For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அண்ணனே தங்கைக்கு ஃபேக் அக்கவுண்டில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பிய அவலம் - My Story #270

அண்ணனே தங்கைக்கு ஃபேக் அக்கவுண்டில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பிய அவலம் - My Story #270

By Staff
|

அப்ப நான் 11வது படிச்சுட்டு இருந்தேன். ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் எல்லாம் எனக்கு ஒரு வருஷமா தான் பழக்கம். ஏற்கனவே காதல்ங்கிற பேருல நான் ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்து ப்ரேக்-அப் பண்ணிருந்தேன். அந்த காலக்கட்டத்துல எனக்கு எல்லாமே என் ஃபிரெண்ட்ஸ் தான். நான் படிச்சது ஒரு கோ-ஹெட் ஸ்கூல்.

எங்க கேங் கொஞ்சம் பெருசு... பாதிக்கு பாதி பசங்க, பொண்ணுகன்னு கலந்திருந்த கேங். அவங்க தான் என்ன அந்த ரிலேஷன்ஷிப் ப்ரேக்-அப்ல இருந்து வெளிய கொண்டு வந்த இயல்பா சிரிச்சு, பேச வெச்சாங்க. ஆனா, என் வாழ்க்கையில அந்த ரிலேஷன்ஷிப் ப்ரேக்-அப்ப விட கொடுமையான விஷயம் அதுக்கு அப்பறம் தான் நடந்துச்சு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோகன்!

மோகன்!

என் கேங்ல மோகன்னு ஒரு பையன் இருக்கான். அவன் எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃபிரெண்ட். நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் எதையும் மறைச்சு பேசுனதே கிடையாது. எங்க வீட்டுல அவன அவங்க பையன மாதிரி தான் நடத்துவாங்க. அவங்க வீட்டுல என்ன அவங்க பொன்னு மாதிரி தான் பார்பாங்க.

ராஜா!

ராஜா!

அப்ப தான் மோகன் தன்னோட ஃபிரெண்ட்னு சொல்லி ராஜான்கிற பையன அறிமுகம் பண்ணான். அவன் எங்க ஸ்கூல்ல லேட்டரல் என்ட்ரியா ஜாயின் பண்ணான்.

அவன் கிளாஸ்ல அவனுக்கு பெரிசா ஃபிரெண்ட்ஸ் யாரும் இல்ல. ரொம்ப அம்மாஞ்சி போல இருந்தான். ஆரம்பத்துல இருந்தே என்ன அவனோட தங்கச்சி மாதிரியும், தன்ன ஒரு அண்ணன் மாதிரியும் தான் உருவகப்படுத்திக்கிட்டான்.

அரண்!

அரண்!

அதுக்கப்பறம் நாங்க எங்க போனாலுமே எல்லாரும் ஒண்ணா தான் இருப்போம். ராஜாவும் எங்க கேங்ல ஒருத்தனா மாறுனான். ஒரு சமயத்துல மோகன் - ராஜாவுக்கு நடுவுல சண்டை. ரெண்டு பேசும் அடிச்சுக்கிட்டு பேசிக்கல. அதுக்கு அப்பறம் அவன் திரும்ப தனியா இருக்க ஆரம்பிச்சான். அவனுக்கு அவன் கிளாஸ்லயும் பெருசா ஃபிரண்ட்ஸ் யாரும் இல்ல. அதனால, நான் எங்க கேர்ள்ஸ் கேங் கூட சேர்த்து தினமும் சாப்பிட வர கூப்பிட்டேன். அவனும் வந்தான்.

வேண்டாம்!

வேண்டாம்!

மோகன் அடிக்கடி வந்து அவன் கூட பேசாத, அவன ஏன் கூட கூட்டீட்டு போய் சாப்பிடுறீங்க... அவன் கூட அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ணாதன்னு சொன்னான். அவன் இப்படி சொல்லிட்டு போனா, இந்த பக்கம் ராஜா வந்து முதல்ல மோகன எல்லா விதத்துலயும் பிளாக் பண்ணுனு சொன்னான். மோகன் மேல எனக்கு ஒரு தனிவிதமான ஃபீல் இருக்கு. அவன் என்னோட க்ளோஸ் ஃபிரெண்ட். எப்படி என்னால அவன போய் பிளாக் பண்ண முடியும்.

யாராவது ஒருத்தர்..

யாராவது ஒருத்தர்..

ஒரு தருணத்துல மோகன் - ராஜாவுக்கு நடுவுல சண்டை முத்திடுச்சு.. நான் யாராவது ஒருத்தர் பக்கம் தான் இருக்க முடியும்ன்னு சூழ்நிலை. எனக்கு ராஜாவ பார்த்தா பாவமா இருந்துச்சு. அதுமட்டுமில்லாம அவன் ஒரு அண்ணனா என் மேல நிறையா பாசம் வெச்சிருந்தான். அதனால, நான் மோகன விட்டு ராஜா கூட பழக ஆரம்பிச்சேன். அதுக்கப்பறம் மோகன் என் கூட பேசவே இல்ல.

பிளான்!

பிளான்!

ஒரு நாள் ராஜா என்கிட்டே ஓடிவந்து, பார்த்து பத்திரமா இருக்கு ஃபைனல் எக்ஸாம்ஸ் முடிஞ்சா பின்ன என்ன அடிக்க மோகன் பிளான் பண்ணிருக்கான். உன்னையும் ஏதாவது பண்ணிட போறான்னு சொல்லிட்டு போனான். நான் பேசமா போனதால மோகன் இந்த அளவுக்கு நடந்துக்குவான்னு எனக்கு தெரியல... அவன ஃபேஸ்புக்ல, வாட்ஸ்-அப்ல எல்லாம் பிளாக் பண்ணிட்டேன்.

எனக்கு ஃபேஸ்புக் அதிகமா யூஸ் பண்ணி பழக்கம் இல்ல. மொத்தமே ஐம்பது ஃபிரெண்ட்ஸ் தான் அவங்க எல்லாருமே என் கிளாஸ்மேட்ஸ், சொந்த காரங்க, அண்ணன், தங்கச்சி தான்.

அப்ப தான் எனக்கு ஃபேஸ்புக்ல ஒரு புது அக்காவுண்டுல இருந்து பெண் அந்தரங்க அங்கத்த குறிக்கிற மாதரியான மெசேஜ் வந்துச்சு.. அதுக்கப்பறம் என்ன பிளாக் பண்ணா ராஜாவ அடிச்சிடுவேன்னு மிரட்டி மெசேஜ் பண்ணாங்க.

அத அப்படியே ராஜா கிட்ட காட்டினேன்.

அவனா தான் இருக்கும்..

அவனா தான் இருக்கும்..

ராஜா, மோகன் தான் இந்த ஃபேக் அக்கவுண்ட் வெச்சு உண்ண மிரட்டுரான்னு சொன்னான். நான் அவன எல்லார் முன்னாடியும் திட்டிட்டு, இனிமேல் என் முகத்துலயே விழிக்காதன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்பறம் அந்த அக்கவுண்டையும் ஃபேஸ்புக்ல பிளாக் பண்ணேன்.

ஆனா, இந்த ஃபேஸ்புக் ஃபேக் அக்கவுண்ட் விளையாட்டு நிக்கிறதா இல்ல. திரும்ப ஒரு ஃபேக் அக்கவுண்ட் அதே மிரட்டல், அதே மாதிரி அசிங்கமான மெசேஜ். திரும்பவும் ராஜா கிட்ட தான் உதவிக்கு போனேன். நீ பிளாக் பண்ணாத என் ஃபிரெண்ட் மூலமா அது யாருன்னு டிராக் பண்றேன். நீ சும்மா ரிப்ளை மட்டும் பண்ணுன்னு ராஜா சொன்னான்.

வக்கிரம்!

வக்கிரம்!

ராஜா பேச்ச கேட்டு அந்த அக்கவுண்டுக்கு தினமும் ரிப்ளை பண்ணேன். ஆனா, அவன் நாளுக்கு நாள் வக்கிரமா பேசுனான். என்னோட நிர்வாண படத்த கேட்டான், அவனோட அந்தரங்க உறுப்பு படத்த எடுத்து அனுப்புனான். என்னால ஒரு கட்டத்துல பொறுத்துக்க முடியல. நைட்டானா அழுவேன். அதைத்தவிர என்னால வேற ஒன்னும் பண்ண முடியல.

இனிமேலும், ரிப்ளை பண்ண முடியாது, வேணும்னா இந்தா என் லாகின் ஐடி, பாஸ்வார்ட் வெச்சு நீயே ரிப்ளை பண்ணிக்கோன்னு சொல்லி ராஜாக்கிட்ட கொடுத்துட்டேன்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

கொஞ்ச நாள் நான் ஃபேஸ்புக் லாகின் பண்ணவே இல்ல. ஒருவாரம் கழிச்சு என்ன ஆச்சுன்னு பார்க்க ஃபேஸ்புக் லாகின் பண்ணேன். அங்க தான் ஒரு குழப்பம். ஒரே சாட் பாக்ஸ்ல... அவனும் என் தங்கச்சிய விட்டுடுன்னு சொல்லிருக்கான், நானும் அவனுக்கு என் தங்கச்சிய விட்டுடுன்னு மெசேஜ் அனுப்பியிருக்கேன். இது எப்படி பாசிபிள்.

அப்ப தான் தெரிஞ்சுது... அந்த ரெண்டு மெசேஜ் அனுப்பினதும் ஒரே ஆளு தான். அது ராஜா தான்னு. தங்கச்சி, தங்கச்சின்னு சொல்லிட்டு. என் கிட்டயே ரொம்ப மோசமா நடந்திட்டு வந்துருக்கான்.

இதுவும் கற்பழிப்பு தான்.

இதுவும் கற்பழிப்பு தான்.

உடல் அளவுல கற்பழிக்கிறது மட்டும் தான் கற்பழிப்புன்னு சொல்ல முடியாது.. கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கும் மேல என்ன மனதளவுல கற்பழிச்சுருக்கான் அந்த கொடூரன். இவன்னால என்னோட க்ளோஸ் பிரண்ட்ஸ் நான் இழந்துட்டேன். எல்லாருக்கும் முன்னாடி அவன வரவழைச்சு திட்டு, அசிங்கப்படுத்தி அனுப்பிட்டேன்.

அதுக்கப்பறம் அவன் என் முன்னாடி வரவே இல்ல. போன் நம்பர் கூட மாத்திட்டான். மோகன் கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு தான் அவன் என் மன்னிப்ப ஏத்துக்கிட்டு பேசுனான். சில சமயம்.. நாம உணர்ச்சி பூர்வமா எடுக்குற முடிவுகள் தவறா தான் முடியுது.

ஒரு பொண்ணு கூட பழகனும், அவள அடையணும்னு நினைச்சா.. சிலர் எவ்வளவு கேவலமான விஷயங்கள் செய்யவும் தயாரா இருக்காங்க... ராஜா மாதிரி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: My so-called Fake Brother who Played with Me and Tortured Mentally.

Real Life Story: My so-called Fake Brother who Played with Me and Tortured Mentally.
Desktop Bottom Promotion