Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஜோடிக்கு என்ன குழந்தை பிறந்தது தெரியுமா?
Deepika Padukone Ranveer Singh Blessed With A Baby Girl: பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியனருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.. இந்த நிலையில், ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களின் முதல் குழந்தையான பெண் குழந்தையை ஞாயிற்றுக்கிழமையான இன்று செப்டம்பர் 8ஆம் தேதி பெற்றெடுத்துள்ளனர் என தகவல்கள வெளியாகியுள்ளது.. ஆனால் இன்னும் தம்பதியிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவரவில்லை..

திருமணம் பற்றி
ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 6 வருடங்களாக காதலித்து வந்தனர்.. அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். தற்போது அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோன் சிறந்து விளங்குகிறார்..
கர்ப்பம் பற்றி அறிவித்தது
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் தீபிகா மற்றும் ரன்வீர் தம்பதியினர் தங்களின் இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்து இருந்தனர். மேலும், அவர்கள் தங்கள் குழந்தையை வரும் செப்டம்பர் 2024 ஆம் ஆண்டில் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். அதே போலவே இபோது செப்டம்பர் 8ஆம் தேதியான இன்று விநாயகஎ சதுர்த்திக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதியனருக்கு என்ன குழந்தை?
இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள். இதனால் அவர்களது குடும்பம் மகிழ்ச்சியில் வெள்ளத்தில் இருக்கிறது. மேலும் தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் பலரும் தங்களது வாழ்த்தினை கூறி வருகின்றனர்..
பேபி பம் போட்டோஸ்
இதற்கு முன்னதாக தீபிகா படுகோன் ஒரு ஃபோட்டோஷூட்டை ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். அதில் அவர் ரன்வீருடன் தனது பேபி பம்பை மகிழ்ச்சியுடன் காட்டினார்.மேலும் இந்த புகைப்படம் ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் காதல் கதை
முன்னதாக நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த தீபிகா படுகோன், சில பிரச்சனைகளால் சில ஆண்டுகள் பிரிந்து இருந்தனர் .. ஆனால் சில காலம் கழித்து ராம் லீலா படத்தில் ரன்வீர் சிங்குடன் நடித்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இதன் பின்னர் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் இணைத்து பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
தீபிகா படுகோன் எப்போது படங்களில் நடிக்க தொடங்குவார்?
தீபிகா 2025 ஆம் ஆண்டில் வேலையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த சில மாதங்களை தனது குழந்தைக்காக அர்ப்பணிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. "அவரது மகப்பேறு விடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும். அதன்பிறகு, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பிரபாஸ் ஆகியோருடன் நடித்த கல்கியின் தொடர்ச்சியின் படப்பிடிப்பில் அவர் உடனடியாக பிஸியாகி விடுவார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..



Click it and Unblock the Notifications











