Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
உங்க காதலி இப்படி நடந்துக்கிட்டா அவங்க உங்க மேல கொலைவெறில இருக்காங்கனு அர்த்தமாம்... உஷாரா இருங்க!
பெண்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறிவது அவ்வளவு எளிதான காரியமல்ல. குறிப்பாக காதல் தொடர்பான உணர்ச்சிகள் என்று வரும்போது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
உங்களுக்கு உங்களின் காதலி பற்றி அனைத்து விஷயங்களும் தெரியும் என்று நீங்கள் கர்வத்துடன் இருந்தாலும் ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும் அவர்கள் உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள்.

சில நேரங்களில், நீங்கள் அவர்களின் செயல்கள் அல்லது அவர்களின் மனநிலை பார்த்து அதற்கேற்றாற் போல நடந்து கொள்ள வேண்டும். உங்கள் காதலி உங்கள் மீது கோபமாக இருக்கிறாரா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் உங்களின் எந்த செயல் அல்லது வார்த்தைகளுக்காக அவர் உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்பதை உங்களால் யூகிக்கவே முடியாது. பெண்கள் தங்கள் கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தாவிட்டாலும் தாங்கள் கோபமாக இருப்பதை சில அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
இந்த அறிகுறிகளை தெரிந்து கொண்டு உங்கள் காதலியை கோபம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒற்றை வார்த்தைகளில் பதில் சொல்வது
பெரும்பாலான பெண்கள் தங்கள் காதலரிடம் அதிகம் பேசுவதை விரும்புவார்கள். ஆனால் திடீரென உங்கள் காதலி உங்களிடம் பேசுவதை குறைத்தால் அல்லது ஒன்றிரண்டு வார்த்தைகளில் மட்டுமே ஏதாவது பேசினால் அவர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்பது உறுதி. உங்களின் எந்த செயல்கள் அவரின் கோபத்தைத் தூண்டியது என்பதை சிந்தியுங்கள் மற்றும் அதனை எப்படி சரி செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்குங்கள்.
பேசும் தொனியில் மாற்றம்
உங்கள் காதலி கடும் கோபத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள உதவும் எளிய வழி அவர்களின் குரல் தொனியில் மாற்றம். கோபமாக இருக்கும்போது அவர்களின் குரல் எப்போதும் போல இனிமையாக இருக்காது,மாறாக எரிச்சலாகவும் மற்றும் கிண்டலாகவும் இருக்கலாம். எனவே அவர்கள் பேசும் விதத்தில் மாற்றம் இருப்பதை நீங்கள் கண்டால், ஏதோ தவறு நடந்துள்ளது என்பதையும் , நீங்கள் செய்த ஏதோ ஒரு தவறுக்காக அவர் கோபமாக இருக்கிறார் என்ருர் அர்த்தம்.
அனைவரிடமும் இனிமையாக பழகி உங்கள் மீது மட்டும் கோபமாக இருப்பது
உங்கள் காதலி உங்கள் மீது கோபமாக இருந்தால் அதனை அனைவரிடமும் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் மற்றவர்களிடம் மிகவும் அன்பாகவும் இனிமையாகவும் இருக்க முடியும், ஆனால் உங்களிடம் அன்பாக இருக்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்களை கோபப்படுத்தியது நீங்கள். நீங்கள் அதனை கவனித்தால், அவர் உங்களை அவ்வளவு எளிதாக மன்னிக்கும் மனநிலையில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள், விரைவில் மன்னிப்பு கேட்பது நல்லது.
வேலைகளைத் தவிர்ப்பது
நீங்கள் இருவரும் அனைத்து வேலைகளையும் பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் கோபமாக இருக்கும்போது உங்களுடன் எந்த வேலையையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இது அவர்கள் உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருப்பதன் அறிகுறியாகும். ஆனால் சில சமயங்களில், பெண்கள் கோபமாக இருக்கும் போது, அனைத்து வேலைகளையும் அவர்களே செய்வார்கள், உங்களிடம் எந்த உதவியையும் கேட்க மாட்டார்கள். இந்த உச்சநிலைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், அவர்கள் உங்கள் மீது கொலைவெறியில் இருக்காங்கனு அர்த்தமாம்.
கண்களை அதிகம் சுழற்றுவது
கோபத்தை எப்போதும் வார்த்தைகள் மூலம் மட்டும்தான் சொல்ல வேண்டியது என்று அர்த்தமில்லை, அதை சில செயல்கள் மூலம் வெளிப்படுத்தலாம். உங்கள் ஒவ்வொரு சிறிய அசைவிற்கும் உங்கள் காதலி/மனைவி தன் கண்களை உருட்டினால், அவர்கள்ள் நிச்சயமாக ஏதோவொன்றிற்காக உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். சிறிது நேரம் அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, நீங்கள் செய்த தவறு என்னவென்பதை சிந்தியுங்கள்.



Click it and Unblock the Notifications

