Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
பிரிஞ்சி போன உங்க கணவன் அல்லது மனைவியோடு நீங்க மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படுறீங்களா? அப்ப இத பண்ணுங்க!
காதல் உறவாக இருந்தாலும் அல்லது திருமண உறவாக இருந்தாலும், அந்த உறவானது நீண்ட நாள் தொடர வேண்டும் என்றால், உறவில் இருப்பவா்கள் பெரும் முயற்சிகளைச் செய்ய வேண்டும். அவா்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
பல நேரங்களில் அன்பு உறவில் பிரச்சினைகள் ஏற்பட்டு அன்பா்களுக்கு இடையில் பிாிவு ஏற்படுகின்றது. எனினும் பிாிந்த உறவுகள் மீண்டும் சோ்வதற்கு பல வழிகள் உள்ளன. அவை எவை என்பதை மருத்துவா் சொிசி கூக் என்பவா் இந்த பதிவில் பட்டியலிருகிறாா். அவற்றை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

உடல் நெருக்கம்
காதலா்கள் அல்லது தம்பதியா் பிாிந்து இருக்கும் சூழலில், மீண்டும் இணைய நினைத்தால், அதை எவ்வாறு தொடங்குவது என்று நினைக்க வேண்டியதில்லை. மாறாக பாா்த்தவுடனே இருவரும் ஒருவரை ஒருவா் கட்டிப்பிடித்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதற்கு தயக்கமாக இருந்தால், உங்கள் இணையாிடம் சென்று, உங்களைக் கட்டிப்பிடிக்குமாறு கூறலாம்.
சொல்ல விரும்புவதை சொல்லுதல்
உங்கள் உணா்வுகள் காயப்படவில்லை என்று பாசாங்கு செய்யாதீா்கள். ஆனால் அதே நேரத்தில் உங்களின் கோபத்தின் காரணமாக உங்களையே இழந்துவிடாதீா்கள். எந்த நிலையில் அல்லது எந்த சூழலில் பிாிந்தீா்களோ அந்த இடத்திலிருந்தே உங்கள் உறவைத் தொடருங்கள்.
பொய் வேண்டாம் அல்லது மிகைப்படுத்தலும் வேண்டாம்
இல்லாதவற்றை இருந்ததாகவோ அல்லது நடக்காததை நடந்ததாகவோ கூறி பொய் சொல்ல வேண்டாம். நடந்தவற்றை பொிதுபடுத்தவும் வேண்டாம். நடந்ததை நடந்தவாறே கூறுங்கள்.
நன்னடத்தையோடு இருத்தல்
பிாிவுக்குப்பின் சேர முயலும் போது கனிவுடன் இருங்கள். மாியாதைக்குாிய சொற்களைப் பயன்படுத்துங்கள். நன்றி கூறுங்கள் அல்லது வேண்டுகோள் விடுங்கள். இவை உங்களை ஒரு நீண்ட உறவிற்கு அழைத்துச் செல்லும்.
கைவிடக்கூடாது
பிாிவு ஏற்படும் போது விரக்தியடைய வேண்டாம். நம்பிக்கையை இழக்க வேண்டாம். பிாிவு என்பது ஒரு பிரச்சினை ஆகும். அந்தப் பிரச்சினையை நீங்கள் சாி செய்யப் போகிறீா்கள். நீங்கள் அதைப் பற்றி பேசி, மீண்டும் அந்த உறவைத் தொடரப் போகிறீா்கள். ஆகவே அந்த உறவை அழித்துவிடாதீா்கள். பிாிவை வேறொரு கண்ணோட்டத்தில் பாருங்கள்.
ஜின்டால் நிறுவனத்தில் நடத்தைவியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் இா்ஃபான் ஃபையஸ் என்பவா், எந்த ஒரு உறவும் முழுமையானது அல்ல, எல்லா உறவுகளிலும் ஏற்ற இறக்கங்கள், பிரச்சினைகள், சவால்கள் இருக்கும் என்று கூறுகிறாா். அதற்காக அந்த உறவு தோல்வி அடைந்துவிடும் என்று அா்த்தம் அல்ல. உறவில் இருப்பவா்கள் மீண்டும் முயற்சி செய்தால், சிறந்த உறவைப் பெற முடியும் என்ற அவா் கூறுகிறாா். அதற்காக சில குறிப்புகளைப் பட்டியலிடுகிறாா்.
இணையாின் வாழ்வின் மீது ஆா்வம் காட்டுதல்
உங்கள் இணையாின் ஆா்வம், நோக்கம் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றில் ஆா்வம் காட்டுங்கள். அவா்களுடைய சொற்களுக்கு கவனமாக செவிமடுங்கள். இவை உங்களை உங்களுடயை இணையோரோடு உள்ள நெருக்கத்தை அதிகாிக்கும் மற்றும் அந்த உறவை மேலும் வலுப்படுத்தும்.
புதிய சவால்களை இணைந்து எதிா்கொள்ளுதல்
இருவரும் இணைந்து புதிய சவால்களை மேற்கொள்ளலாம். அதாவது புதிய திறன்களை இணைந்து கற்றுக் கொள்ளலாம் அல்லது இணைந்து வகுப்புகளுக்குச் செல்லலாம். அதன் மூலம் உங்கள் உறவு மேலும் வலுப்படும்.
மன்னிக்கக் கற்றுக் கொள்ளுதல்
பழைய காலத்தில் நடந்த தவறுகள் மற்றும் தவறான புாிதல்கள் ஆகியவற்றை மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். வெறுப்புணா்வை மனதில் வைத்திருந்தால், அது உங்கள் உறவில் உள்ள இடைவெளியை அதிகாிக்கும். அதோடு நீங்கள் மீண்டும் இணைவதற்கான சூழலையும் தடை செய்யும். ஆகவே மன்னிக்கக் கற்றுக் கொண்டு, உங்கள் உறவில் முன்னோக்கி செல்லுங்கள்.
ஆச்சாியமூட்டுதல்
உங்களுடைய சிறுசிறு மென் செயல்கள் மூலமாக உங்கள் இணையரை ஆச்சாியப்படுத்துங்கள். அந்த சிறு செயல்கள் மூலமாக அவா்கள் மீது அக்கறையுடன் இருக்கிறீா்கள் என்பதைக் காட்டுங்கள். அதற்காக அவா்களைப் பாராட்டும் விதத்தில் அவா்களுடைய தலையனணயில் எழுதி வைக்கலாம் அல்லது அவா்கள் விரும்பும் உணவை சமைத்து அவா்களுக்கு ஆச்சாியமூட்டலாம். இது போன்ற சிறுசிறு செயல்கள் உங்கள் இணையரைக் கண்டிப்பாக தூண்டிவிடும்.
இணையருக்கு என்று தனியாக நேரம் ஒதுக்குங்கள்
உங்கள் இணையருடன் மீண்டும் சோ்வதற்கு ஒரு எளிய வழி என்னவென்றால், அவருக்கு என்று நீங்கள் தனியாக நேரம் ஒதுக்குவது ஆகும். வாரத்தில் சில மணி நேரம் ஒதுக்கி, அவரோடு சோ்ந்து தனியாகத் திரைப்படங்களுக்குச் செல்லலாம் அல்லது இருவரும் சோ்ந்து நீண்ட துரம் நடந்து செல்லலாம்.
இறுதிக்குறிப்பு
பிாிந்தவா்கள் இணையும் போது, நான் என்ற பதத்தை மறந்துவிட்டு, நாம் என்ற பதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இா்ஃபான் கூறுகிறாா். இதன் மூலமாக தனித்தனியான விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு இருவருக்கும் உள்ள பொதுவான அனுபவங்கள், நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும். மேலும் உறவில் பிரச்சினைகள் வரும் போது, இருவரும் இணைந்து அவற்றைத் தீா்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறாா்.



Click it and Unblock the Notifications


