Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
பெண்களிடம் ஆண்கள் அப்பாவித்தனமாக மன்னிப்பு கேட்கும் முறைகள்!!
தனது காதல் துணையை பார்க்க செல்லும் போது குறைந்தபட்சம் பவுடராவது பூசாமல் பெண்களாலும், ஓரிரு பொய்களாவது பேசாமல் ஆண்களாலும் இருக்கவே முடியாது. சின்ன சண்டைகள் தான் காதலை வளர்க்கும். அந்த சண்டைகளுக்கு காரணம் சில பொய்கள் தான். துரோகம் விளைவிக்கும் அளவு பொய்கள் கூறுவது தவறு. ஆனால், அன்றாடம் காதலில் கெஞ்சும் தருணங்களும், கொஞ்சும் தருணங்களும் நிகழ சிறு சிறு பொய்கள் கூறுவது தவறே இல்லை.
காதலில் பெண்கள் கூறும் பொய்யானது அவர்கள் காலையில் பூசும் கண்மை போன்றது, மாலைக்குள் அழிந்துவிடும், ஆண்கள் கண்டறிந்துவிடுவார்கள். பொய்கள் பேசும் பொய்யானது தலைக்கேறிய மப்பு போல மறுநாள் விடிந்ததும், தாங்கள் என்ன பொய் கூறினோம் என்று ஆண்களே மறந்துவிடுவார்கள். இதுதான் ஆண்கள் கூறும் பொய்க்கும், பெண்கள் கூறும் பொய்க்கும் இடையே இருக்கும் வித்தியாசம்...

அய்யோ மறந்துட்டேன்!!!
பெரும்பாலான ஆண்களுக்கு காதலில் மட்டும் ஞாபக மறதி ஏற்படுவது இயல்பு. எப்போதோ நடந்த கிரிக்கெட் ஸ்கோரை எல்லாம் நினைவில் வைத்திருக்கும் ஆண்கள் கூட காதலி ஏதாவது கூறினால் மறந்துவிடுவார்கள்.

கொஞ்சம் வர்க் ஜாஸ்தி ஆயிடுச்சு!!
தன் ஆண் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டு காதலியை மறந்துவிடும் ஒவ்வொரு ஆணும் கூறும் ஒரே பொய், "கொஞ்சம் வர்க் ஜாஸ்தி ஆயிடுச்சு!!"

மீட்டிங்ல இருந்தேன் அதான் கால் எடுக்க முடியல!!
சரக்கு பார்ட்டி, அலுவலக தோழிக்கு உதவிக் கொண்டிருக்கும் போது, தம்மடித்துக் கொண்டிருக்கும் போதென, பல சூழல்களில் காதலியின் அழைப்பை எடுக்க மறுக்கும் ஆண்கள் கூறும் பொய் இது. "மீட்டிங்ல இருந்தேன் அதான் கால் எடுக்க முடியல!!"

தூங்கலாமா!!!
நண்பர்களுடன் வெளியே செல்ல ப்ளான் போட்டிருக்கம் போது, அல்லது நண்பர்களை வீட்டுக்கு அழைத்திருக்கும் போது ஆண்கள் தங்கள் காதலியிடம், தூக்கம் வருகிறது, உடல் சோர்வாக இருக்கிறது என்று நிறைய பொய்களை அள்ளிவிடுவார்கள்.

செம டிராபிக்!!!
முதல் பொய்யுடன் மாற்றான் போல ஒட்டிக் கொண்டு வரும் பொய் இது. "அய்யோ மறந்துட்டேன், நான் கிளம்பிட்டேன், வர வழியில டிராபிக் ஜாஸ்தி அதான் லேட்". இந்த பொய்யை கூறாமல் நீங்கள் காதலித்து வருகிறீர்கள் எனில், உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
