Latest Updates
-
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
வட இந்திய பெண்கள், தென்னிந்திய ஆண்களிடம் விரும்பும், வெறுக்கும் விஷயங்கள் என்னென்ன?
குடும்பத்தில் உறவுகள் சார்ந்து இருக்கும் இணைப்பில் இருந்து, தென்னிந்தியர்களின் கம்பீரம், வீரமாக கருதப்படும் மீசை வரை பல விஷயங்கள் பற்றி வட இந்திய பெண்கள் எது பிடிக்கும், பிடிக்காது என கூறியுள்ளனர்.
தங்களுக்கு தென்னிந்திய ஆண்களிடம் என்னென்ன விஷயங்கள் எல்லாம் பிடிக்கும், பிடிக்காது என வட இந்திய பெண்கள் சில விஷயங்களை கூறியுள்ளனர்.

இதில் குடும்பத்தில் உறவுகள் சார்ந்து இருக்கும் இணைப்பில் இருந்து, தென்னிந்தியர்களின் கம்பீரம், வீரமாக கருதப்படும் மீசை வரை பல விஷயங்கள் பற்றி வட இந்திய பெண்கள் எது பிடிக்கும், பிடிக்காது என கூறியுள்ளனர்.
ஒரு கலாட்டா விவாவதத்தில் அவர்கள் கூறிய சில ப்ளஸ் அன்ட் மைன்ஸ்... (இது அவர்கள் பார்வையில் மட்டுமே. இந்திய அரசாணையில் வெளியானது அல்ல. எனவே ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக் கொள்ளவும்.)

குடும்ப பிணைப்பு!
தென்னிந்திய ஆண்கள் தங்கள் குடும்பத்துடன், உறவுகளுடன் அதிக பிணைப்புடன் இருப்பார்கள். உடன் பிறந்தவர்கள் என்று மட்டுமில்லாது, பெரியப்பா, சித்தப்பா, மாமா மகன்கள், மகள்கள் என அனைவரிடமும் சம அளவில் அன்பு செலுத்துவார்கள். அனைவரயும் உடன்பிறந்தவர் போல பார்க்கும் குணம் பிடிக்கும்.

மீசை!
தென்னிந்திய ஆண்கள் அவர்களது வீரமாக, கம்பீரமாக மீசையை கருதுவதாக எங்களிடமே கூறியுள்ளனர். ஆனால், ஏனோ அவர்களது மீசை மட்டும் பிடிக்கவில்லை. இதுதான் இதற்கு காரணம் என்று எதுவும் கூறமுடியாது. ஆனால், ஏனோ தென்னிந்திய ஆண்களின் மீசை மட்டும் பிடிக்காது.

கெட்ட வார்த்தை!
தென்னிந்திய ஆண்கள் நண்பர்கள் மத்தியில் கெட்ட வார்த்தை பேசினாலும், பெண்கள் அருகே இருக்கும் போது கெட்ட வார்த்தை பேச மாட்டார்கள். இந்த பண்பு தென்னிந்திய ஆண்களிடம் மிகவும் பிடித்த ஒன்று.

நட்பு - காதல்!
தென்னிந்திய ஆண்கள் காதலியை காட்டிலும், நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பார்கள். ஏன், நண்பர்களுக்காக காதலியையும் பிரியும் துணிவு உள்ளவர்கள். இது அவர்களிடம் பிடிக்காத ஒன்று.

மென்மை!
பெண்களுக்கு மதிப்பு கொடுத்து பேச கூடியவர்கள். பண்பாக பழக கூடியவர்கள். அவர்களிடம் பழகும் போது ஒரு மென்மையை உணர முடியும். மனம் புண்படும்படி பேச மாட்டார்கள். இந்த குணம் தென்னிந்திய ஆண்களிடம் பிடிக்கும்.

எக்ஸ்!
பழைய காதல் உறவில் இருந்து எளிதாக வெளிவர மாட்டார்கள். அந்த பெண் வேறு ஒருவரை காதலிக்க துவங்கினாலோ, திருமணமே ஆனாலும் கூட அந்த நபரையே நினைத்து கொண்டிருப்பார்கள். இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இது தென்னிந்திய ஆண்கள் செய்யும் தவறு.

வயது!
வட இந்திய ஆண்களுடன் ஒப்பிடுகையில், தெனிந்திய ஆண்கள் வேகமாக வயதாவது போன்ற தோற்றம் அளிப்பார்கள். இது அவர்களது உணவு பழக்கம் அல்லது உடற்பயிற்சி சார்ந்து கூட இருக்கலாம் என கருதுகிறேன்.

ஃபேஷன்!
தென்னிந்திய ஆண்கள் ஃபேஷனுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். கொடுத்தாலும் அது முழுமையாக இருக்காது. ஒப்பிட்டு பார்க்கும் போது ஃபேஷன் பார்வையில் தென்னிந்திய ஆண்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications
