Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த தருணங்களின்போது உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்…!
ஒவ்வொரு உறவும் தனித்துவமானது மற்றும் கூட்டாளர்களிடையே இருக்கும் ஹெமிஸ்ட்ரி அவர்களின் தனிப்பட்ட விஷயம்.
ஒரு உறவு என்பது சமநிலை மற்றும் சமத்துவம் பற்றியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இங்கு எல்லாருடைய உறவிலும் ஆண்கள், பெண்கள் சமமாக நடத்தப்படுகிறார்களா? என்றால் அது கேள்விக்குறி தான். அனைவரும் பேசுவார்கள் நான் என் மனைவிக்கு சம உரிமை கொடுத்துள்ளேன் என்று. ஆனால், உண்மை அவர் மனைவிக்குதான் தெரியும். பொதுவாக அதிக ஆதிக்கம் செலுத்துவது ஆண்களே. மிக குறைவாகவே பெண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உறவுக்குள் ஆதிக்கம் செலுத்துவது என்பது அந்த உறவையே சீர்குலைத்துவிடும்.

ஒரு காதல் உறவு திருமணத்திற்கு வழிவகுக்கும் போது, இந்த பண்புகளைத் தெரிந்துகொள்வது மிக முக்கியமானது. இருப்பினும், சில நேரங்களில் சரியான சமநிலையில் செயல்பட முடியாமல் போகலாம். மேலும், உறவில் ஒருவர் மற்றவரை ஆதிக்கம் செலுத்துவதற்கான போக்கை அவசியத்தை விட சற்று அதிகமாக உருவாக்க வாய்ப்புள்ளது.

சிக்கலை ஏற்படுத்தும்
ஒவ்வொரு உறவும் தனித்துவமானது மற்றும் கூட்டாளர்களிடையே இருக்கும் ஹெமிஸ்ட்ரி அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் சிலருக்கு, ஆதிக்கம் செலுத்தும் வாழ்க்கைத் துணை அவர்களின் திருமண வாழ்க்கையில் சிக்கலை தரக் கூறக்கூடும். நீங்கள் கவனமாக இருந்தால், உங்கள் கூட்டாளியின் நடத்தையை சில சந்தர்பங்களின்போது கவனித்தால், அவர் அல்லது அவள் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் வாழ்க்கைத் துணையாக மாறுவாரா? என்று தெரிந்துவிடும்.

வாதங்களின்போது...
வாழ்க்கை துணையுடன் சண்டைகள் மற்றும் வாதங்கள் இல்லாமல் எந்த உறவும் முழுமையடையாது. ஒரு உறவின் வளர்ச்சி தம்பதிகள் இந்த வேறுபாடுகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு வேளை, உங்கள் துணை வேறுபாடுகளை இணக்கமாக வரிசைப்படுத்துவதை விட ஒரு வாதத்தை வெல்வதில் அதிக கவனம் செலுத்துகிறார் என்றால், அவர் அல்லது அவள் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் கூட்டாளருடன் ஒரு வாதத்தை நீங்கள் எளிதாக இழக்க நேரிடும், இது உறவுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவது...
உடல் ரீதியாக துன்புறுத்துவது சாதாரணமான ஒன்றல்ல. பெரும்பாலான தம்பதிகள் சண்டையிடும் போது ஒரு பங்குதாரர் மற்றொருவரின் உணர்வுகளை உணராமல் தாக்கும் சூழ்நிலைகளை சந்தித்திருக்கலாம். ஒரு சண்டையின் போது உடல் ரீதியாக உங்களை தாக்கும் ஒரு நபர், நீங்கள் திருமணம் செய்துகொண்டால் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் வாழ்க்கைத் துணையாக மாறுவதற்கு நீண்ட காலம் எடுக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முடிவுகளை எடுப்பது
காதலன் அல்லது காதலி இருவரில் ஒருவரே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என்றால், அந்த உறவு மகிழ்ச்சியாக செல்வதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு. சிறு முடிவாக இருந்தாலும், இருவரும் சேர்ந்து எடுக்கும்போது, அதனால் வரும் மகிழ்ச்சியையும், கஷ்டத்தையும் இருவருமே ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், ஒருவர் மட்டுமே எடுக்கும் முடிவினால், பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்கள் துணை உங்களை ஈடுபடுத்தாமல் அடிக்கடி முடிவுகளை எடுத்தால், திருமணமான பிறகும் அவர் தொடர்ந்து அதைச் செய்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

கட்டளை இடுவது
ஒரு செயலை செய்வதற்கு உங்கள் காதலன் அல்லது காதலிக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா என்பது மிக முக்கியம். விருப்பமில்லா ஒன்றை நீ செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டளையிடுவது சரியான உறவாக இருக்காது. தங்களுடைய வாழ்க்கை துணையின் உணர்வுகளுக்கும், விருப்பங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், வாழ்க்கை முழுவதும் உங்கள் காதலன் அல்லது காதலி சொல்வதைதான் நீங்கள் கேட்க நேரிடும். இது சமநிலை உறவாக இருக்காது.

பணம் செலவழிப்பதில்…
பணம் விஷயத்தில் ஒருவர் சிக்கனமாக இருக்கலாம் மற்றொருவர் அதற்கு நேரெதிராக அதிகம் செலவழிப்பவராக இருக்கலாம். பொதுவாக யார் சிக்கனமாக இருப்பார்கள் என்பதை பொறுத்து இங்கு ஆதிக்கம் குறைவாக இருப்பதும், அதிகமாக இருப்பதும் தெரிந்துவிடும். பண விஷயத்தில் அதிக செலவு செய்பவார்களே அதிகமாக ஆதிக்கத்தை செலுத்துவார்கள்.

வார்த்தைகள் உபயோகிப்பதில்…
ஆண் பெண் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்றால், அவர் அல்லது அவளின் மனதை புண்படுத்தும்படியான சொற்களை வேண்டுமென்றே கூறுவது சரியாக இருக்காது. ஒவ்வொரு முறையும் இதை அவர் அல்லது அவள் பொறுத்துக்கொண்டு போவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. உங்களை புண்படுத்தும் வார்த்தைகளை அடிக்கடி உபயோகிப்பவர் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் நபராக மாறுவார்கள்.

எல்லாவற்றையும் தெரிவிக்க வேண்டும்
நீங்களும் உங்கள் காதலியும் அல்லது காதலனும் சந்திக்காதபோது, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருப்பது, உங்களை விசாரணை கைதிபோல நடத்துவதற்கு சமம். வெளியூருக்கு செல்லும்போது, அவ்வாறு கேட்பது விசாரிப்பது நல்ல விஷயம். ஆனால், ஒவ்வொரு முறையும் நீ எங்கு இருக்கிறாய், என்ன செய்கிறாய் என்பது உங்களை அவர் இயக்குவதுபோல மாறிவிடும். உங்கள் வாழ்க்கை துணை என்ன செய்கிறார் என்பதை நீங்கள் எப்போதுமே தெரிந்து கொள்ள விரும்பினாலும், நீங்கள் அதை உச்சநிலைக்கு எடுத்துக் கொண்டால் அவர் பொறுமை இழந்துவிடுவார். இது உறவு முறிவதற்கான வாய்ப்பையும் ஏற்படும்.



Click it and Unblock the Notifications