Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க.. இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்..!
திருமணமான தம்பதிகள் செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜோதிடர் பங்கஜ் பதக் விளக்கியுள்ளார். இவற்றைச் செய்வதால் வீட்டில் அமைதியின்மை உண்டாகும். இது குடும்பத்திற்கு நல்லதல்ல. எனவே குறிப்பாக கணவன்-மனைவி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் வீட்டில் அமைதி நிலவும்.. அதனால் அவர்கள் இடையே அன்பு அதிகரிக்கும். அது என்னென்ன என்பதை பற்றி இப்போது தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு வீட்டில் சண்டைகளை போடக்கூடாது. முடிந்தவரை இரவில் சண்டையிடாமல் கொஞ்ச காலம் என்று ஜோதிடர் கூறுகிறார். இது உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தை அதிகரிக்கிறது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே அதிகமான பிரச்சனைகள்தான் வளரும் என்கிறது ஜோதிடம்...

மேலும், இது வீட்டில் உள்ளவர்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் உறவை சீர்குலைத்து, வீட்டின் மகிழ்ச்சியையும் அமைதியையும் கெடுக்கும். எனவேவீட்டில் எப்போது நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க உணவு உண்டபின் பாத்திரத்தை சுத்தம் செய்து வையுங்கள். சமயலறைய சுத்தமாக வைத்திருங்கள்..
அதை தாண்டி சில நேரங்களில் தம்பதிகளுக்கு இடையில் பிரச்சனைகள் எழும். அப்போது கடந்த கால தவறுகளை முன்வைத்து பேசுவது வாடிக்கையாக வைத்திருப்பார்கள். ஆனால், நிகழ்காலத்தில இருக்கும் பிரச்சனைகளை கவனம் செலுத்துவதை விடுத்து, சண்டையின்போது பழைய பிரச்சனைகளை அதிகம் பேசி மேலும் வாக்குவாதங்களை வளர்ப்பார்கள். இது எந்தவகையிலும் பயன்தராது என்பதால், பழைய தவறுகளை பேசுவதை தவிர்த்து விடுங்கள்..
சண்டையின்போது முடிந்தளவுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும். பிரச்சனைகளுக்கு தீர்வு உடனடியாக கிடைக்காவிட்டாலும், கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். ஆக்ரோஷம் குறையும்போது, தீர்வுகள் எளிமையாக கிடைக்கும்.
உங்கள் பார்ட்னர் விரும்பும் அல்லது கூறும் விஷயங்களை புரிந்துகொள்வதற்காக, அதனை உங்களிடம் நீங்களே சத்தமாக சொல்லிக்கொள்ளுங்கள். ஒரு விஷயத்தை சத்தமாக சொல்லும்போது மனித மூளையானது எளிதில் கிரகித்துக்கொண்டு, அதற்கேற்ப நம் செயல்பாடுகளை செய்ய தூண்டும்.
அவர்கள் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் என்ற ஆதங்கம் இருக்கும். உங்களுக்கு சரி என நினைக்கும் கருத்துக்களை, கோபத்துக்காக ஏற்றுக்கொள்ள மறுக்காதீர்கள். இது இருவருக்கும் இடையே பரஸ்பர புரிதலை அதிகப்படுத்தும்.
புதிதாக திருமணமான தம்பதிகள் சில விஷயங்கள் தெரியாவிட்டால் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக சில பழக்கவழக்கங்களை புதுமணத் தம்பதிகள் பின்பற்றினால், அவர்களது திருமண வாழ்க்கை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இருவரும் ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிட வேண்டும்.
திருமண வாழ்க்கையின் ரகசியம் படுக்கையறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தனிப்பட்ட தருணங்களை அனுபவிக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த இனிமையான தருணங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மிக முக்கியமாக, தூங்குவதற்கு முன் படுக்கையறையில் உள்ள தருணங்கள் மறக்கமுடியாதவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதனால்தான் தம்பதிகள் இரவில் படுக்கும் முன் சில டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும். அந்த உதவிக்குறிப்புகளைப் பார்ப்போம்...
1. கணவனும் மனைவியும் இரவில் படுக்கும் முன் மொபைல் போன் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் மொபைலை ஒதுக்கி வைக்கவும். இல்லையெனில், மொபைல் போன் இருவருக்குமான நெருக்கத்தை குறைக்கும் அபாயம் உள்ளது.
2. படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒன்றாக சேர்ந்து பேசி காதலை பரிமாறிக்கொள்ளுங்கள்.. தூங்கும் போது ஃபைனான்ஸ், ஆபீஸ் வேலை என்று பேசாதீர்கள். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
3. நல்ல உறக்கத்திற்கு கணவன் மனைவி இருவரும் சிறிதளவு உணவை உட்கொள்ள வேண்டும். இரவில் மிதமான உணவு ஆரோக்கியத்திற்கும் நல்ல தூக்கத்திற்கும் நல்லது.
4. இரவில் படுக்கையறையில் அமர்ந்து அலுவலக வேலைகளைச் செய்யாதீர்கள். தூங்கும் போது உங்கள் துணையை கேலி செய்யாதீர்கள்.
5. தூங்குவதற்கு முன் உங்கள் துணையிடம் நன்கு பேசுங்கள். இது இருவருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துகிறது..



Click it and Unblock the Notifications











