உடலுறவில் திளைத்து முழு இன்பமடைய உதவும் வழிமுறைகள்!!!

Posted By: John
Subscribe to Boldsky

சிலருக்கு ஆற்றில் எத்தனை முறை குளித்தாலும் மீண்டும் மீண்டும் குளிக்க தோன்றும். அவ்வாறானது தான் உடலுறவும், தெகிட்டாதா இன்பம், தேனுருகும் சுவை என எத்தனை முறை ஈடுபட்டாலும் திரும்ப திரும்ப தூண்டும் ஆசை, சிறகடித்து பறக்கும் மனது. இது ஒன்றும் அலுவலக கோப்பு அல்ல எடுத்தோம் முடித்தோம் கிளம்பினோம் என்பதற்கு.

உடலுறவு கொண்டால் வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம்!

உடலுறவு வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும். உங்களை வாழ வைக்கும் ஆயக் கலை இது. பழங்கால கோவில் சிற்பங்களை நன்கு உற்றுப்பார்த்தால் அதில் இந்த கலையை பற்றி தான் 90% சிற்பங்கள் வடிக்கபட்டிருக்கும். பிள்ளை வரம் இல்லாதவர்கள் கோவிலை சுற்றிவர கூறியதற்கான காரணமும் இது தான்.

வாவ்!!! உடலுறவு வைத்துக் கொண்டால் உடல் எடை குறையுமா? படிச்சு, புரிஞ்சு, தெரிஞ்சுக்குங்க!!!

உடலுறவை கலையாக வடித்த கலாச்சாரம் நம்முடையது. ஆம், உயிரினங்களின் அடிப்படை தேவையே வம்சத்தை விருத்தி ஆக்குவது தானே. அள்ள அள்ள குறையாத இன்பம் தரக்கூடியது தான் உடலுறவு. இதில் முழுவதுமாய் இன்பம் காண வேண்டும் என்பது தான் பலரது தினசரி விருப்பம். அதற்கான வழிமுறைகள் பற்றி இனி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீண்டுதல்

தீண்டுதல்

உடலுறவு என்பது ஒரு கோலம் போல அதை வரைவது தான் உங்கள் திறமை. எட்டு புள்ளி கோலம் போட எட்டு நிமிடம் போதும். ரங்கோலி கோலம் போட தான் மணிநேரம் ஆகும். புரியவில்லையா? தீண்டுதல் மிக முக்கியம் அமைச்சரே!!! அந்தரங்க உடல் பாகங்களின் அருகே உங்கள் விரல்கள் கோலம் போட வேண்டும். (இதழ்களில் கோலம் போட தெரிந்திருந்தால் நீங்கள் புத்திசாலி.)

நாடகம்

நாடகம்

ஒவ்வொரு நாளும் ஒரே மாதரி அமையாத போது, இரவு மட்டும் ஏன் ஒரே மாதரி இருக்க வேண்டும். உலகே நாடக மேடை நாம் எல்லாம் கலைஞர்கள் என்றிருக்கும் போது, ஒருநாள் ராஜாவாக இருங்கள், ஒருநாள் ஆடு மேய்பவனாக இருங்கள். புதுமைகளை பிரயோகிக்க தெரிந்திருக்க வேண்டும் அந்த முழு இன்பம் அடைய. (சொன்னது புரியுதா!!!)

(வி)வேகம்

(வி)வேகம்

உடலுறவில் முழு இன்பமடைய வேகமும் வேண்டும், விவேகமும் வேண்டும். எங்கு வேகம் கூட்ட வேண்டும், எங்கு குறைக்க வேண்டும் என அறிந்து உடலுறவில் ஈடுப்பட வேண்டும். தொடக்கத்தில் வேகம் ஆகாது, முடிவில் வேகம் இல்லை எனில், அது விவேகமாகாது (இது புரியாட்டி இந்த விஷயத்துக்கு நீங்க ஒத்துவரமாட்டீங்க!!!)

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் பாட்டம்

உடலுறவு என பெயரளவில் இருந்தாலும் மனது ஒத்துவராது, மனதின் சந்தோஷம் பெருகாது நீங்கள் உடலுறவில் முழுமையான இன்பம் அடைய முடியாது. ஆட்டம், பாட்டம், கொஞ்சுதல், விளையாடுதல் போன்றவை உடலுறவில் நீங்கள் முழு இன்பத்தையும் பெற உதவுகிறது.

புட்டம்

புட்டம்

மேலழகும், கீழழகும் மட்டுமல்ல பின்னழகையும் கொஞ்சம் கவனியுங்கள். பெண்களுக்கு தெரியாத அதை கொஞ்சம் கற்றுக் கொடுங்கள். 50, 60தில் சென்றுக் கொண்டிருக்கும் உங்கள் அளவை 70, 80'ஐ எட்ட வைக்கும் இது.

முத்தமும் கொஞ்சம்

முத்தமும் கொஞ்சம்

மீல்ஸ் முடிந்தவுடன் எழுந்துவிட வேண்டாம் பாயாசம் மிச்சம் இருக்கிறது அதையும் ருசியுங்கள். முடிய வேண்டியது முடிந்த பிறகு, கொஞ்சம் முத்தங்களை பரிவர்த்தனை செய்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் முத்தமிட பிடிக்குமோ அங்கெல்லாம். பிரியாணி சமைத்த பிறகு அதன் மேல் சிறிதளவு நெய்யும், முந்திரியும் தூவுவது தரும் ருசியை போல இதுவும். எனவே, நாங்க ரசிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள், ருசிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Super Ways To Make Inter Course Breathtaking

Do you know about the six super ways to make inter course breathtaking? read here.
Story first published: Thursday, April 2, 2015, 16:19 [IST]