Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்கள் துணையின் கையைப் பார்த்தே, அவங்க உங்கள ஏமாத்துறாங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம்!
இங்கு கை ரேகைகளைக் கொண்டு ஒருவரது மோகத்தன்மையை எப்படி அறிவது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் துணை எப்பேற்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவருக்கு காதல் ஒருமுறை தான் பூக்கும் என்பதெல்லாம் வெறும் பொய். சிலருக்கு காதல் பலமுறை பூக்கும். ஆனால் பலரும் அதை வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில்லை. கைரேகை ஜோதிடத்தின் படி, பலமுறை காதல் மலர்ந்தவர்களை எளிதில் கண்டறிய முடியும்.

நம் கையில் உள்ள சில ரேகைகள் ஒருவரது மோகத்தன்மை அல்லது கடலைப்போடும் குணத்தை வெளிக்காட்டும். கைரேகை ஜோதிடர்கள், ஒருவரது கை ரேகைகளைப் பார்த்தே இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கணித்துக் கூறுவார்கள். இப்படி கூறுகையில், சிலருக்கு நடக்காமல் இருந்தாலும், பலருக்கும் நடந்திருக்கும்.
இக்கட்டுரையில் கை ரேகைகளைக் கொண்டு ஒருவரது மோகத்தன்மையை எப்படி அறிவது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் துணை எப்பேற்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அறிகுறி #1
ஒருவரது கையில் உள்ள சுக்கிர மேட்டில் வலைப்பின்னல் போன்று அளவுக்கு அதிகமான ரேகைகள் இருந்தால், அத்தகையவர்கள் மற்றவர்களுடன் அளவுக்கு அதிகமாக கடலைப் போடக்கூடியவர்கள். அதாவது அத்தகையவர்களிடம் மோகத்தன்மை சற்று அதிகம் இருக்குமாம்.

அறிகுறி #2
கையில் உள்ள சுக்கிர மேட்டில் மச்சம் இருந்தால், அத்தகையவர்கள் தன் காதல் வாழ்க்கையை வெளிப்படையாக சொல்லாமல் மறைப்பார்களாம்.

அறிகுறி #3
இரண்டு கைகளிலும் உள்ள இதய ரேகைகள் செயின் போன்று பிணைந்திருந்தால், அவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் அத்தகையவர்களுக்கு நிறைய காதல் இருக்க வாய்ப்புள்ளதாம்.

அறிகுறி #4
சுண்டு விரலின் அடிப்பகுதிக்கும், இதய ரேகைக்கும் இடையே ஒன்றிற்கு மேற்பட்ட கோடுகள் இருந்தால், அத்தகையவர்களுக்கும் நிறைய காதல் மலர்ந்திருக்க வாய்ப்புள்ளதாம்.

அறிகுறி #5
சந்திர மேட்டில் இருந்து இரண்டு தலைவிதி ரேகைகள் ஆரம்பமானால், அத்தகையவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு உறவுகளை பிரச்சனைகளின்றி சமாளிக்கக்கூடியவர்களாம்.

அறிகுறி #6
சுண்டு விரலுக்கு கீழே மற்றும் இதய ரேகைக்கு மேலே நான்கு நீளமான மற்றும் மெல்லிய திருமண ரேகைகள் இருந்தால், அத்தகையவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்களாக இருப்பார்களாம்.



Click it and Unblock the Notifications