Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ!
கிராமத்தையே வாய் பிளக்க வைத்து, விஜய் பட பாணியில் திருமணம் செய்துக் கொண்ட காதலர்கள்!
ஸ்ரீராமசேனா பிரமுகர் நடத்தி வைத்த விஜய் பட பாணி திருமணம். கர்நாடகாவில் நடந்த பரபர கல்யாணம்.
நடிகர் விஜயின் கேரியரில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பூவே உனக்காக. நாம் காதலிக்கும் பெண் வேறு நபரை காதலிக்கிறார் என அறிந்தால், அவரை தொந்தரவு செய்யாமல் விட்டு விலகுவதே சிறந்தது பாடம் எடுத்த திரைப்படம்.
விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் கலப்பு திருமணம் பற்றிய கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்டது. மிக பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது. இதே பாணியில் கர்நாடகாவில் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து அசத்தியுள்ளனர்.

யல்லபுரா!
கர்நாடகாவின் கார்வார் அருகே அமைத்திருக்கும் கிராமம் யல்லபுரா. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ரகீம்கான் மற்றும் காளம்மா.

காதல்!
ரகீம் கான் மற்றும் காளம்மா ஆரம்பக் காலத்தில் நட்பாக பழகி பிறகு காதல் உறவில் இணைந்தவர்கள். இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

வீட்டார் எதிர்ப்பு!
முஸ்லீம், இந்து என்ற மத வேறுபாடு ஒரே காரணம் காட்டி இவர்களது இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு கூறி வந்தனர். மதம் மட்டுமே இவர்களது காதலுக்கு பெரும் தடையாக இருந்து வந்தது.

பூவே உனக்காக ஐடியா!
உடனே இதற்கு தீர்வாக ரகீம் கான் ஆர்யாவாக இந்து மகனாக மாறி தனது ஆசை காதலி காளம்மாவை பூவே உனக்காக பாணியில் மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.

ஸ்ரீராமசேனா பிரமுகர்!
இந்த கலக்கல் திருமணத்தை ஸ்ரீராமசேனாவை சேர்ந்த பிரமுகர் பிரமோத் முதாலிக் நடத்தி வைத்தார் என கூறப்படுகிறது. இந்த சினிமா பாணி திருமணம் அந்த ஊரில் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.

யார் இந்த பிரமோத் முதாலிக்!
இந்த அசத்தல் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த பிரமோத் முதாலிக் காதலர் தினத்தன்று எதிர்ப்பு தெரிவித்து பெண்களிடம் இருந்து உள்ளாடைகளை பரிசாக வாங்கியவர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.



Click it and Unblock the Notifications
