Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சின்னதாக ஒரு கவிதை.. கொஞ்சம் போல பூ.. கூடவே காதலையும் சொல்லுங்க!
இம்மண்ணில் பிறந்த அனைவருக்குமே என்றாவது ஒரு நாள் காதல் வயப்படும் சூழ்நிலை உருவாகும். அந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கை துணைவியை தேர்வு செய்து அவர்களிடம் உங்கள் காதலை தெரிவிக்க பல வழிகள் உள்ளது. ஆகவே, உங்கள் காதலியிடம் காதலை தெரிவிக்க சிறந்த முறையை தேர்வு செய்து காதலில் வெற்றியடையுங்கள். அதிமேதாவிகள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.
அவர்கள் தங்களுக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி அதில் வாழ்ந்து வரவே ஆசைப்படுவார்கள். இவர்கள் சாதாரண மனிதர்களிடம் இருந்து பெரும் அளவில் மாறுபட்டு இருப்பார்கள். அவர்களுக்கென்று வித்தியாசமான வாழ்க்கை முறை, வித்தியாசமான உடை அலங்காரங்கள்,மற்றவருக்கு புரியாத தத்துவ பேச்சுக்களும் உடையவர்கள். அதேபோல், காதலை தெரிவிக்க அவர்களுக்கென்று தனி வழியை கொண்டவர்கள்.
நமக்கு வித்தியாசமாக இருக்கும் சில விஷயங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடும். உதாரணமாக, தன் காதலியிடம் காதலை தெரிவிக்கும்போது அவருக்கு பிடித்தமான ஹீரோ போல் உடையணிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். இது சாதாரண நபருக்கு சற்று வித்தியாசமான காட்சியளிக்கும். இதுபோல் காதலை தெரிவிப்பதற்கு அவர்கள் பல வித்தியாசமான மற்றும் அதிமேதாவித்தனமான முறைகளை உபயோகிப்பார்கள்.
இப்பொழுது மேதாவித்தனமான முறையில் காதலை தெரிவிக்கும் சில வழிகளை படிக்கலாம்.

1. சூப்பர் ஹீரோ
அதிமேதாவிகள் மற்றும் கற்றுக்குட்டிகள் சூப்பர் ஹீரோ படங்கள் மற்றும் நகைச்சுவை படங்களை விரும்பி ரசித்து பார்ப்பார்கள். இந்தவகை படங்களை தொடர்ந்து பார்ப்பதற்கு அவர்களுக்கு சலிப்பு ஏற்படாது. மாறாக, இவ்வகை படங்கள் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தச் செய்யும்.உங்கள் காதலியின் விருப்பமான ஹீரோவை போல் உடையணிந்து காதலை தெரிவிப்பது அதிமேதாவித்தனமான முறையில் தெரிவிக்கும் வழிகளில் ஒன்றாகும். அந்த படத்தில் வரும் ஹீரோவின் வசனத்தை பேசி அவர்களிடம் காதலை தெரிவிக்கலாம்.
2. மோதிரங்கள்
சினிமா ஹீரோக்கள் முகம் பதித்த மோதிரங்களை உபயோகித்து உங்கள் காதலை மேதாவித்தனமாக தெரிவிக்கலாம். மேலும், இன்று கடைகளில் ஹீரோக்கள் முகம் அல்லது சுப்பர் மென் முகம் பதித்த மோதிரங்கள் விற்கப்படுகின்றன. இவ்வகை மோதிரங்கள் இப்பொழுது மக்களிடையே பிரபலமாகி வருகின்றது. காதலை தெரிவிக்க இது ஒரு வித்தியாசமான முறை என்றாலும் புதிய முறையாகவும் இருக்கும்.
3. ஆராய்ச்சிகள்
தனது காதலை தெரிவிக்க இவர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தயங்க மாட்டார்கள். இது வித்தியாசமான முறையாக இருந்தாலும், இதனை மிகுந்த கவனம் ஏற்று முயற்சி செய்வார்கள். காதலை தெரிவிப்பதற்கு முன் இவர்கள் ஜோசியம் மற்றும் மரபணு போன்ற ஆராய்ச்சிகளை மிகுந்த கவனம் ஏற்று செய்து வருவார்கள். இது போன்ற வழிகளை நம்மை போன்ற சாதாரண நபர்களால் கற்பனை பண்ணிகூட பார்க்க முடியாது.
4. கவிதைகள்
காதல் கவிதைகள் எழுதுவது என்பது எல்லா அதிமேதாவிகளும் சிறந்த முறையாக நினைக்கும் வழிகளில் ஒன்றாகும். இதனை சாதாரண மனிதர்களும் செய்வார்கள். ஆனால், அவர்கள் அதில் உபயோகிக்கும் வார்த்தைகள் சாதாரண நபர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் இருந்து மாறுபட்டே இருக்கும். உதாரணமாக, "உங்கள் மனம் ஒரு குழி அதில் நான் விழுந்து விட்டேன்" அல்லது "நீ ஒரு மரபணு உன்னை என் உடலில் செலுத்தி ஒரு புதிய காதல் கதையை உருவாக்கலாம்" போன்றவை புத்திசாலிகள் உபயோகிக்கும் வித்தியாசமான வரிகள் ஆகும்.
5. வித்தியாசமான பரிசுகள்
காதலை தெரிவிக்க பூக்கள், பரிசுகள் மற்றும் மோதிரங்கள் போன்றவை மிகவும் முக்கியமானவை. இதனை கத்துகுட்டிகளும் சாதாரண நபர்களும் காதலை தெரிவிக்கும்போது பயன்படுத்துவார்கள். ஆனால் அவை எப்படிப்பட்டவை என்பதில் வித்தியாசம் இருக்கும். கத்துக்குட்டிகள் தத்துவப் புத்தகங்கள், ப்ளே ஸ்டேஷன் அல்லது மொபைல் போன்றவற்றை தேர்ந்தெடுப்பார்கள். இது காதலை தெரிவிக்க பயன்படுத்தும் வித்தியாசமான முறையாகும். இது நமக்கு வேறுப்பட்டு இருந்தாலும், அதிமேதாவிகளும் கத்துக்குட்டிகளும் இந்தவகை பரிசுப்பொருட்களை பெரிதும் விரும்புவார்கள்.
அதிமேதாவிகள் வித்தியாசமான முறையில் காதலை தெரிவித்தாலும் நம்மை போலவே காதலை அடைவதற்கே முயற்சி செய்கின்றனர். அவர்களின் காதலை தெரிவிக்கும் முறைதான் சற்று வித்தியாசமாகவும் முறையற்ற வழியில் இருக்கும். ஆனால், அவர்களுக்கென்று வித்தியாசமான வழியை பின்பற்றி வருவார்கள்.



Click it and Unblock the Notifications