Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தம்பதிகளே! உங்க செக்ஸ் வாழ்க்கை திருப்தி இல்லாமல் இருப்பதற்கு இவைதான் காரணமாம்...உடனே மாத்துங்க!
பெரும்பாலான தம்பதிகளுக்கு அவர்களின் பாலியல் வாழ்க்கை திருப்தியற்றதாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் இருக்கிறது. இது தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கம் மற்றும் பிணைப்பை குறைத்து இடைவெளியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தம்பதிகள் தங்கள் பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்ற சில புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்.
பாலியல் சலிப்பு ஏற்படுவது என்பது ஒருவரின் பாலியல் அனுபவங்களில் அதிருப்தி அல்லது ஆர்வமின்மை உணர்வு ஏற்படுவதைக் குறிக்கிறது. இது தனிநபர்களையும் தம்பதிகளின் உறவுகளையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினை.

இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கிறதா? உங்கள் பாலியல் வாழ்க்கை சலிப்பானதாக இருப்பதற்கான அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
நெருக்கம் குறைந்திருப்பது
உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் நெருக்கம் குறைந்திருப்பது உறவுக்கு நல்லதல்ல. இது உங்கள் பாலியல் வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கும். தம்பதிகள் இருவரும் நீண்ட காலமாக உடலுறவு கொள்ளாமல் இருந்தால் அல்லது உடலுறவு கொள்ள உங்களை நீங்களே கட்டாயப்படுத்தும் சூழ்நிலை இருந்தால், அது சலிப்பான பாலியல் வாழ்க்கைக்கு அறிகுறியாக இருக்கலாம்.
உங்கள் பாலியல் வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும்போது, நெருக்கம் குறையத் தொடங்கலாம். இது தம்பதிகளுக்கு இடையே இருக்கும் உணர்ச்சித் தொடர்பை பாதிக்கும்.
உடலுறவில் இன்பம் குறைவது
தம்பதிகள் உடலுறவு கொள்ளும்போது, உடலுறவில் இன்பமும் திருப்தியும் இருக்க வேண்டும். இது உறவை மகிழ்ச்சியாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும். உடலுறவு வழக்கமானதாகவோ அல்லது சலிப்பாகவோ மாறும்போது, அது தம்பதிகள் இருவரின் இன்பத்தையும் குறைக்கும்.
இந்த நேரங்களில், செக்ஸ் பொம்மைகள் மற்றும் பிற விஷயங்களை உள்ளடக்கிய பல்வேறு வழிகளில் உங்கள் பாலியல் வாழ்க்கையை மசாலாவாக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
உடலுறவில் ஆர்வம் இழப்பது
சலிப்பான பாலியல் வாழ்க்கையை கொண்டிருக்கும் நபர்கள், உடலுறவில் ஆர்வத்தை இழக்கலாம். பாலியல் ஆசை மற்றும் தூண்டுதலைக் குறைக்கலாம். உடல்நலம், மன அதிர்ச்சி, மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் உடலுறவில் ஆர்வ இழப்பு ஏற்படலாம். இது உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வெகுவாக பாதிக்கும்.
இறுக்கமான உறவுகள்
உங்களின் சலிப்பான பாலியல் வாழ்க்கைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அது உறவுகளில் மன உளைச்சல், சண்டை மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும். உறவில் ஏற்படும் சண்டைகள் மன அழுத்தத்தை அதிகரித்து, பிரிவினை அல்லது விவாகரத்துக்கு வழிவகுக்கும்.
உடல் குறித்து தாழ்வு மனப்பான்மை
தனிநபர்கள் தங்கள் சொந்த பாலியல் செயல்திறன் அல்லது கவர்ச்சி பற்றி எதிர்மறையான எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் கொண்டிருக்கலாம். இது ஒரு நபரின் நம்பிக்கை மற்றும் சுயமரியாதை குறைவதற்கு வழிவகுக்கும்.
தங்கள் உடல் பற்றி தாங்களே தாழ்வாக நினைத்துக்கொண்டிருப்பதன் காரணமாக பலர் உடலுறவில் ஈடுபடுவதற்கு தயங்குகிறார்கள். அப்படியே உடலுறவில் ஈடுபட்டாலும் தங்களை வசதியாக வைத்துக்கொள்ள தயங்குகிறார்கள்.
துரோகம்
தம்பதிகள் தங்கள் பாலியல் வாழ்க்கையில் திருப்தியடையாதபோது, அவர்கள் வேறு நபர்களை தேடிச் செல்லலாம். இது திருமணத்திற்கு புறம்பான கள்ள உறவில் ஈடுபடும் துரோகத்திற்கு வழிவகுக்கும். உங்கள் துணைக்கு செய்யும் துரோகத்தால் உறவில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகலாம்.
ஆரோக்கியம்
உடல்நலம் உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கிறதைப் போலவே, பிற காரணங்களால் ஏற்படும் பாலியல் சலிப்பு மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வுக்கு பங்களிக்கும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications



