ஏமாற்றிய துணையுடன் சமரசமாவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!

By Ashok CR

ஒரு உறவில் ஏமாற்றப்படுவது என்பது மிகவும் வலியை ஏற்படுத்துகின்ற ஒரு விஷயமாகும். இவ்வளவு நாள் நீங்கள் நம்பிக்கை வைத்து கொண்டிருந்தவர் உங்களை விட்டு விட்டு வேறு ஒருவரை நினைத்து கொண்டிருக்கிறார் என்பது திடீரென தெரிய வரும் போது அதனை கையாளுவது கடினமாக இருக்கும். அதுவும் உங்கள் துணை வேறு ஒருவருடன் மிகவும் நெருக்கமான உறவில் இருக்கிறார் என்பது தெரிய வரும் போது, நீங்கள் உடைந்தே போவீர்கள். கண்டிப்பாக அது ஒரு சவாலான தருணம். இந்நேரத்தில் நீங்கள் குழப்ப நிலைக்கு ஆளாவீர்கள்.

கணவன் அல்லது மனைவியில், யாராவது ஒருவர் மற்றொருவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வரும் போது, அந்த உறவை பொதுவாக பலரும் முறித்துக் கொள்கின்றனர். ஆனாலும் சில உறவுகள் வாழ்கிறது. இருப்பினும் அந்த உறவின் மீதுள்ள நம்பிக்கை சரியத் தொடங்கி விடும். அதனால் ஏமாற்றப்பட்ட நிகழ்வுக்கு பிறகு, அவர்கள் இருவரும் சமரசம் அடைவது என்பது கடினமானதாக மாறும்.

எந்த ஒரு உறவுக்கும் நம்பிக்கை தான் பிராதன மூலம். அதனால் நீங்கள் உங்கள் துணையை ஏமாற்றி இருந்தால், அவர் உங்கள் மீது இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு நீங்கள் பாடப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஏமாற்றப்பட்ட உங்கள் துணை அவ்வளவு சுலபத்தில் உங்கள் மீது நம்பிக்கையை வைக்க மாட்டார். அதனால் முன்பு இருந்ததை போலவே உங்களிடம் நடந்து கொள்வார் என்று கூற முடியாது.

அதனால் நீங்கள் ஏமாற்றியிருந்தாலும் சரி அல்லது ஏமாற்றப்பட்டு இருந்தாலும் சரி, உங்கள் உறவு தொடர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இதோ உங்களுக்காக சில டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்றாக சிந்தியுங்கள்

நன்றாக சிந்தியுங்கள்

நீங்கள் உங்கள் துணையை ஏமாற்றியிருந்தால், உங்கள் உறவை பற்றி பல கோணத்தில் நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்த உறவை மீண்டும் புதுபித்து, முன்பு இருந்ததை போலவே இந்த உறவு சுமூகமாக தொடர உங்கள் துணைக்கும் விருப்பமா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களை அவ்வளவு சுலபத்தில் உங்கள் துணை மன்னிப்பார் என்று நீங்கள் எண்ணி விட முடியாது. இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற கடினமான முயற்சிகள் தேவைப்படும்.

காரணம் தேவை

காரணம் தேவை

ஏமாற்றுதல் என்பது ஒரு நாளில் நடப்பவை அல்ல. வேறு எதையாவது பற்றி பேசுதல் அல்லது அனைத்தும் சரியானதை போல் நடித்தல் - இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து விடாது. உங்களுக்கு உண்மையிலேயே இந்த உறவு நீடிக்க வேண்டுமானால், உங்கள் துணை உங்களை ஏமாற்றியதற்கான காரணத்தை அடி வரைக்கும் சென்று ஆராய வேண்டும். அதில் கண்டறியும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.

வார்த்தைகள் உங்களை எங்கேயும் அழைத்துச் செல்லாது

வார்த்தைகள் உங்களை எங்கேயும் அழைத்துச் செல்லாது

நீங்கள் உங்கள் துணையை ஏமாற்றி இருந்தால், நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்கள் துணையை எந்த விதத்திலும் அமைதிப்படுத்தாது. உங்கள் துணைக்கு முன்பு மந்திரச் சொல்லாக விளங்கிய "ஐ லவ் யு" இப்போது வெறும் வார்த்தைகளாக தான் இருக்கும். அதனால் உங்கள் செயலுக்கான பொறுப்பை நீங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் உங்கள் துணை எழுப்பும் அனைத்து கேள்விகளும் பதிலளிக்க தயாராக இருங்கள். பரிசுபொருட்கள் வாங்கிக் கொடுத்து இனிக்க இனிக்க பேசுவதால் உங்கள் பிரச்சனை முடியப்போவதில்லை.

மன்னித்து மறக்க முயற்சியுங்கள்

மன்னித்து மறக்க முயற்சியுங்கள்

சுலபமாக மன்னித்து விடலாம். ஆனால் மறப்பது கஷ்டமான விஷயமே. உங்களை ஏமாற்றிய உங்கள் துணையை நீங்கள் மன்னித்து விட்டீர்கள் என்றால், உங்களுக்கு வேறு எதையும் விட உங்கள் உறவின் மீதே அக்கறை அதிகம். இருப்பினும் உங்கள் இருவருக்குமான நம்பிக்கை என்பது பெரிய கேள்விக்குறியே. முன்பை போல் இனி உங்கள் துணையின் மீது உங்களால் நம்பிக்கையை வைக்க முடியாது. இழந்த நம்பிக்கையை கொண்டு வருவது உங்கள் துணையின் கையிலேயே உள்ளது. இருப்பினும் உங்கள் உறவு மீண்டும் நல்ல படியாக நடை போட வேண்டும் என்றால், நீங்களும் கூட பழைய விஷயத்தைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.

பழைய சுடரை மீண்டும் கொண்டு வருதல்

பழைய சுடரை மீண்டும் கொண்டு வருதல்

பொதுவாக கணவன் மனைவிக்கு இடையே முன்பு இருந்த அன்பும் காதலும் குறையும் காரணத்தினாலேயே தான், பல நேரகளில் அந்த உறவு சலிப்பு தட்டுவதற்கான காரணமாக அமைகிறது. குறிப்பாக ஆண்களுக்கு இந்த அன்பு வெளியே கிடைக்கும் போது, அவர்கள் தன் மனைவியை ஏமாற்றுகிறார்கள். அதனால் ஏமாற்றப்பட்ட பிறகு, உங்கள் உறவு மீண்டும் நல்ல படியாக இருக்க வேண்டுமானால், இழந்த அந்த பழைய சுடரை மீண்டும் எரிய விடுங்கள். இரவு உணவு, திரைப்படங்கள், அலாதியான உடலுறவு, உல்லாச பயணம் போன்றவைகளில் ஈடுபடுங்கள். இது உங்கள் உறவை மேம்படுத்தும்.

பழிவாங்க நினைக்காதீர்கள்

பழிவாங்க நினைக்காதீர்கள்

மீண்டும் அழிப்பதற்காகவே உறவை வளர்ப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்கள் துணை உங்களை ஏமாற்றியிருந்தால், நீங்கள் பட்ட அந்த கஷ்டத்தை அவருக்கும் அளிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது கடைசியாக உங்களுக்கு தான் அதிக வலியை உண்டாக்கும்.

நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவதில் கவனம் செலுத்துங்கள்

நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவதில் கவனம் செலுத்துங்கள்

எந்த ஒரு உறவுக்கும் நம்பிக்கை தான் அதிமுக்கிய மூலமாகும். உங்கள் உறவில் அந்த நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவது மிகவும் முக்கியமாகும். சில நேரங்களில் நீங்கள் இருப்பது பழைய எண்ணங்களுடனான உங்கள் துணை தானா என்ற சந்தேகம் எழும். இருப்பினும் அந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு பிறகும் நீங்கள் அவருடன் இருக்கிறீர்கள் என்றால், அதற்கு காரணம் அவரை நீங்கள் அந்தளவுக்கு விரும்பியிருக்கிறீர்கள். அதனால் அவரை அவ்வளவு சுலபத்தில் இழக்கமாட்டீர்கள். அதனால் உங்கள் நம்பிக்கையை முழுவதுமாக இழந்து விடாதீர்கள். இல்லையென்றால் சந்தேகங்கள் பிரச்சனையை மேலும் மோசமடையச் செய்யும். கண்டிப்பாக உங்களை ஏமாற்றிய உங்கள் துணை, நீங்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் கொண்டு வர போராடி தான் ஆக வேண்டும். அதனால் நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion