Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
உங்க பாய் ஃப்ரெண்ட் இப்படியெல்லாம் நடந்துக்குறாரா? நீங்க ரொம்ப லக்கிதான்!!
டேட்டிங்கில் இருக்கும்போதே நீங்கள் உங்கள் பாய் ஃப்ரெண்டின் யோக்கியத் தனங்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஏனோ தானோன்னு டேட்டிங் செய்பவர்கள் உங்களை எளிதில் களற்றி விட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.
உங்கள் பாய் ஃப்ரெண்டை நீங்கள் அளவுக்கதிகமாக நேசிப்பதை மட்டும் வைத்துக் கொண்டு நீங்கள் எதையும் எடை போட்டு விடக் கூடாது. உங்களிடம் அவர் எவ்வளவு அன்பாக இருக்கிறார், அதில் எவ்வளவு சீரியஸாக இருக்கிறார் என்பதையும் உன்னிப்பாகக் கவனித்து வாருங்கள். கண்மூடித் தனமாக எதையும் நம்பி விடாதீர்கள்.
ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை அவ்வளவு எளிதாகவும் வெளிப்படையாகவும் காண்பித்து விட மாட்டார்கள். அவற்றைப் பொறுமையாக அவர்களிடமிருந்து தோண்டித் துருவி துப்பு துலக்க வேண்டியது உங்கள் உரிமை, கடமை. அப்போதுதான் உங்கள் எதிர்காலம் சிறக்கும்.
உங்கள் பாய் ஃப்ரெண்ட் உங்களை எவ்வளவு சீரியஸாக நேசிக்கிறார் என்பதைப் பின்வரும் வழிகளின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்:

நேர்மை
எந்த ஒரு சின்ன விஷயத்திலும் உங்கள் பாய் ஃப்ரெண்ட் உங்களிடம் நேர்மையாகவும் சீரியஸாகவும் நடந்து கொள்கிறாரா? அப்படியென்றால் நீங்கள் ரொம்பவும் லக்கிதான். உங்களைத் திருப்திப் படுத்துவதற்காக மட்டுமே உங்களிடம் தேனொழுகப் பேசுகிறாரார் என்றால், உடனே குட்-பை சொல்லி விடுங்கள்.

சொந்த பந்தங்களிடம் அறிமுகம்
உங்களிடம் உங்கள் பாய் ஃப்ரெண்ட் பிரியமாகவும் அன்பாகவும் இருக்கிறார் என்றால், அவர் உங்களைத் தன் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் அறிமுகப்படுத்தி மகிழ்வார். அவர்களுடன் உங்களையும் சேர்த்து டின்னருக்கு அழைத்துச் செல்வார். தங்கள் குடும்ப விசேஷங்களுக்கு உங்களை அழைப்பார். அப்படிப்பட்டவரை விட்டு விடாதீர்கள்.

செயல்களில் பங்கு
தான் மேற்கொள்ளும் எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் உங்களையும் ஈடுபடுத்துவார். தனக்கு சந்தோஷம் தரும் செயல்களில் உங்களையும் பங்குபெறச் செய்து மகிழ்வார். அதேபோல், நீங்கள் விரும்பிச் செய்யும் காரியங்களிலும் தன்னை வெகுவாக ஈடுபடுத்து, உங்களை மகிழ்விப்பார்.

கருத்துக்கு மரியாதை
தன் வாழ்க்கையில் எந்த ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் போதும், உங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொள்வார். அவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். உங்கள் கருத்துக்கு அவர் மதிப்பு கொடுக்கும் போதே தன்னில் ஒரு பகுதி நீங்கள்தான் என்ற முடிவையும் அவர் எடுத்து விட்டார்.

உங்களுக்கு நேரம் ஒதுக்குவார்
தன்னுடைய பொன்னான நேரத்தையெல்லாம் ஒதுக்கிவிட்டு, அவர் உங்களுக்காக ஓடோடி வருகிறார் என்றால் நீங்கள் ரொம்பவும் அதிர்ஷ்டசாலிதான். அந்தப் பொன்னான நேரமெல்லாம் இப்போது உங்களுக்குச் சொந்தமாகி விட்டதே! அவர் உங்களைச் சொந்தமாக்கிக் கொள்ளப் போகிறார் என்றுதான் இதற்கு அர்த்தம்.

காரணமில்லாத அழைப்புகள்
எந்த ஒரு காரணமும் இல்லாமல் உங்களவர் திடீரென்று உங்களை அழைப்பார். நீங்கள் ஏன், என்னவென்று கேட்டால், 'தெரியலை, கால பண்ணனும் போலத் தோணுச்சு. பண்ணினேன்' என்று சொல்வார். அப்படியென்றால், அவர் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறார், உங்களை ரொம்ப விரும்புகிறார்.

எதையும் செய்வார்
உங்களை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க அவர் எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருப்பார். அவ்வளவு ஏன், செய்தும் முடிப்பார். உங்கள் மகிழ்ச்சியிலேயே அவருடைய சந்தோஷத்தை அதிகப்படுத்திக் கொள்வார்.

கவர மாட்டார்
உங்களுடைய பலத்தையும் பலவீனத்தையும் அவர் நன்கு அறிந்து வைத்திருப்பார். அதே நேரத்தில், உங்களைத் தேவையில்லாமல் கவர வேண்டும் என்று அவர் நினைக்க மாட்டார்.

திறந்த மனக் கதவுகள்
உங்களுக்காகவும், உங்கள் அன்பிற்காகவும் உங்களவரின் மனக் கதவுகள் எப்போதுமே திறந்திருக்கும். அந்த அளவுக்கு அவர் உங்கள் மீது அன்பாகவும், உங்களுடனான வாழ்க்கையில் வெகு சீரியஸாகவும் இருக்கிறார்.

எப்போதும் உங்களுக்காக...
எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்காக அவர் இருப்பதை உங்கள் மனத்தில் அவர் விதைத்திருப்பார். அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படி ஒரு சூழ்நிலை இருந்தாலே, அவர் உங்கள் மீது ரொம்ப சீரியஸாக இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.



Click it and Unblock the Notifications
