Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
உங்க கணவரிடம் இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலியாம்... உங்க கணவரிடம் இருக்கா?
உங்கள் மதிப்பு என்ன என்பதை ஒரு நல்ல ஆண் துணை அறிவார். உங்கள் தகுதியை அவரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் யார் என்பதை அவர் மதிப்பார் மற்றும் பாராட்டுவார்.
ஒரு திருமண உறவில் அல்லது உறவில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து வாழும்போது, பல்வேறு பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. ஏனெனில், உறவில் யார் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அவர்களின் விருப்பம் என்ன? எவ்வாறு ஒருவரை புரிந்துகொள்வது? போன்ற பல்வேறு விஷயங்களால் இருவருக்குள்ளும் பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுவாக இந்திய உறவில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் நபர்களாக இருக்கிறார்கள். பெண்கள் அவர்கள் சொல்வதை கேட்கும் நபராக இருக்கிறார்கள். இது ஒரு நச்சுத்தன்மையான அல்லது மோசமான உறவுக்கு வழிவகுக்கும். இது உங்கள் உறவை முற்றிலும் பாதிக்கும். ஆனால், உறவில் அனைத்து ஆண்களும் நச்சுத்தன்மை உடையவர்கள் அல்ல.

நெறிமுறைகள், மதிப்புகள் மற்றும் தூய அன்பு ஆகியவற்றுடன் உறவை வலுவாக வைத்திருக்கும் நல்ல ஆண்களும் உள்ளனர். அவர்கள் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களை பக்குவமாக கையாள்கின்றனர். இந்த வகையான மக்கள் உறவுகளில் மிகவும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். உறவுகளில் நல்ல கணவன் அல்லது காதலன் செய்யயும் சில விஷயங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தோற்றம் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டார்
ஒரு நல்ல மனிதர் உங்கள் தோற்றத்தைப் பற்றி ஒருபோதும் கருத்து தெரிவிக்க மாட்டார். மோசமான கருத்துக்களைச் சொல்லி உங்கள் சுயமரியாதையைக் குறைக்க மாட்டார் மற்றும் உங்கள் மனதை காயப்படுத்த மாட்டார். அவர் உங்களை ஏற்றுக்கொள்வதற்கும் நம்பிக்கையுடன் இருக்கவும் உங்களை ஊக்குவிப்பார்.

தனியுரிமையை ஒருபோதும் ஆக்கிரமிக்க மாட்டார்
ஒரு நல்ல ஆண், ஒருபோதும் எல்லைகளைத் தாண்டி உங்கள் தனிப்பட்ட இடத்திற்குள் நுழைய முயற்சிக்க மாட்டார். அவர் உங்களுக்கென போதுமான நேரத்தையும் இடத்தையும் தருவார். அவர் உங்கள் ஃபோனைப் பார்க்க மாட்டார், உங்கள் உரைகள் அல்லது செய்திகளைப் படிக்க மாட்டார் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். உறவில் உங்களுக்கு சொந்த இடம் தேவை என்று நினைத்து, அதில் சரியாக நடந்துகொள்வார்.

உங்களை ஒருபோதும் மட்டம் தட்ட மாட்டார்
நீங்கள் உண்மையிலேயே விரும்பும் ஒன்றைச் செய்ய முயற்சித்தால், ஒரு நல்ல மனிதர் உங்களை ஒருபோதும் மட்டம் தட்ட மாட்டார். அவர்கள் உங்கள் முடிவை முற்றிலுமாக ஆதரிப்பார்களா? என்று கேள்விக்குறி இருந்தாலும், அவர்கள் நிச்சயமாக உங்கள் விருப்பத்தை மதிப்பார்கள். அவருடைய பக்கத்திலிருந்து நீங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டீர்கள். மேலும், அவரிடமிருந்து ஊக்கம் மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பெறலாம்.

உங்கள் மதிப்பை அவரிடம் நிரூபிக்க வேண்டியதில்லை
உங்கள் மதிப்பு என்ன என்பதை ஒரு நல்ல ஆண் துணை அறிவார். உங்கள் தகுதியை அவரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் யார் என்பதை அவர் மதிப்பார் மற்றும் பாராட்டுவார். அவரிடம் உங்களை நிரூபிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் நிமிடம், எப்போது விலகிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது விருப்பமாக உணர மாட்டார்
ஒரு நல்ல மனிதர் உங்களை உறவில் இரண்டாம் பட்சமாக உணர மாட்டார். அவர் உங்களுக்கு சரியான வழியில் முன்னுரிமை அளிப்பார் மற்றும் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். நீங்கள் எப்பொழுதும் முக்கியமற்றவராக உணராமல் உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் அவர் கடைப்பிடிப்பார் மற்றும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

முக்கியமான விவாதங்களை தவிர்க்கமாட்டார்
உங்கள் உறவைச் சுற்றியுள்ள முக்கியமான கேள்விகளை மறுக்கவோ அல்லது தவிர்க்கவோ அவர் ஒருபோதும் முயற்சிக்க மாட்டார். அவர் எப்போதும் தேவையான ஆரோக்கியமான உரையாடல்களுக்குத் தயாராக இருப்பார். ஏனென்றால் உங்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொள்வார்.



Click it and Unblock the Notifications