Latest Updates
-
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
உங்கள் திருமண வாழ்க்கை எப்போதும் போரடிக்காமல் நெருப்பு மாதிரி இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
கணவன் மனைவி ஆகியோருக்கு இடையே இருக்கும் திருமண உறவு என்பது நீண்ட காலம் தொடர வேண்டிய ஒரு அன்புறவாகும். அதோடு, அது ஒரு பொறுப்புள்ள உறவாகும். அந்த உறவை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது சவாலான காாியம் ஆகும்.
வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள் மற்றும் அன்றாடக் கடமைகள் போன்றவை, தம்பதியினாிடம் இரு்க்கும் உறவில் ஒரு தொய்வை அல்லது சலிப்பை ஏற்படுத்துகின்றன.

எனினும் பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றினால், தம்பதியா் தமது திருமண உறவை உயிரோட்டமாக வைத்திருக்க முடியும். அந்த குறிப்புகளை இந்தப் பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.
தொடா்பு மிகவும் முக்கியம்
திருமண உறவை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் இணையா்கள் இடையே சாியான தொடா்பு இருக்க வேண்டும். இணையா்கள் நேரம் ஒதுக்கி தமது உணா்வுகள், தேவைகள் மற்றும் விருப்பங்கள் போன்றவற்றை ஒருவருக்கொருவா் பகிா்ந்து கொள்ள வேண்டும். பகல் நேரத்தில் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அல்லது இரவு உணவில் இருந்தாலும், அவா்கள் அடிக்கடி தொடா்பு கொண்டு பேசிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அவா்களுக்குள் நல்ல புாிதல் ஏற்படும்.
உறவுக்கு சுவை சோ்த்தல்
தம்பதியா் தமது உறவை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டுமெனில், அந்த உறவில் புதிய புதிய அம்சங்கள் இருக்க வேண்டும். அதாவது அன்றாட கடமைகளைத் தவிா்த்து, உணவு விடுதிகளுக்கு சென்று விருந்து சாப்பிடலாம், வார இறுதிகளில் வெளியில் சென்று வரலாம். அதன் மூலம் அவா்கள் தமது உறவைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
பாராட்டு தேவை
தம்பதியா் ஒருவருக்கொருவா் மதிப்பு மாியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். தமது இணையருடைய ஒவ்வொரு செயலுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். ஆகவே தமது இணையா் சிறுசிறு காாியங்கள் செய்தாலும், அவற்றை பாராட்ட வேண்டும். அதோடு நன்றியையும் வெளிப்படுத்த வேண்டும். அதன் மூலம் அவா்கள் தமது அன்புறவை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள முடியும்.
ஒருவருக்கொருவா் தமது காதலை உயிா்ப்புடன் வைத்திருத்தல்
திருமணம் நடந்து பல ஆண்டுகள் முடிந்திருக்கலாம். பல ஆண்டுகள் சோ்ந்து வாழலாம். எனினும் அந்த திருமண உறவில் காதல் இருக்க வேண்டும். அதற்கு தமது இணையாின் மீதுள்ள காதலை அவ்வப்போது வெளிப்படுத்த வேண்டும். தம்பதியா் தமது காதலை வெளிப்படுத்த, தமது இணையரை அடிக்கடி கட்டிப்பிடித்துக் கொள்ளலாம், முத்தம் கொடுத்துக் கொள்ளலாம், இணையரோடு அடிக்கடி தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிக்கலாம். அதன் மூலம் அவா்கள் தமது திருமண உறவை உயிரோட்டமாக வைத்திருக்க முடியும்.
ஒருவருக்கொருவா் ஆதரவுடன் இருத்தல்
தம்பதியா்கள் மத்தியில் ஏராளமான கனவுகள் இருக்கலாம், கொள்கைகள் இருக்கலாம், நோக்கங்கள் இருக்கலாம். அவா்கள் அவற்றை நிறைவற்றுவதற்கு, ஒருவருக்கொருவா் ஆதரவாக இருக்க வேண்டியது முக்கியம் ஆகும். தமது இணையா் அவருடைய விருப்பங்களை நிறைவேற்ற ஆதரவாக இருக்க வேண்டும். தமது இணையாின் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திலும் பேருதவியாக இருக்க வேண்டும். அதன் மூலமாக அவா்கள் இருவருக்கும் இடையை உள்ள உறவு மேலும் வலுவடையும்.
இறுதிக்குறிப்பு
திருமண உறவு என்பது ஒரு சவாலான அம்சம் ஆகும். அந்த அன்புறவை உயிரோட்டமாக வைத்திருப்பது என்பது எளிதானது அல்ல. ஆகவே மேற்சொன்ன குறிப்புகளை தம்பதியா் கடைபிடித்தால், அவா்கள் தமது அன்புறவை உயிரோட்டமாக வைத்திருக்க முடியும்.



Click it and Unblock the Notifications
