For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் விசித்திரமான பாலியல் ஆசைகள் உங்கள் உறவில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா?

ஒவ்வொரு ஜோடியின் பாலியல் கற்பனைகளும் சிற்றின்ப மற்றும் அற்புதமான வாய்ப்புகளாக தங்கள் படுக்கையறையின் வரம்புகளை மீறுகின்றன.

|

ஒவ்வொரு ஜோடியின் பாலியல் கற்பனைகளும் சிற்றின்ப மற்றும் அற்புதமான வாய்ப்புகளாக தங்கள் படுக்கையறையின் வரம்புகளை மீறுகின்றன. இது கயிறுகள், சவுக்குகள் அல்லது ஐஸ் க்யூப்ஸுடன் பரிசோதனை செய்தாலும், பாலியல் கற்பனைகள் மிகவும் உற்சாகமானதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தற்போது BDSM பாலியல் முறைகள் பிரபலமாகி வருகிறது.

Pros and Cons of Sexual Fantasies in Relationships

தம்பதிகள் இருவரும் ஒரே அளவிலான பாலியல் ஆசைகளை கொண்டிருந்தால் மட்டுமே இந்த பாலியல் சோதனைகள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இல்லையெனில் இதுவே உறவில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். விசித்திர பாலியல் ஆசைகள் உறவில் ஏற்படுத்தும் நன்மை மற்றும் தீமைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறவில் சாகசத்தை உருவாக்குகிறது

உறவில் சாகசத்தை உருவாக்குகிறது

உங்கள் பாலியல் ஆசைகளை வெளிப்படுத்துவது நிச்சயமாக உங்கள் சலிப்பூட்டும் பாலியல் வாழ்க்கை அல்லது உறவை சுவாரஸ்யமாக்கும். வழக்கமான பாலியல் விதிமுறைகளை மீறும் பாலியல் கற்பனைகளில் ஈடுபடுவது குறித்து நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒரே எண்ணத்துடன் இருக்க வேண்டும். ரோல்-பிளேமிங், கவர்ச்சியான உள்ளாடை, செக்ஸ் பொம்மைகள், ஸ்ட்ரிப்பிங் போன்றவை இன்னும் பல பாலியல் கற்பனைகள், அவை உங்கள் உறவை காலவரையின்றி தூண்டிவிடும்.

ஒருவரின் பாலியல் அடையாளத்தை வெளிப்படுத்தும்

ஒருவரின் பாலியல் அடையாளத்தை வெளிப்படுத்தும்

உங்கள் துணையின் மனதில் இருக்கும் பாலியல் ஆசைகளையும், தேவைகளையும் வெளிப்படுத்த இது உதவியாக இருக்கும். அவர்கள் வளர்நத விதம், குடும்பங்கள் மற்றும் நடத்தை ஆகியவை அவர்களின் நடத்தையை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே உங்கள் பாலியல் கற்பனைகளைப் பற்றி சிந்திப்பதும் ஏற்றுக்கொள்வதும் நீங்கள் விரும்புவதை அல்லது விரும்பாததைக் கண்டறிய உதவும்.

MOST READ: 'கலவி ' விஷயத்தில் கில்லி மாதிரி செயல்படும் ராசிகளின் பட்டியல்... உங்க ராசி எத்தனாவது இடம் தெரியுமா?

உறவுகளை ஏற்றுக்கொள்வது

உறவுகளை ஏற்றுக்கொள்வது

இந்திய சமுதாயத்தில், பாதுகாப்பான பாலியல் பழக்கவழக்கங்களைப் பற்றி இளைஞர்களுக்கு அறிவுறுத்துவதாக இருந்தாலும், பாலியல் தொடர்பான தலைப்புகளை பற்றி பேசுவது இப்போதும் கடினமானதாக இருக்கிறது. பாலியல் கற்பனைகளில் ஈடுபடுவது, உடலுறவில் என்ன நடைமுறைகள் பாதுகாப்பானவை மற்றும் அதனை மேலும் புரிந்துகொள்ளவும், கல்வி கற்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.இறுதியில் உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் இதிலிருந்து முழுமையான இன்பம் கிடைக்கும். பாலியல் கற்பனைகள் உங்கள் உறவில் ஏற்படுத்தும் பிரச்சினைகள் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

கேவலமான பாலியல் கற்பனைகள்

கேவலமான பாலியல் கற்பனைகள்

சிலர் ஆபாசப்படங்களை பார்த்த பிறகு பாலியல் கற்பனைகளை உருவாக்குகிறார்கள், இதனால் பாலியல் பற்றி உண்மையில் நம்பத்தகாத கற்பனைகளை உருவாக்குகிறார்கள். ஆபாசப்படங்களில் இருக்கும் பெரும்பாலான காட்சிகள் நம்பத்தகாததாக கருதப்படுகிறது. எனவே மக்கள் தங்கள் துணையுடன் மோசமான உண்மையிலேயே இழிவான பாலியல் செயல்களை செய்ய முயற்சிக்கிறார்கள். ஒருவர் தேவைப்படுவதை விட படுக்கையில் மிகவும் கட்டுப்படுத்தலாம் அல்லது ஆதிக்கம் செலுத்தலாம்.

பொருத்தமில்லாத ஆசைகள் எழலாம்

பொருத்தமில்லாத ஆசைகள் எழலாம்

லிஃப்ட் மற்றும் திறந்த வெளியில் முத்தமிடுவது அல்லது உறவு கொள்வது என்பது உங்கள் கற்பனைகளில் ஒன்றாக இருந்தால், உங்களைச் சுற்றியுள்ள சூழலை நீங்கள் நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில், இதுபோன்ற நடவடிக்கைகள் பெரும்பாலும் பொருத்தமற்றவை என்று கருதப்படுகின்றன, மேலும் நீங்கள் நிறைய சிக்கல்களில் மாட்டலாம்.

MOST READ: காமசூத்ராவில் பெண்கள் சிறப்பான கலவியை அனுபவிக்க கூறப்பட்டிருக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

தம்பதியினரிடையே தவறான புரிதல்கள்

தம்பதியினரிடையே தவறான புரிதல்கள்

மோசமான பாலியல் நடவடிக்கைகள் மற்றும் ஆசைகள் குறித்து நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒரே புரிதலில் இருக்க வேண்டும். உங்கள் கூட்டாளருடன் நீங்கள் ஏற்கனவே விவாதிக்காத விஷயங்களைச் செய்ய முயற்சிக்காதீர்கள். இத்தகைய செயல்கள் சவாலானவை, எனவே அதற்கு அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். உங்களுடன் ஒரு பாலியல்ஆசையை முயற்சிக்க உங்கள் பங்குதாரரும் தயாராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டில் ஒன்று இல்லையென்றாலும் அது தம்பதிகளுக்குள் பிரச்சினைகளை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pros and Cons of Sexual Fantasies in Relationships

pros and cons of sexual fantasies in relationships.
Story first published: Thursday, April 29, 2021, 11:15 [IST]
Desktop Bottom Promotion