Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கின்றதாம் தெரியுமா?
பெண்களுக்கு ஆண்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ, அதே அளவுக்கு ஆண்களும் பெண்களிடம் எதிர்பார்ப்பார்கள்.
பொதுவாக நிறையப் பெண்களுக்கு ஆண்களை கண்டாலே பிடிக்காது என்று கூறுவதுண்டு. நடிகர் விஷால் நடித்த "தீராத விளையாட்டு பிள்ளை" படத்தில் ஜோதி என்கிற கேரக்டருக்கு ஆண்களைக் கண்டாலே பிடிக்காது என்ற குணாதிசயம் கொண்டிருப்பார். அவரை ஈர்க்கவே பெண்களைக் கண்டாலே பிடிக்காது என்று விஷால் கூறுவார். பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ்ந்தால் நல்லா இருக்கும் என்று கூட சொல்வார். உண்மையில் இது சாத்தியமா என்றால் இல்லை. ஆனால், எப்படி ஆண்களைப் பிடிக்காத பெண்கள் இருக்கிறார்களோ, அதேப்போல பெண்களைப் பிடிக்காத ஆண்களும் இருக்கிறார்கள்.

ஆண், பெண், திருநங்கை, திரு நம்பிகள் என்ற பாலினங்கள் இருக்கிறது. ஒவ்வொரு பாலினத்துக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். ஆனால், சில காரணங்களுக்காகப் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்கள். அவை என்னென்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

முன்னுரிமை அளிக்காமல் இருக்கும் பெண்கள்
பெண்களுக்கு ஆண்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ, அதே அளவுக்கு ஆண்களும் பெண்களிடம் எதிர்பார்ப்பார்கள். கணவனாக இருந்தாலும், காதலானாக இருந்தாலும், நண்பனாக இருந்தாலும் தங்களுக்கு முன்னுரிமை தராத பெண்களை ஆண்களுக்குப் பிடிக்காது. ஒவ்வொரு விஷயத்தையும் தன்னிடம் சொல்லிவிட்டுத் தான் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
இது ஒரு வகையான ஆணாதிக்க உணர்வு என்று கூறினாலும், ஆணாதிக்கம் இல்லாதவர்களும் அன்பின் பால் இவ்வாறு நடந்து கொள்வது உண்டு. சிறுசிறு விஷயத்திலும் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அவை இல்லாத பட்சத்தில் கோபமும், வெறுப்பும் நிறைந்து அவர்களுக்கு அந்த பெண்ணையே பிடிக்காமல் போய்விடுகிறது.

பெண்ணியம் பேசும் பெண்கள்
பொதுவாக பெண்ணியம் பேசும் பெண்களை நிறைய ஆண்களுக்குப் பிடிக்காது. காரணம் என்ன என்றால் சில பெண்ணியவாதிகள் சில ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த ஆண் சமூகத்தையும் இழிவாகப் பேசுவார்கள். இந்த ஆண்களே இப்படிதான் என்ற வார்த்தை அவர்களை மிகவும் வெறுப்படைய செய்யும்.
ஆணாதிக்க மனோபாவம் கொண்ட ஆண்களுக்கு பெண்ணியம் பேசும் பெண்களை சுத்தமாகப் பிடிக்காது. ஏனென்றால், அவர்கள் எல்லா விஷயத்திலும் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்கள் பெண்கள் தங்களுக்குக் கீழ்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

சந்தேகம் கொள்ளும் பெண்கள்
சந்தேகம் கொள்ளும் பெண்களை பொதுவாக எந்த ஆண்களுக்கும் பிடிக்காது. வாழ்க்கையே நரகமாகிவிடும் என்று அச்சம் கொள்வார்கள். அப்பா, அண்ணன், கணவன், நண்பன் ஆகிய எந்த உறவுக்குள் இருந்தாலும் எப்போதும் சந்தேகக் கண்ணுடனே பார்க்கும் அம்மா, தங்கை, மனைவி, தோழி ஆகியவர்கள் மேல் ஒருவித வெறுப்பு ஏற்படும்.
நாளடைவில் இந்த வெறுப்பால் அவர்களை பிடிக்காமலே போய்விடும். கணவன் மனைவி இடையே வரும் விவாகரத்து வழக்குகளில் நிறைய வழக்குகளுக்கு சந்தேகம் கொள்வது முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது. சந்தேகம் என்பது ஒருவித மனநோய். இது ஆண்களுக்கும், பெண்களுக்கு பிடிக்காத பொதுவான விஷயம்தான்.

அதிகமாக பேசும் பெண்கள்
"சுவிச் போட்டால் சுத்தும் ஃபேனை போல" வாயை திறந்தாலே வளவளவென பேசும் பெண்களை ஆண்களுக்கு அறவே பிடிக்காது. கணவன் மனைவிக்குள்ளே இது தினமும் நடக்கும் விஷயம்தான். பொதுவாக எல்லார் வீட்டிலும் கணவர் அமைதியாக இருப்பார். பெண்கள் கொஞ்சம் நேரம் கூட வாயை மூடாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
அலுவலகம் விட்டு வீடு வரும் கணவன் சற்று மூளைக்கும், உடலுக்கும் ஓய்வு கொடுக்கலாம் என நினைக்கும் போது இடைவெளி விடாமல் மனைவி பேசிக் கொண்டிருந்தால் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாவார்கள். யார் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என தெரியாமல் தான் நினைப்பதை பேசிக் கொண்டிருக்கும் பெண்களை கண்டால் ஆண்கள் பத்தடி தாண்டி ஓடிவிடுவார்கள்.

தங்களுடைய தேவைக்காகப் பழகும் பெண்கள்
தங்களுடைய தேவைக்காகப் பழகும் பெண்களை ஆண்கள் விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள். அவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருப்பார்கள். அவர்களிடம் ஆண்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்களுடைய தேவை பூர்த்தியடைந்தால் மட்டுமே போதும் என்ற மனநிலையில் இருப்பார்கள்.
பிறரின் சந்தோஷம், கவலை ஆகியவற்றில் பங்கு கொள்ள மாட்டார்கள். சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்வார்கள். ஆதலால், இவ்வகையான பெண்களை ஆண்கள் வெறுப்பார்கள்.

தற்பெருமை பேசும் பெண்கள்
ஒருவர் தங்களுடைய தகுதிக்கு மீறி தன்னை உயர்த்தி பிடித்து பேசிக் கொண்டிருப்பதைத் தற்பெருமை என்கிறோம். எந்த நேரமும் தன்னை புகழ்ந்தே கொண்டே பேசிக்கொண்டிருக்கும் பெண்களை ஆண்கள் மதிக்க மாட்டார்கள். தன் சுய பெருமையைப் பேசுவதன் மூலம் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆண்கள் கடுப்படைவார்கள்.
தற்பெருமை பேசும் பெண்களை சீன் போடும் பெண்கள் என்றும் ஆண்கள் கூறுவார்கள். தன்னடக்கம் கொண்ட பெண்களையே ஆண்களுக்கு அதிகம் பிடிக்கும். அதற்கு தங்களுடைய சுய மரியாதையை விட்டு பெண்கள் இருக்க வேண்டும் என்று சில ஆண்கள் நினைக்க மாட்டார்கள்.

அதிக செலவு செய்யும் பெண்கள்
இந்த காலகட்டத்தில் ஷாப்பிங் என்பது வளர்ந்து வரும் நவீன நாகரீகமாக மக்களிடையே கருதப்படுகிறது. மாதம் ஒரு முறை என்பது போய் தற்போது வாரம் ஒரு முறை ஷாப்பிங் என்றாகிவிட்டது. பெண்கள் தற்போது கார்பரேட் உலகிற்குள் சிக்கிக் கொண்டு ஆடம்பரத்துக்காக அதிக செலவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்த வகையில் வீட்டில் உள்ள ஆண்கள் சிக்கனமாக இருக்க நினைப்பார்கள். ஆனால், பெண்கள் ஷாப்பிங் செய்வதையே ஒரு பொழுதுபோக்காக வைத்திருப்பார்கள். இதனால், அதிக செலவு செய்யும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்ப மாட்டார்கள்.

நாடகம் பார்க்கும் பெண்கள்
நாடகம் பார்ப்பது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று ஆண்கள் கூறுவார்கள். ஏனென்றால் சீரியலில் மூழ்கிப் போயிருக்கும் பெண்களிடம் அதிக செண்டிமெண்ட் காணப்படும். உண்மை வாழ்க்கை எது, சீரியல் வாழ்க்கை எது என்று புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள்.
'சீரியல் பார்த்தே உருப்புடாமா போன வீடு இருக்குனு' ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை கூறுவார்கள். அப்படியும் திருந்தாமல் சீரியல் பார்க்கும் நேரம் முழுவதையும் தங்களையே அந்த நாடகத்திற்காக அர்ப்பணித்திருப்பார்கள் சீரியல் பார்க்கும் பெண்கள். இதனால், நாடகம் பார்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது.



Click it and Unblock the Notifications











