Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
முதல் முறை டேட்டிங் போறீங்களா? இதோ சில டிப்ஸ்...
'முதல் கோணல் முற்றும் கோணல்' என்பது ஊரறிந்த பழமொழி. எனவே நீங்கள் ஒருவரை முதல் முறை பார்க்கும் போதும், பேசும் போதும் உங்களை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பது பின்நாட்களில் அந்த உறவின் நிலையை தீர்மானிக்கும். முதல் முறை டேட்டிங் மற்றும் முதல் மீட்டிங் என இரண்டு விஷயங்களுமே அவளை/அவரை உங்களிடம் நெருங்கி மிகவும் நெருங்கி வரச் செய்ய கிடைக்கும் முதல் வாய்ப்புகளாக இருக்கும். பின்நாட்களில் அந்த உணவை வலுப்படச் செய்யும் படிக்கற்களாக இருப்பது முதல் டேட்டிங் சந்திப்பு தான். எனவே டேட்டிங் செல்லும் போது, குறிப்பாக முதல் முறை டேட்டிங் செல்லும் வேளைகளில், முழுமையாக உங்களை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
பொதுவாகவே முதல் முறையாக டேட்டிங் செல்பவர்கள் பதட்டமாகவும், குறைவான நம்பிக்கையும் கொண்டிருப்பார்கள். இவ்வாறு இருப்பது இயற்கையானது தான். ஆனால் நீங்கள் இந்த முதல் டேட்டிங்கில் முத்திரை பதிக்க விரும்பினால் தன்னம்பிக்கையை இழந்து விட வேண்டாம். ஏனெனில் உங்களுடைய தன்னம்பிக்கை செய்யும் அற்புதங்களால், துணைவர் உங்களை மிகவும் அதிகமாக நேசிக்கத் தொடங்கி விடுவார்.

முதல் டேட்டிங்கில் இயற்கையாக, சாதாரணமாக இருக்க வேண்டியது முதல் வழிமுறையாகும். இது போன்ற டிப்ஸ்களை தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.
'நீங்களாக' இருக்கவும்
நீங்கள் யாரோ ஒருவரைப் போல காப்பியடிப்பதால் எந்த வித தாக்கமும் டேட்டிங்கில் கிடைக்காது. அது தன்னம்பிக்கையை குறைத்து உங்களை தோல்வியடையச் செய்யும். எனவே உங்கள் முதல் டேட்டிங்கை வெற்றிகரமானதாக்க விரும்பினால் நீங்கள் 'நீங்களாக' இருங்கள் மற்றும் சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத வேறொரு விஷயத்தை முயற்சி செய்தால், அது கண்டிப்பாக நன்மையில் முடியாது.
அமைதி
இது உங்களுடைய முதல் டேட்டிங் தான், முதல் போர் அல்ல. எனவே முதல் டேட்டிங்கின் போது அதிக டென்ஷனாக இருப்பதை அறவே தவிர்ப்பது நலம். மனோ ரீதியாக நடக்கும் இந்த போராட்டத்தில் நீங்கள் சில மோசமான தவறுகளை இழைத்து விடுவீர்கள். மேலும், உங்கள் மனம் அமைதியாக இருக்கும் வேளைகளில் நீங்கள் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். ஆனால், இதற்காக நீங்கள் பெரிய அளவு முயற்சிகள் எதுவும் எடுக்கத் தேவையில்லை. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருப்பதைப் போலவே சாதாரணமாக, அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
வசதியாக இருக்கவும் (Be Comfortable)
நீங்கள் உங்களை வசதியாக இருக்கும் வகையில் தயார் படுத்திக் கொண்டால் அது உங்கள் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். முதல் டேட்டிங்கில் உங்களுடைய பாதுகாப்பான எல்லையை விட்டு வெளியேறி வந்து, உங்களவரிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது சாதாரண விஷயமாக நடக்கும். ஆனால், இந்த முயற்சியில் உங்களுக்கு தெரியாத விஷயங்களை செய்யும் போது உங்களுடைய நம்பிக்கையை நீங்கள் வெகு விரைவில் இழந்து விடுவீர்கள் என்பதை உணர்ந்து செயல்படவும். எனவே, உங்களை மிகவும் வசதியான, மகிழ்ச்சியான மனநிலையில் வைத்துக் கொண்டீர்களானால், முதல் டேட்டிங் என்றென்றும் நினைவில் நிற்கும்.
உடை
நல்ல வகையில் உடை அணிவதன் மூலம் முதல் டேட்டிங்கை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். உங்களுடைய நம்பிக்கையை அதிகரிப்பதில் நீங்கள் அணியும் உடையும், பிற உடை சார்ந்த விஷயங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. மோசமான தலைமுடி மற்றும் உடையுடன் நீங்கள் முதல் டேட்டிங்கில் இருப்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள். அவ்வாறு இருந்தால், உங்கள் தன்னம்பிக்கை குறைவது மிகவும் தவிர்க்க முடியாத இயற்கை சம்பவமாகிவிடும். எனவே எப்பொழுதும் நல்ல உடையணிந்து செல்லவும். இந்த உடை நீங்கள் சந்திக்கும் இடத்திற்கு ஏற்றதாக இருப்பதும் நல்லது. ஏனெனில், ஒரு நைட் கிளப்பிற்கு ஃபார்மல் உடையில் செல்லத் தேவையில்லை தானே?
நடிகன்
இப்படி எல்லா விஷயங்களையும் செய்த பின்னரும், உங்களுக்கு போதிய அளவு நம்பிக்கை இல்லை என்று நினைத்தால் நடிக்கத் தொடங்கவும். நீங்கள் நம்பிக்கையை ஏற்கனவே இழந்து விட்டீர்கள் என்பதை உங்கள் துணை அறிய எப்பொழுதும் அனுமதிக்க வேண்டாம். அவ்வாறு நிகழ்ந்து விட்டால், 2-வது டேட்டிங் வாய்ப்பு கிடைக்கலாம். நீங்கள் உண்மையிலேயே மிகவும் சீரியஸாக எதிர்காலத்தை உருவாக்கவும், குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் விரும்பினால், ஒரு நல்ல நடிகனாக அவளிடம்/அவரிடம் வலம் வாருங்கள்.
இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்களுடைய முதல் டேட்டிங் அனுபவத்தை ஒரு நீண்ட கால உறவிற்கு அடித்தளமாக அமைக்க முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











