Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த விஷயங்களை கூறிவிட்டால் மாமியார், மருமகள் இடையே பிரச்சினையே வராதாம் தெரிஞ்சிக்கோங்க...!
மாமியார், மருமகள் உறவு என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு வீட்டில் மாமியார், மருமகள் உறவு சுமூகமாக இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது.
இந்த பூமி தோன்றிய காலம் முதலே ஓயாத ஒரு பனிப்போர் என்றால் அது மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே இருக்கும் பனிபோர்தான். மாமியார், மருமகள் இடையே இருக்கும் உறவானது சிக்கலும், சுவாரஸ்யமும் நிறைந்த ஒன்றாகும். மாமியார், மருமகள் இடையே இருக்கும் அழகிய உறவை சிதைக்கும் பெருமை நமது திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையுமே சேரும்.

மாமியார், மருமகள் உறவு என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு வீட்டில் மாமியார், மருமகள் உறவு சுமூகமாக இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. வீட்டிற்கு வரும் மருமகள் தன் மாமியாரிடம் சில விஷயங்களை முன்கூட்டியே கூறிவிட்டால் அவர்களுக்குள் பிரச்சினைகள் எழும் வாய்ப்புகள் பெருமளவில் குறைந்துவிடும். இந்த பதிவில் பெண்கள் தங்கள் மாமியாரிடம் கூறவேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உங்கள் மகனை நான் நேசிக்கிறேன்
பெண்கள் தங்கள் மாமியாரிடம் முதலில் கூற வேண்டியது இதைத்தான். ஏனெனில் தான் பாசமாக வளர்த்த மகனின் எதிர்காலம் குறித்து அனைத்து அம்மாக்களுக்கும் ஒரு பயம் இருக்கும். எனவே முன்கூட்டியே உங்கள் கணவர் மீதான உங்களின் அன்பை அவர்களுக்கு புரிய வைப்பது அவர்களின் இந்த பயத்தை போக்கும்.

உங்களின் இடத்தை நான் எடுத்துக்கொள்ள வரவில்லை
தன்னை தவிர்த்து தன் மகனின் வாழ்வில் இப்போது வேறொரு பெண் இருக்கிறாள் என்பதை எந்த அம்மாவாலும் உடனடியாக ஏற்றுக்கொள்ள இயலாது. தன் மகன் மீதான தன்னுடைய உரிமை போய்விடுமோ என்று அவர்களுக்குள் எழும் பயமும் நியாயமானதுதான். எனவே உங்கள் கணவர் அவரின் அம்மாவை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை அவரிடம் கூறுங்கள். நான் உங்கள் இடத்தை பிடித்துக்கொள்ள வரவில்லை, பகிர்ந்து கொள்ளவே வந்துள்ளேன் என்பதை அவருக்கு உணர்த்துங்கள்.

உங்களை நான் மதிக்கிறேன்
வயதில் மூத்தவர்கள் இளையவர்களிடம் நிச்சயம் மரியாதையை எதிர்பார்ப்பார்கள். என் கணவரான உங்கள் மகனை வளர்ப்பதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நான் அறிவேன் அதை நான் மதிக்கிறேன் என்று கூறுங்கள். என் அம்மாவுடன் நான் எப்படி இருந்தேனே அதேபோல உங்களிடமும் இருக்க நான் கண்டிப்பாக முயலுவேன் என்று கூறுங்கள்.

உங்களின் வழிகாட்டுதல் வேண்டும்
உங்களுக்கான தனித்துவம் என்பது அவசியமான ஒன்று ஆனால் அதற்காக அவர்களின் குறுக்கீட்டை நீங்கள் தவிர்க்க வேண்டுமென்ற அவசியமில்லை. எனவே அதனை அவர்களுக்கு புரிய வையுங்கள். குழந்தை வளர்ப்பு முதல் சமையலறை முதல் அவர்களின் வழிகாட்டுதல் வேண்டுமென்று அவர்களுக்கு உணருங்கள்.

முரண்பாடுகள் எழலாம்
ஆம் கண்டிப்பாக உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் எழலாம். ஆனால் அதனை எவ்வளவு விரைவில் சரிசெய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சரி செய்ய நீங்கள் விரும்புவதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

நான் பர்பெக்ட் இல்லை
இந்த உலகத்தில் யாருமே பரபிக்ட் கிடையாது. உங்களின் மாமியாரிடம் உங்களிடம் இருக்கும் குறைகளையும் அதனை சரிசெய்து கொள்ள நீங்கள் செய்யக்கூடிய முயற்சிகளையும் அவர்களிடம் விளக்குங்கள்.

என்னை நம்புங்கள்
உங்களின் வீட்டுக்குள்ளும், வாழ்க்கைக்குள்ளும் திடீரென ஒரு புதிய நபரை ஏற்றுக்கொள்வது என்பது கடினம்தான் என்று எனக்கு தெரியும். ஆனால் என்னால் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி கூடும், உங்களின் சுமை குறையும் என்று நீங்கள் நம்பவேண்டும்.

நாங்கள் குழந்தை வளர்க்கும் முறை வித்தியாசமானது
நீங்கள் உங்கள் குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட விதத்தில் வளர்த்திருப்பீர்கள், அதற்காக நானும் எனது குழந்தையை அதேபோல வளர்க்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களின் அறிவுரைகள் எப்பொழுதும் எனக்கும் தேவைதான், ஆனால் என் விருப்பப்படியும் குழந்தையை வளர்க்க அனுமதியுங்கள்.



Click it and Unblock the Notifications











