருந்ததாக தகவல்கள் பரவுகின்றன.
பிறகு சினிமாவிற்குள் வந்த பிறகு இவருடன் ப்ரேக்-அப்பாகி பிறகு ரன்பீர் கபூருடன் காதலி இணைந்தார் தீபிகா என்றும் கூறுகிறார்கள். ஆனால், ஒருசில ப்ரேக்-அப்களை கடந்து இப்போது ரன்வீர் சிங்கை காதலித்து வரும் தீபிகா. ரன்வீரை இந்தாண்டு இறுதியில் திருமணம் செய்துக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரன்பீர் கபூர் - அவந்திகா மாலிக்!
அவந்திகா மாலிக் இம்ரான் கானின் மனைவி. ஆனால், இவர் ரன்பீர் கபூரின் முதல் காதலி என்றும் அறியப்படுகிறது. அவந்திகா மாலிக் நடித்து வந்த சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு நேராக சென்றே ரன்பீர் பார்த்து வந்தார் என்றும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. பிறகு, இருவரும் ஏதோ காரணத்தால் பிரிந்துவிட்டார்களாம். அதன் பிறகே, அவந்திகா மாலிக் மற்றும் இம்ரான் கான் திருமணம் செய்துக் கொண்டதாக அறியப்படுகிறது.
ரன்பீர் கபூரும் பல காதல், ப்ரேக்-அப்களை கடந்து இப்போது ஆலியா பட் உடன் டேட் செய்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா - அசீம் மெர்சன்ட்
பிரியங்கா சினிமாவில் பிரபலம் அடைவதற்கு முன்னர், அசீம் மெர்சன்ட் என்பவருடன் டேட் செய்து வந்தார் என்று அறியப்படுகிறது. உலக அழகி பட்டம் வென்ற பிறகே பிரியங்கா அவரை பிரிந்தார் என்றும் கூறுகிறார்கள். கடந்த 2014ம் ஆண்டு மீண்டும் இவர்கள் இருவரின் பெயரும் ஒன்றாக அடிப்பட்டது.
காரணம் அசீம் பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாற்றி படமாக எடுக்க விருப்பதாக அறிவித்தார். ஆனால், பிரியங்கா அதற்கு தடை கோரி மனு அனுப்பினார். இப்போது பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை பிரியங்கா பெரும் பிரபலமாகிவிட்டார்.

ஆலியா பட் - அலி தாதாகர்!
இந்தி சினிமா இயக்குனர் மகேஷ் பட்டின் இரண்டாம் மனைவி மூலம் பிறந்தவர் ஆலியா பட். ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தின் போது இவர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் நிறைய இடங்களில் ஒன்றாக தென்பட்டார். ஆனால், அதற்கு முன்பே, அதாவது இந்தி சினிமாவில் ஆறுமுகம் ஆவதற்கு முன்னர், அலி தாதாகர் என்பவருடன் இவர் டேட் செய்து வந்ததாக அறியப்படுகிறது.
அலியும், ஆலியாவும் சிறுவயதில் இருந்தே நெருக்கமானவர்கள். மேலும், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ப்ரேக்-அப் ஆன பிறகு மீண்டும் சிறிது காலம் அலியுடன் ஆலியா கொஞ்சம் நேரம் செலவழித்து வந்தார் என்றும் அறியப்படுகிறது.

அனுஷ்கா ஷர்மா - ஜோஹெப் யூசப்!
அனுஷ்கா ஷர்மா - ஜோஹெப் பெங்களூருவில் வாழ்ந்து வந்த காலத்தில் இருந்து டேட் செய்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக மாடலிங்கில் பணிபுரிந்து வந்தனர். பாலிவுட்டில் வாய்ப்பு தேடி இருவரும் ஒன்றாக தான் மும்பை வந்தனர் என்று அறியப்படுகிறது.
அனுஷ்கா ஷர்மாவிற்கு ரப் நே பனா டி ஜோடி நல்ல வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால், ஜோஹெப் வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் பெங்களுரு சென்றுவிட்டார். அத்துடன் அவர்களுக்கு இடையே இருந்த தொடர்பும் முற்றுபெற்றது.
இப்போது அனுஷ்கா ஷர்மா விராத் கோலியை காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ஐஸ்வர்யாராய் - ராஜீவ் முல்சந்தானி
இப்போது உலக பிரபலம் ஐஸ்வர்யா ராய் பச்சன். பாலிவுட்டின் பெயர்போன குடும்பத்தின் மருமகளாக திகழ்ந்து வருகிறார்.
திருமணத்திற்கு முன் சல்மான், விவேக் ஓபராய் போன்றவர்களுடன் காதல் உறவில் இவர் பெயர் அடிப்பட்டிருந்தாலும். அதற்கு எல்லாம் முன்னர் ராஜீவ் என்பவரை ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்ததாக அறியப்படுகிறது.
அப்போது சினிமாவில் அறிமுகமாகாத ஐஸ்வர்யா ராய் ராஜீவ் உடன் மாடலிங் செய்து வந்தார். பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைத்தவுடன் ராஜீவ் உடன் ப்ரேக்-அப் செய்து கொண்டாராம் ஐஸ்.

சோனாக்ஷி சின்ஹா - ஆதித்யா ஷெராப்
சோனாக்ஷி சின்ஹா இப்போது இந்தி சினிமாவின் முன்னணி நடிகை. இவரும் ஃபேம் சினிமாஸ் எம்.டி ஆதித்யா ஷெராப்வும் டேட் செய்து வந்ததாக அறியப்படுகிறது. இவர்கள் இருவரும் இரண்டு வருடங்கள் ஒன்றாக டேட் செய்து வந்துள்ளனர். பின்னர் ஒரு பெரும் சண்டை இருவருக்கும் மத்தியில் உருவாக பிரிந்து விட்டனர். பிறகு தான் ஆதித்யா ஷெராப் டிவி நடிகை மெகா குப்தாவை திருமணம் செய்துக் கொண்டதாக அறியப்படுகிறது.

ஜாக்குலின் - பிரின்ஸ் ஆப் பஹ்ரைன்
ஜாக்குலின் பெர்னாண்டஸ், தி பிரின்ஸ் ஆப் பஹ்ரைன் ஹாசான் பின் ரஷித் அல் கலீஃபா உடன் இரண்டாண்டு கால உறவில் இருந்ததாக அறியப்படுகிறது. அப்போது இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆகவில்லை. பிறகு இருவர் மத்தியில் எழுந்த சில பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டார்கள்.
இப்போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட் சினிமாவின் பெரும் அழகியாக கொண்டாடப்பட்டு வருகிறார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா டேட் செய்து வருவதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

அர்ஜுன் கபூர் - அர்பிதா கான்!
இந்தி சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன் நடிகர் அர்ஜுன் கபூரும் - சல்மான் கானின் தங்கை அர்பிதா காணும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் சீரியசான உறவில் இருந்த போதிலும், சில காரணங்களால் பிரியும் சூழல் ஏற்பட்டது. இப்போது அர்ஜுன் கபூர் நடிப்பில் தீவரமாக கவனம் செலுத்தி வருகிறார். அர்பிதா கானுக்கு திருமணமாகிவிட்டது.

ரன்வீர் சிங் - அஹானா தியோல் - ஆதித்யா ராய்!
நடிகர் தர்மேந்த்ரா மற்றும் ஹேமா மாலினியின் மகள் அஹானா தியோல். ரன்வீர் சிங்கும் அஹானாவும் கல்லூரி படித்து வந்த காலத்தில் டேட் செய்து வந்ததாக அறியப்படுகிறது. அதன் பிறகு, நடிகர் ஆதித்யா ராயும், அஹானாவும் நான்கு வருடம் காதலித்து வந்ததாகவும் அறியப்படுகிறது.
இது பொதுவெளியில் அனைவரும் அறிந்தது தான். ஆனால், கடைசியாக அஹானா டெல்லியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் வைபவ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு டேனியல் வோஹ்ரா என்ற மகன் இருக்கிறார்.



Click it and Unblock the Notifications