For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க காதலன் உங்களை கண்டுக்காம இருக்காங்களா? கவலைப்படாதீங்க...

By Babu
|

பொதுவாக காதலிக்கும் ஆரம்ப காலத்தில் விழுந்து விழுந்து காதல் செய்யும் ஆண்கள், நாளடைவில் காதலியை கண்டுகொள்வதே இல்லை. இதனால் பல பெண்கள் மிகவும் வருந்தமடைகின்றனர். மேலும் தங்கள் காதலனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று எண்ணி, அவர்களுடன் சண்டைகளைப் போடுகின்றனர். ஏனெனில் பெண்களுக்கு காதல் வந்த பின்னர், தங்களின் காதலன் மீது அன்பு அளவுக்கு அதிகமாகி, அவர்களுடனேயே இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.

ஆனால் அந்த கட்டத்தில் தான் ஆண்கள், தங்கள் காதலியை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் காதலிக்கும் சில பெண்கள் காதல் வாழ்க்கையை வெறுத்து, காதலே வேண்டாம் என்று எண்ணுகின்றனர். பல பெண்கள் தினமும் மனதில் அழுது கொண்டு இருக்கின்றனர். மேலும் காதலனிடம் தங்களது பிரச்சனைகளை சொன்னாலும், அதை காதலன் புரிந்து கொள்ளாமல் நடக்கின்றனர் என்று, சில நேரங்களில் வாழ்க்கையை வெறுக்கின்றனர்.

உண்மையில் அந்த நிலையில் பெண்கள் அப்படி தவறான முடிவை எடுக்காமல், காதலிப்பதற்கு முன்பு எப்படி இருந்தீர்களோ அப்படி காதலை வெளிப்படுத்தாமல்மாறினால், பின் தானாக உங்கள் காதலன் உங்களை தேடி வருவார். இங்கு இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த உங்கள் காதலன் உங்களை தேடி வர சில ட்ரிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி பின்பற்றி வாருங்கள். பின் பாருங்கள் உங்கள் காதலன் எப்படி உங்களின் நினைப்போடு இருக்கிறார் என்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொஞ்சம் விளையாடுங்கள்

கொஞ்சம் விளையாடுங்கள்

காதலில் விழுந்த பின்னர் பெண்கள், காதலன் அழைத்த உடனேயே வந்துவிடுவார்கள். ஆனால் உங்கள் காதலன் உங்களை கண்டு கொள்ளாமல் எப்போதாவது உங்களை காண அழைத்தால், அப்போது அவரை சந்திக்க செல்ல வேண்டாம். இதனால் அவர்கள் உங்கள் அதிகம் மிஸ் பண்ணுவதுடன், உங்கள் நினைப்பாகவே இருப்பார்கள். பின்னர் தான் உங்களின் அருமை அவர்களுக்கு புரியும்.

நண்பர்களுடனும் நேரம் செலவழியுங்கள்

நண்பர்களுடனும் நேரம் செலவழியுங்கள்

எப்போதும் அவர்களுடனேயே நேரத்தை செலவழிக்காமல், சற்று நண்பர்களுடனும் நேரத்தை செலவழியுங்கள். ஏனெனில் வாழ்வில் நண்பர்களும் மிகவும் முக்கியமானவர்கள். எனவே மனம் கஷ்டமாக இருக்கும் தருணம், நண்பர்களுடன் நேரத்தை செலவழியுங்கள். அப்படி நேரத்தை செலவழிக்கும் போது, உங்கள் காதலன் போன் செய்தால் எடுக்காதீர்கள். சொல்லப்போனால் அவர்களை கண்டு கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் தான், உங்கள் காதலனுக்கு நீங்கள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று தெரியும். பின்னர் என்ன, இனிமேல் உங்கள் நினைவாகவே இருப்பார்கள்.

ஆச்சரியம் கொடுங்கள்

ஆச்சரியம் கொடுங்கள்

வாழ்வில் ஆச்சரியம் இல்லாவிட்டால், வாழ்க்கை சுவாரஸ்யமாகவே செல்லாது. ஆகவே நீண்ட நாட்கள் அவர்களுடன் பேசாமல் இருந்து, பின் அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் கொடுக்கலாம். உதாரணமாக, அவர்களின் சின்ன சின்ன கனவுகளை அவ்வப்போது நிறைவேற்றுவது. இவ்வாறெல்லாம் செய்தால், நீங்கள் அவர்கள் மேல் வைத்துள்ள அன்பை அவர்கள் உணர்ந்து, இனிமேல் சரியாக நடந்து கொள்வார்கள்.

எப்போதும் அழகாக இருங்கள்

எப்போதும் அழகாக இருங்கள்

தினமும் உங்கள் காதலனை கவரும் வகையிலும், அவர்களுக்கு பிடித்தவாறான அழகான ஆடைகளை அணிந்து வாருங்கள். சொல்லப்போனால், மற்ற ஆண்கள் உங்களை சைட் அடிக்கும் வண்ணம் அணிந்து வாருங்கள். இதனால் உங்கள் காதலன் 'இவள் என் காதலி' என்ற பெருமிதத்துடன், உங்களை சைட் அடித்து கொண்டிருப்பார்கள்.

சந்தோஷமாக இருங்கள்

சந்தோஷமாக இருங்கள்

உங்கள் காதலனிடம் சரியாக பேசாமல் இடைவெளியை மேற்கொள்ளும் போது, அவர்களின் முன்பு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருப்பது போல் நடந்து கொள்ளுங்கள். இதனால் இத்தனை நாட்கள் நீங்கள் பேசியதை சீரிஸாக எடுத்துக் கொள்ளாத அவர்கள், பின் உங்களிடம் வந்து சீரியஸாக பேசுவார்கள். அதன் பின் நீங்கள் உங்களது மனதில் உள்ளதை சொல்லுங்கள். எப்போதுமே ஒருவரின் வலியை மற்றவருக்கு சொன்னால் புரியாது, அதை அனுபவித்தால் தான் புரியும். எனவே அனுபவத்தைக் கொடுத்து, உங்களின் அருமையை புரிய வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Tricks To Make Him Miss You More

Here are some of the tricks women can try out in their relationship to make their man miss them. Make him miss you like crazy with these tips. 
Desktop Bottom Promotion