Latest Updates
-
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள்
நண்பர்கள் தினத்தில் பிரபலங்கள் நட்பு குறித்து வெளியிட்ட பதிவுகள்!
நண்பர்கள் தினத்தில் பிரபலங்கள் நட்பு குறித்து வெளியிட்ட பதிவுகள்!
காதலை விட சிறப்புடையது நட்பு. இதை யாராலும் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. காதலில் கள்ள உறவுகள் இருக்கலாம், ஆனால், நட்பில் கள்ளத்தனம் இருக்கவே முடியாது, இருப்பதும் கிடையாது.
நட்பில் மலர்ந்து காதலும் உண்டு, காதலில் பிரிந்த பிறகு நண்பர்களாக வாழ்நாள் முழுக்க நீடித்த உறவுகளும் உண்டு. காதல் இறந்தாலும் இறக்காதது நட்பு என்பதற்கு இத்தகைய வாழும் உதாரணங்கள் பலர் இருக்கிறார்கள்.
எல்லா உறவிலும் காதல் இருக்குமா? என்பது உறுதியற்றது. ஆனால், ஆசான் - மாணவன்; கணைவி - மனைவி; காதலன் - காதலி; பெற்றோர் - பிள்ளைகள் என அனைத்து உறவிலும் நட்பு இருக்கும்.
இப்படி பல சிறப்புகள் கொண்ட நட்பு குறித்து... இந்திய பிரபலங்கள் நண்பர்கள் தினத்தன்று என்னென்ன பதிவிட்டார்கள் என்று இந்த தொகுப்பில் காணலாம்....

விக்கி!
போடா.. போடி, நானும் ரவுடி தான், இது தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி இருக்கும் விக்கி. நண்பர்கள் தினத்தன்று தனது நிறைய நட்புகள் குறித்து பதிவிட்டிருந்தார். அதில் நயன்தாரா துவங்கி, அனிருத், சிவகார்த்திகேயன், நடன அமைப்பாளர் சதீஷ் உள்ளிட்ட பலரை பற்றி, அவர்களுடனான தனது நட்பை எத்தகையது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
லவ் பண்லாமா, வேணாமா?
போடா.. போடி படத்தில் இடம் பெற்றிருந்த லவ் பண்லாமா, வேணாமா? என்ற பாடலை போல. தனக்கும், நயனுக்கும் இடையே இருப்பது காதல் தான் என்பதை சொல்லாமல், சொல்லி குழப்பி இருந்தார் விக்கி.
இந்த காதலில் நிறைய நட்பு இருக்கிறது. இந்த காதலில் நிறைய நடப்பு இருக்கிறது என்று முத்தங்கள் உடனான ஹார்ட்டின் ஸ்மைலிகளை தெறிக்கவிட்டிருந்தார் விக்கி.
அனிருத்!
ஒரு சிறந்த நண்பன் நம் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தையும், மேண்மையையும் ஏற்படுத்துவான். அப்படி விக்கி தன் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய நபர் அனிருத் என்று குறிப்பிட்டிருந்தார்.
என் வாழ்க்கையை மாற்றிய ஒரு நபர். என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாறிய நபர். என் கடினமான நாட்களில் உடன் இருந்த நபர். அனிருத்துடனான நட்பை எண்ணி நான் மனம் மகிழ்கிறேன். ஐ லவ் யு! நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அன்பரே! என்று பதிவிட்டிருக்கிறார் விக்கி.
விஜய் சேதுபதி!
காதல் என்று மட்டுமல்ல, எல்லா உறவிலும் தேவையானது, அவசியமானது நம்பிக்கை மற்றும் நேர்மை.
அந்த வகையில், "நான் இவரை மிகவும் நேசிக்கிறேன். இவர் ஒரு நேர்மையான ஆள். நட்பை மதிக்க தெரிந்தவர்" என்று நடிகர் விஜய் சேதுபதி பற்றி புகழ்ந்துகருத்து பதிவிட்டிருக்கிறார் விக்கி.
எஸ்.கே!
எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி, பொருளாக இருந்தாலும் சரி முதலில் அதை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நம்மில் பலரும் செய்யும் தவறு என்னவெனில், நம்மிடம் ஒரு உறவோ, பொருளோ இருக்கும் வரை அதை மதிக்கவே மாட்டோம். அது நம்மை விட்டு பிரிந்த பிறகு அல்லது இழந்த பிறகு தான்... அதன் மதிப்பை அறிந்து வருந்துவோம்.
அந்த வகையில், "மற்ற அனைத்தையும் தாண்டி, நட்புக்கு அதிக மதிப்பு அளிக்கும் நபர். நண்பர்களுக்காக இவர் உதவியாக, உறுதுணையாக நிற்க எந்த எல்லைக்கும் செல்வார். நீங்க அற்புதமானவர் சிவகார்த்திகேயன்" என்று பதிவிட்டிருக்கிறார் விக்கி.
சதீஷ்!
எவ்வளவு கவலையாக இருந்தாலும் அதை மறக்கடிக்க செய்பவன் நண்பன் தான். நண்பன் ஒருவன் மட்டுமே போலியாக சிரிக்க தெரியாதவன். போலி முகத்தை வெளிக்காட்ட மறுப்பவன்.
அந்த வகையில், "என்னை அதிகம் சிரிக்க வைத்த நபர். என்னுடன் எல்லா காலக்கட்டத்திலும் இருப்பவன். நடன அமைப்பாளர் சதீஷ், அவனது நகைச்சுவை மற்றும் உறுதுணை எப்போதுமே என்னுடன் இருக்கிறது. என்னுடன் நீண்ட கால நட்பில் இருப்பவன். எனது ஏற்ற தாழ்வுகள் அனைத்தையும் கண்டவர். லவ் யு சதீஷ்" என்று பதிவிட்டிருக்கிறார் விக்கி.
அட்லீ!
கணவன் - மனைவி உறவுக்குள் நட்பு இருந்துவிட்டால்.. அவர்கள் இல்லறத்தில் சண்டை - சச்சரவுகள் குறைவாக இருக்கும். சந்தேகம் இருக்கவே இருக்காது. காரணம் எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் பேசி தீர்த்துக் கொள்வார்கள்.
நீ தான் என் சிறந்த தோழி, என் மனித டைரி, நீ என் உயிர், இந்த உலகில் நீ தான் எல்லாமே... என்று தனது மனைவி ப்ரியா குறித்து நண்பர்கள் தினத்தன்று பதிவிட்டிருக்கிறார் இயக்குனர் அட்லீ.
விராத் கோலி!
ஒரு சிறந்த நண்பன் அளிக்கும் பரிசு, உத்வேகம். உலகமே அவனை எதிர்த்து நின்றாலும், உடன் நின்று வெற்றிய அடைய செய்பவன் நண்பன் தான். அந்த வகையில், தோழியாகவும், காதலியாகவும், இன்று மனைவியாகவும் இருந்து விராத் கோலிக்கு அந்த உத்வேகத்தை அளிப்பவர் அனுஷ்கா ஷர்மா.
தனது நண்பர்கள் தின வாழ்த்துக்களை மனைவியுடன் எடுத்துக் கொண்ட ஒரு அழகான செல்ஃபியுடன் பகிர்ந்திருக்கிறார் விராத் கோலி.



Click it and Unblock the Notifications











