மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இப்படி எல்லாம் ஏமாற்றலாமா ஆண்களே?

Written By:
Subscribe to Boldsky

கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியை ஏமாற்றுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை.. சொல்லப்போனால் பத்தில் ஒரு ஆண் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் மனைவியை ஒரு கணவன் ஏமாற்றுவது என்பது சரிதானா? இது குடும்ப வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதிக்கும்?

உங்களது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் அவரை ஏமாற்றும் விதமாக நடந்து கொள்வது அவருக்கு எத்தனை கஷ்டத்தை தரும்.. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இந்த ஆண்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருவை பாதிக்கும்

கருவை பாதிக்கும்

கஷ்டங்களிலேயே வைத்து மிகப் பெரிய கஷ்டம் எது என்று கேட்டால், தன் கணவன் தன்னை ஏமாற்றுவது தான் என்று பெண்கள் சொல்வார்கள்.. அது தன் குடும்ப வாரிசை சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை ஆண் ஏமாற்றுவது என்பது எவ்வளவு பெரிய பாவமாகும். தன் கணவன் தன்னை இந்த விஷயத்தில் ஏமாற்றுகின்றான் என்று தெரிந்தால், அந்த கர்ப்பிணி பெண் மனமுடைந்து போவாளாம்.. இதனால் அவளது வயிற்றில் வளரும் கருவிற்கு பாதிப்பு உண்டாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனைவியின் எதிர்பார்ப்பு

மனைவியின் எதிர்பார்ப்பு

ஒவ்வொரு மனைவியும் தன் கணவன் தன் மீது அன்பு, அக்கறை, மதிப்பு, நேர்மையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பாள்.. அதுவும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் இந்த எதிர்பார்ப்பு பெண்களிடத்தில் அதிகரித்தே காணப்படுகிறது.. இதனை சிதைப்பது நியாயமா?

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

ஆண்கள் கர்ப்ப காலத்தில் பெண்களின் மீது சற்று நாட்டம் குறைந்து காணப்படுகின்றனராம். பெண்களால் ஆண்களை இந்த சமயத்தில் திருப்திபடுத்த முடிவதில்லை என்பதே இதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

பெண்கள் உடல் மாற்றங்கள்

பெண்கள் உடல் மாற்றங்கள்

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. அதுவும் குறிப்பாக கர்ப்பத்தின் ஏழு முதல் ஒன்பது வரையிலான காலங்களில் பெண்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களால், அவர்களது உடல் எடை அதிகரிக்கிறது, வெளி தோற்ற அழகு குறைகிறது, அதுமட்டுமின்றி அவர்களது மனநிலையில் கூட பல மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் பெண்களுக்கு தங்களது அழகின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து போகிறது.. இதனால் அவர்களுக்கு உடலுறவின் மீது உள்ள நாட்டமும் குறைந்து தங்களது கணவனை திருப்திப்படுத்த முடியாத நிலையை அடைகின்றனர். இந்த காரணத்திற்காக எல்லாம், உங்களது மனைவியை ஏமாற்றலாமா?

அனைவரும் இப்படியா?

அனைவரும் இப்படியா?

அனைத்து ஆண்களும் இப்படி தங்களது மனைவியை ஏமாற்றுவதில்லை.. முன்னரே சொன்னது போல, 10-ல் ஒரு ஆண் தான் தன் மனைவியை கர்ப்ப காலத்தில் ஏமாற்றுகின்றான்.. ஆண்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள்.. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலைகள் உள்ளது. அது என்னென்ன என்பது பற்றி தொடந்து காணலாம்.

முதல் வகை :காதலுடன் இருப்பவர்கள்

முதல் வகை :காதலுடன் இருப்பவர்கள்

இந்த வகை ஆண்கள் தங்களது மனைவியின் மீது உண்மையிலேயே அன்பு, அக்கறை கொண்டிருப்பார்கள் இதனை யாராலும் மறுக்கவே முடியாது. திருமண பந்தம் என்பது காதல், விட்டுக் கொடுத்து செல்லுதல், புரிதல், உடலுறவு கொள்ளுவது போன்ற அனைத்தும் அடங்கியது தானே..? உடலுறவு மட்டுமே திருமண வாழ்க்கை கிடையாது அல்லவா? இதனை புரிந்து கொண்டுவர்கள் தான் இவர்கள்...!

அக்கறை

அக்கறை

இவர்கள் தங்களது மனைவியின் மீது தனது குழந்தையின் மீது கர்ப்ப காலத்தில் அதீத அன்பை காட்டுவார்கள். இவர்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் வயிற்றில் வளரும் தனது குழந்தையை துன்புறுத்த கூடாது என்று நினைப்பார்கள். இதனால் உடலுறவை கூட தவிர்ப்பார்கள் ( குறிப்பு: கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது கருவில் இருக்கும் குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது). மேலும் இவர்கள் தங்களது மனைவிக்கு உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உதவிகரமாக இருப்பார்கள்.

கர்ப்ப கால உடலுறவு

கர்ப்ப கால உடலுறவு

மன ரீதியாக கர்ப்ப கால உடலுறவு என்பது ஒரு பெண்ணுக்கு தனது மன அழுத்தத்தில் இருந்து விடுதலை தருவதாக இருக்கிறது. தனது கணவனின் ஒத்துழைப்பு மட்டும் கர்ப்ப காலத்தில் கிடைத்துவிட்டால் அந்த பிரசவம் ஒரு பெண்ணுக்கு, மகிழ்ச்சியாக அமைவதோடு மட்டுமில்லாமல், திருமண வாழ்க்கையும் இன்பமயமானதாக இருக்கும்.

இரண்டாம் வகை : சுயநலம்!

இரண்டாம் வகை : சுயநலம்!

இந்த இரண்டாம் வகையான ஆண்களுக்கு தனது தேவை மட்டும் தான் முக்கியம். இவர்களுக்கு தேவையானது எல்லாம் உடலுறவு மட்டும் தான்.. இவர்கள் தனது மனைவி காலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போதும், வாந்தி எடுத்து சிரமப்படுவது பற்றியும் சற்றும் கவலை கொள்ள மாட்டார்கள்.. அவர்களது தேவை தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். மனைவியின் கர்ப்ப கால பிரச்சனை குறித்து விசாரித்துக் கூட தெரிந்து கொள்ள மாட்டார்கள்.. இவர்களிடத்தில் அன்பையும், அக்கறையையும், நேர்மையையும் எதிர்பார்ப்பது வீண்!

மூன்றாம் வகை : ஆசையை அடக்கிக் கொள்வார்கள்

மூன்றாம் வகை : ஆசையை அடக்கிக் கொள்வார்கள்

இந்த மூன்றாம் வகை ஆண்கள் தங்களது மனைவி கர்ப்பமாக உள்ள காரணத்தில் தங்களது உடலுறவு சார்ந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வார்கள்.. தனது மனைவிக்கு கர்ப்ப காலத்தில் உறுதுணையாக இருப்பார்கள். கர்ப்ப காலம் பற்றி எப்படி இருக்கும் என்பது பற்றி தெரியாமல் இருந்தாலும் கூட, தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது, அவளுக்கு என்னென்ன மாற்றங்கள் உடலில் நிகழும், அதை எதிர்கொள்வது எப்படி, கணவாக அந்த சூழ்நிலையில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தெரிந்து கொள்வார்கள்.

மாற்றங்களை புரிந்தவன்

மாற்றங்களை புரிந்தவன்

தன் மனைவிக்கு ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும் மாற்றங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.. மனரீதியாக அவள் எதை விரும்புவாள் என்பது பற்றி அவளுக்கு தெரியும். இவர்கள் கடிமாக தான் தனது செக்ஸ் உணர்வை தன் மனைவியிடம் வெளிப்படுத்துவார்கள்.. தனது மனைவியின் உடலில் உண்டாகும் மாற்றங்களை கூட இதுவும் ஒருவித அழகு தான் என்று நினைப்பார்கள்..

சிறந்த தந்தை

சிறந்த தந்தை

குழந்தை பிறந்த பிறகும் கூட, தனது குழந்தையை பராமரிக்க நேரம் ஒதுக்குவார்கள். மிகச்சிறந்த தந்தையாக இருப்பார்கள். தான் ஒரு ஆண் என்ற ஒரே காரணத்திற்காக தன் குழந்தையை கவனிக்கும் பொறுப்பு அனைத்தையும் பெண்ணிடமே விட்டுவிடாமல், தானும் குழந்தையை பராமரிப்பதில் மனைவிக்கு உதவுவான்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Men Cheating Their Wives During Pregnancy

Why Men Cheating Their Wives During Pregnancy
Story first published: Wednesday, January 3, 2018, 15:35 [IST]