Latest Updates
-
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாகணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலை சமாளிக்க இந்த 5 செடிகள் போதும்… வீடே குளிர்ச்சியாகவும் செல்வமும் தானாக பெருகும்! -
நீட் மறுதேர்வு எப்போது? சிபிஐ அதிரடி கைதுக்கு பின் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
அப்பா வயது நபரால் செக்சுவல் டார்ச்சர்... உங்க வீட்டிலும் இது நடக்கலாம் ஜாக்கிரதை - My Story #226
ஒரு பெண் சகஜமாக பேசினால் ப்ராஸ்ட்டிட்யூட் அல்ல, மாமாவினால் பாதிக்கப்பட்ட பெண் - My Story #226
பதின் வயதின் இறுதியில் நடைப்போட்டுக் கொண்டிருக்கும் இளம் பெண் நான். இன்னும் சில நாட்களில் எனது இருபதாவது வயதில் அடி எடுத்து வைக்கப் போகிறேன். நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பெண்கள் வெளியாட்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை காட்டிலும், வீட்டில் இருக்கும் சொந்த பந்தங்களால் தான் அதிகம் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
என் வாழ்வில் நான் கடந்து வந்த சம்பவமானது ஏறத்தாழ ஆறு வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒன்று. அதுவும் சரியாக எனது பிறந்த நாளுக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் நடந்தது என்பதால், ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அந்த ஜீரணிக்க முடியாத சம்பவம் என் கண்முன்னே வந்து, வந்து போகிறது.

வெட்கம்!
எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். எனக்கான நண்பர்கள் குறைவு. என்னை பற்றி முழுமையாக அறிந்தவர்களும் குறைவு. அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், எது சரி, எது தவறு என்ற போதிய தெளிவும் இல்லாமல் வளர்ந்தவள் நான். எனக்கு முதன் முதலில் ஒருசில நண்பர்களை பெற்றுக் கொடுத்தது ஃபேஸ்புக் தான்.

வேறொன்றும் இல்லை..
எனக்கு 14 வயதாக ஓரிரு வாரங்கள் தான் இருந்தன... ஒவ்வொரு பிறந்த நாளும் அக்கம் பக்கத்து வீட்டினருடன் கேக் வெட்டி கொண்டாடுவது எங்கள் வழக்கம். இப்போது போல வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ஸ்நாப் சாட் என பல சமூக செயலிகள் அப்போது இல்லை. அனைத்திற்கும் ஃபேஸ்புக் தான். அதில் தான் எனக்கு சில நண்பர்கள் இருந்தனர்.

மாமா ஒருவர்!
எனக்கு என் வயது ஒத்த தோழமைகள் ஃபேஸ்புக்கில் மிகவும் குறைவு. பெரும்பாலும் கல்லூரி பயிலும் நபர்களும், என் உறவினர்கள் சிலரும் தான் எனது ஃபேஸ்புக் தோழமைகள். அப்படி தான் எனக்கு எனது தூரத்து சொந்தக்காரர் மாமா ஒருவர் நட்பானார். அவர் மூலமாக என் சொந்த ஊரில் இருக்கும் பலருடன் அறிமுகம் ஆனேன்.

தினமும்...
ஒரு தருணத்தில் ஃபேஸ்புக் உரையாடலை தாண்டி, நாங்கள் இருவரும் மொபைலில் அதிகம் பேச துவங்கினோம். அவருக்கு எனது தந்தை வயது என்பதால், அவரையும் அப்பாவாக தான் எண்ணி அவருடன் பழகி வந்தேன். நிறைய நகைச்சுவையாக பேசுவர் . பல குடும்ப வரலாறு அவர் மூலமாக தான் நான் அறிந்தேன். நான் அதிகம் சிரித்தது அவருடன் பேசிய போதுதான்.

வெகேஷன் நாட்கள்...
நான் எனது நினைவு தெரிந்து, அதற்கு முன் நான்கைந்து ஆண்டுகளாக சொந்த ஊருக்கு சென்றதே இல்லை. என் வயதொத்த உறவுகள், அந்த மாமா என பலரை காண ஆவலாக இருந்ததால். அப்பா என்னை அழைத்துக் கொண்டு சொந்த ஊரில் பாட்டி வீட்டில் விட்டு சென்றார். ஒரு வாரம் அங்கே தான் இருக்க போகிறேன் என்ற சந்தோஷம் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அப்பா எண்ணத்தில்..
ஆனால், அங்கு தான் எனது தாய் வழி மாமாவான அந்த கொடூரனின் உண்மை முகம் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்று நான் ஊருக்கு சென்ற முதல் நாள் இரவு, எப்போதுமே அப்பா உறங்கும் போது அவருக்கு பாட்டு பாடி, தலையை வருடிக் கொடுப்பது என் வழக்கம். அவரும் தனக்கு அப்படி செய்யும்படி கூறியதால், அவரும் உறங்க செல்லும் போது பாட்டு பாட நான் சென்றேன்.

தவறு...
ஆனால், அவர் நான் பாட்டு பாடி தலை வருடிக் கொடுத்து கொண்டிருந்த நேரத்தில் எனது நெஞ்சு பகுதியில் கை வைத்து அழுத்த துவங்கினார். நான் அதிர்ச்சியில், அந்த அறையில் இருந்து வெளியே ஓடி வந்துவிட்டேன். நான் ஏதோ அதிர்ச்சியில் இருப்பதை உறவினர் மகனான ஒரு அண்ணன் அறிந்திருந்தான். ஆனால், அவனுக்கு அதற்கான காரணம் தெரியாது.

தீம் பார்க்!
அப்போது தான் ஒரு நாள் அந்த மாமாவின் மனைவி, எங்கள் அத்தை தீம் பார்க் போகலாம் என்று எங்களை எல்லாம் அழைத்து சென்றார். அங்கே தான் கொடூரனின் வேலைகள் இன்னும் அதிகரித்தன. நாங்கள் ரோலர் கோஸ்டர் ரைடில் செல்லும் போது, என் அண்ணனை வேறு ஒரு சகோதரியுடன் அனுப்பிவிட்டு, அவர் என்னுடன் பயணிக்க வந்தார். அந்த ரைடின் போது வேண்டுமென்ற எனது அந்தரங்க இடங்களை தீண்டினார். தப்பிக்க முடியாத நிலை. அவரிடம் நேராகவே, இப்படி பண்ணாதிங்க.. எனக்கு பிடிக்கல. நீங்க என் அப்பா மாதிரி என்று கூறி அழுதேன்.

மீண்டும்..
நாங்கள் வீடு திரும்பிய பிறகு உடை மாற்ற தனி அறைக்கு சென்றேன். பின்னாடியே அவரும் வந்தார். தனது கால் சட்டையை கழற்றி விட்டு, என்னருகே நெருங்க முயன்றார். அப்போது என் அண்ணன் பின்னாடியே வந்து கையும் களவுமாக அவரை பிடித்துவிட்டான். நான் அவனிடம் ஓடி சென்று அழுதேன். அன்று தான் நான் அந்த கொடூரைனை கடைசியாத பார்த்தது.
அதன் பிறகு வீட்டு விசேஷங்கள் என்றாலும் கூட, சொந்த ஊருக்கோ, அந்த மாமன் பங்குபெறும் நிகழ்வு என்று அறிந்தாலோ நான் செல்வதை தவிர்த்து வருகிறேன்.

போதும்!
அப்பா ஸ்தானத்தில் இருக்கும் ஒருவராலேயே தனது இச்சை என்னத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை எனில், ரோட்டில் செல்லும் ஊர் பெயர் தெரியாத ஒருவன் எப்படி அடங்கி நடப்பான். முதலில் வீட்டில் திருந்தினால் தானே ரோட்டில் திருந்துவார்கள். இப்படியான பாலியல் துன்புறுத்தலுக்கு என்னை போன்ற பல பெண்கள் தினம், தினம் உலகெங்கிலும் பாதிக்கப்படுகிறார்கள். முக்கியாமாக சிறுமிகள். ஆனால், அந்த சிறு வயதில் இதுக் குறித்து போதிய அறிவு இல்லாத காரணத்தால், இவற்றை வெளிக்கொண்டு வர முடியாமல் போகிறது.
இதற்கான ஒரே தீர்வு... உங்கள் வீட்டில் உங்கள் மகளுக்கு... பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? தவறான தீண்டுதல் என்றால் என்ன என்பதை கற்பிக்க துவங்குங்கள். இல்லையேல்.. தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை அவளே அறியமாட்டாள்.



Click it and Unblock the Notifications