தன் முன்னால் காதலன் கொடுத்த திருமண பரிசை கண்டு அதிர்ச்சியில் இறந்த பெண் - My Story #104

Written By:
Subscribe to Boldsky

மாலதி எப்போதும் கல்லூரிக்கு குணிந்த தலை நிமிராமல் தான் செல்வாள்.. அவளது கண் பார்பதற்கு கத்தி போல இருக்கும். அதை அலங்கரிக்க எப்போதும் அவள் கண்மை போட்டிருப்பாள். தலையில் தினமும் கொஞ்சமாவது பூ சூடி தான் கல்லூரிக்கு செல்வாள். அவள் மிகவும் திறமையான பெண்.. படிப்பு நடனம் போன்றவற்றில் சிறந்து விளங்கக் கூடியவள்..! அவளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது..!

மாலதியுடன் பேச வேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு மட்டுமல்ல.. பெண்களுக்கும் கூட இருக்கும்... ஆனால் அவள் எந்த பையன்களுடனும் பேச மாட்டாள். ஒரு நாள் அவளது கல்லூரியில் அவளது நடன நிகழ்ச்சி தான் முதலில் இருந்தது.. ஆனால் கடைசி நேரத்தில் பாட்டு சிடி ஒர்க் ஆகவில்லை.. அவள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.. மேடையில் வேறு அவளை அழைத்தார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உதவி செய்த தீலிப்

உதவி செய்த தீலிப்

அந்த சமயத்தில் அவளுக்கு கைக்கொடுக்க வந்தவன் தான் திலீப்...! அவன் நன்றாக பாடுவான்.. அவன் தன் நண்பர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு பாடல் பாடி, இசை அமைத்து அவள் நடனமாட உதவினான்..! இருவருக்கும் பாராட்டு மழை குவிந்தது..! அன்று முதல் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.. கல்லூரியில் இருந்த அத்தனை பேர் முன்பும் தனது மானத்தை காப்பாறியதால் அவளுக்கு திலீப் மீது காதல் வந்தது.. இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள்...!

பாடகன் ஆக வேண்டும்

பாடகன் ஆக வேண்டும்

திலீப் நன்றாக பாடும் திறமை கொண்டவன்.. தன் காதலியை நினைத்து அவ்வப்போது அனைவர் முன்னிலையிலும் பாடல்களை பாடி அசத்துவான்.. அரசல்புரசலாக அவர்களது காதல் வகுப்பில் உள்ளவர்களுக்கு தெரிந்தது.. ஆனாலும் இருவரும் அதைப்பற்றி எல்லாம் எதுவும் கவலைப்படவில்லை...! திலீப் திறமையானவன் தான் ஆனால் படிப்பு, பரீட்சை இது எல்லாம் அவனுக்கு சற்றும் பிடிக்காதவை...! அவனுக்கு ஒரு நல்ல பாடகன் ஆக வேண்டும் என்பது தான் ஆசை..

மாலதியின் சொல்லே மந்திரம்

மாலதியின் சொல்லே மந்திரம்

தன் இலட்சியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக பலரிடம் அவன் வாய்ப்பு கேட்டு வந்தான்..! கோவில் திருவிழா, இசை நிகழ்ச்சிகள், திருமண மேடைகளில் பாடி கொஞ்சம் பொருள் சேர்த்தான்...! மாலதிக்கு இவன் கல்லூரி வந்தும் படிக்காமல் எப்போதும் பாட்டு பாட்டு என்று சுற்றுவது பிடிக்கவில்லை.. நீ உன் இலட்சியத்தை நோக்கி போ ஆனால் படிக்க வேண்டும் என்று வந்துவிட்டு படிக்காமல் இருப்பது தவறு.. ஒரளவுக்காவது படிப்பில் கவனத்தை செலுத்து என்பதை தான் அடிக்கடி மாலதி திலீபிடம் கூறுவாள்.. திலீப் மாலதியின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை என்பது போல தான் இருப்பான்.. எனவே அவன் நன்றாக படிக்க ஆரம்பித்தான்...!

வேலையும் கிடைத்தது

வேலையும் கிடைத்தது

தன் பேச்சிற்கு மரியாதை கொடுத்து, திலீப் நன்றாக படிப்பது மாலதிக்கு மகிழ்ச்சியை அழித்தது.. அவளுக்கு திலீப்பின் மீதான நம்பிக்கை உயர்ந்தது.. மாலதியும் திலீப்பும் முழு மனதுடன் ஒருவருக்கொருவர் ஆழமாக காதலித்தார்கள்...! கல்லூரி படிப்பு முடியும் பொழுதே இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலையும் கிடைத்தது..

இருவரும் வெளியூருக்கு வேலைக்காக சென்றுவிட்டனர். மாலதி திலீப் காதல் ஒரு பரஸ்பரமான புரிதலில் நன்றாக சென்று கொண்டிருந்தது.. விடுமுறை நாட்களில் இருவரும் சேர்ந்து ஒன்றாக வெளியில் செல்வது.. ஊருக்கு செல்லும் போது ஒன்றாக செல்வது என்று இணை பிரியாமல் இருந்தார்கள்....!

என் உயிர் உன்னிடத்தில்...!

என் உயிர் உன்னிடத்தில்...!

மாலதி காதலிக்கும் போது என் உயிர் உன்னிடத்தில் தான் உள்ளது... உன் உயிர் என்னிடத்தில் தான் உள்ளது என்று கூறிக் கொண்டே இருப்பாள்...! இந்த வார்த்தை திலீப்பிற்கு மாலதியின் மீதான நம்பிக்கையை அதிகரித்துக் கொண்டே இருந்தது...! ஒருநாள் மாலதி அவளது பெற்றோர்களை காண வீட்டிற்கு சென்ற போது அவளது அம்மா சீக்கிரம் வா... குளித்து புடவை கட்டி தயாராகு என்று கூறினாள்.. எதற்கு என்று கேட்டதற்கு இன்று உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்று கூறினார்.. மாலதி எவ்வளவோ தடுத்தும் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை...!

என்னை மறந்துவிடு

என்னை மறந்துவிடு

மாப்பிள்ளைக்கு மாலதியை பிடித்து போனது...! மாப்பிள்ளையை மாலதியை தவிர மாலதி வீட்டில் உள்ள அனைவருக்குமே பிடித்து போனது.. திருமண நிச்சயதார்த்தமும் இரண்டு நாட்களிலே நடைபெற்றது.. மாலதி இதை பற்றி எல்லாம் திலீபிடம் போன் செய்து கூறினாள். தான் வேலையை ரிசைன் செய்யப்போவதாகவும் கூறினாள்.. அதன் பின் கடைசியாக என்னை மறந்துவிடு.. உன் நல்ல மனதிற்கு என்னை விட நல்ல பெண் கிடைக்கும். உன் பாடகனாகும் இலட்சியத்தை நோக்கி செல் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டாள்...

திருமணம் நடந்ததா?

திருமணம் நடந்ததா?

திருமணத்திற்கு இன்னும் மூன்று மாத இடைவெளி மட்டுமே இருந்தது.. மாலதி எப்போதும் அழுகையும், சோகமுமாகவே இருந்தாள்...! அதன் பின் உறவினர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து திருமண ஆசைகளை அதிகரிக்கவே கொஞ்சம் கொஞ்சமாக மாறினாள் மாலதி..! மாலதியின் முகத்தில் இருந்த கல்யாண சோகம் மறைந்து, கல்யாண கலை பிறந்தது..! மாலதிக்கும் அவளது கணவன் சேகருக்கும் திருமணம் அனைவரது உள்ளமும் மகிழ நடந்தது..!

காதலனிடம் இருந்து வந்த பரிசு

காதலனிடம் இருந்து வந்த பரிசு

அதன் பின்னர் மாலதிக்கும் அவளது கணவன் சேகருக்கும் ரிசப்பசன் நடந்தது.. அப்போது மாலதிக்கு அவளது காதலன் திலீப் அனுப்பிய ஒரு பரிசு வந்தது..! அவள் அதனை கண்டு இது என்னவாக இருக்குமோ என்று அதிர்ந்து போனாள்...! அதன் பின் திலீப்பின் குணத்தை பற்றி யோசித்த பிறகு மாலதிக்கு அவன் நல்லவன் நமக்கு எந்த ஒரு தீங்கும் செய்திருக்க மாட்டான் என்று நினைத்தாள்...

நெஞ்சோடு அணைத்தாள்

நெஞ்சோடு அணைத்தாள்

திருமண வரவேற்பு முடிந்ததும், குவிந்து கிடந்த அத்தனை பரிசுகளில் தன் காதலன் திலீப் கொடுத்த பரிசு எங்கே இருக்கிறது என்று வேக வேகமாக தேடினாள்.. அவன் கொடுத்த பரிசு கிடைத்ததும், அதை எடுத்து பல முத்தங்களை கொடுத்தாள்...! அதை பிரித்து பார்க்க அவளுக்கு மனமில்லை...! அவனது பெயர் எழுதப்பட்ட அந்த பரிசை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்....!

அவனை மறக்கமுடியவில்லை

அவனை மறக்கமுடியவில்லை

காலங்கள் சென்றன.. தீலிப்பை இவளால் மறக்க முடியவில்லை.. சேகரால் என்ன செய்தும் அவளது மனதில் இடம்பெற இயலவில்லை.. இருப்பினும் பெற்றோர்களின் விருப்பத்திற்காக குழந்தை பெற்றுக் கொண்டார்கள்...! குழந்தைக்கு மூன்று வயதானது.. இருந்தாலும் மாலதி அவளது கணவனை காதலிக்கவில்லை.. தான் பெற்ற குழந்தைக்கு அனைவரிடமும் சண்டையிட்டு போராடி தனது காதலன் திலீப்பின் பெயரை வைத்துவிட்டாள்...!

விவாகரத்து!

விவாகரத்து!

சேகருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை... காதல் இல்லாத திருமண வாழ்க்கையில் வாழ்வது உபயோகமில்லை என்று பட்டது.. மாலதியாவது அவளது காதலனுடன் நிம்மதியான வாழ்க்கை வாழட்டும் என்று விவாகரத்து கொடுக்க தயாரானான்.. இந்த விஷயத்திற்கு மாலதியும் ஒப்புக்கொண்டாள்.. ஆனால் இந்த விஷயத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை.. நீங்கள் தனித்தனியாக சென்றுவிட்டால் குழந்தையின் நிலை என்னாவது என்று கூறி விவாகரத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்...!

மகனின் காதல்!

மகனின் காதல்!

காலங்கள் கழிந்தன... மாலதியின் மகனுக்கு திருமண வயது வந்தது.. ஆனால் கூட மாலதிக்கு தன் கணவன் மீது காதல் வரவில்லை.. தனது மகனுக்கு தந்தை என்ற ஒரு பந்தத்தில் தான் மாலதி தன் கணவனுடன் குடும்பம் நடந்தி வந்தாள்.. மாலதியின் மகனுக்கு திருமண ஏற்பாடும் நடந்தது.. மாலதியின் மகனுக்கு காதல் திருமணம் தான்...!

கடந்த கால நினைவுகள்

கடந்த கால நினைவுகள்

மாலதிக்கு தன் மகனை திலீப் என்று கூப்பிடும் போது எல்லாம் தனது காதலன் நியாபகம் தான் வரும்.. திருமண வரவேற்பு பலகையில் திலீப் என்ற பெயரை கண்டதும் திலீப்பிற்கே திருமணம் நடக்க போவது மாதிரி கற்பனை செய்து கொண்டாள்.. மணமேடை விருந்தினர்கள் அனைவரையும் காணும் போது தனது திருமண நியாபகம் வந்தது...!

சோகத்தில் திருமண மண்டபம்

சோகத்தில் திருமண மண்டபம்

திருமண மண்டபத்தில் தன் மனைவி இன்னும் நம்மை காதலிக்கவில்லையே என்று சேகருக்கும், என் காதலனை ஏமாற்றிவிட்டோமே என்று மாலதிக்கும், இத்தனை வயதாகியும் சேகரும் மாலதியும் சேர்ந்து வாழவில்லையே என்று அவர்களது தாய் தந்தைக்கும் முகம் சோகமாக காணப்பட்டது...!

வீட்டிற்கு ஓடினாள்

வீட்டிற்கு ஓடினாள்

காதலன் திலீப்பின் நினைவு மலாதியின் நினைவுகள் வாட்டி எடுத்தது.. அதனால் இரவோடு இரவாக வீட்டிற்கு சென்றாள்... இந்த நேரத்தில் காரை எடுத்துக் கொண்டு தனியாக எங்கே செல்கிறாள் என்று சேகரும் மாலதியை பின் தொடர்ந்தான்.. மாலதி வீட்டிற்குள் வேகமாக ஓடி தன் அறையை அடைந்தாள்..! அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்த தன் காதலன் திலீப்பின் பரிசை திறந்து பார்க்க வேண்டி எடுத்தாள்.. திலீப்பையை பார்த்தது போல ஒரு மகிழ்ச்சி அவளது முகத்தில்...!

தன்னை அலங்கரித்துக் கொண்டாள்

தன்னை அலங்கரித்துக் கொண்டாள்

பரிசை கட்டியணைத்து ஆயிரமாயிரம் முத்தங்களை அள்ளி தெளித்தாள்...! பரிசுகளை திறந்து பார்க்க சென்ற போது, அவளை ஏதோ ஒன்று தடுத்தது...! உடனே வேகமாக சென்று காதலிக்கும் போது திலீப் தனது முதல் மாத சம்பளத்தில் வாங்கி கொடுத்த புடவையை அணிந்து கொண்டாள்.. திலீப்பிற்கு பிடித்த அந்த ஜிமிக்கி கம்மல், கலகலவென சினுங்கும் கண்ணாடி வளையல் எல்லாம் அணிந்து கொண்டாள்...!

அதிர்ந்த மாலதி

அதிர்ந்த மாலதி

அதன் பின் வந்து திலீப் கொடுத்த பரிசை பிரித்து பார்த்தாள்..! அதனுள் இரண்டு மோதிரங்கள் இருந்தது... ஒன்று மலாதிக்காகவும், மற்றொன்று சேகருக்கானதாகவு இருந்தது...! அதன் உள் ஒரு கடிதமும் இருந்தது..! அதை படித்து பார்த்த மாலதி அதிர்ச்சியில் தரையில் சாய்ந்தாள்.. தன் மனைவியை தேடி வந்த சேகர்... படுக்கையில் விழுந்துகிடந்த மாலதியை எழுப்ப முற்பட்டான்.. ஆனால் மாலதி ஏற்கனவே இறந்து கிடந்தாள்...!

என்ன பரிசு அது?

என்ன பரிசு அது?

சேகர், தீலிப்பின் கடிதத்தை படித்து பார்த்தான்...! அதில் மாலதி நன்றாக இருக்க வேண்டியிருந்தான்... அதனுடன் நீ இன்னொருவருக்கு மனைவியாக போகிறாய்... இனி உன்னுடைய உயிர் என்னிடத்தில் இருப்பது தவறான ஒன்று...! அதனால் உன் உயிரை உன்னிடமே கொடுத்து விட நான் இறந்து போகிறேன் என்று இரத்தத்தினால் எழுதப்பட்டிருந்தது...! இந்த கடிதத்தை படித்து பார்த்து சேகர் கண்ணீர் விட்டான்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: She Got Heart Attack While Seeing Her Marriage Gift

My Story: She Got Heart Attract While Seeing Her Marriage Gift
Subscribe Newsletter