Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
ஆசைக்கு அழைத்த ப்ளே பாய் காதலனுக்கு நான் கொடுத்த செருப்படி பதில்! - My Story #105
ஆசைக்கு அழைத்த ப்ளே பாய் காதலனுக்கு நான் கொடுத்த செருப்படி பதில்! - My Story #105
நான் அப்போது கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்... நான் தான் எப்போதுமே வகுப்பிலேயே முதல் மாணவியாக வருவேன்.. எனக்கு ஆண் மற்றும் பெண் நண்பர்கள் அதிகம்... ஆனால் நட்பின் எல்லை எதுவரை வரை என்று எனக்கு நன்றாக தெரியும்... நண்பர்களை நண்பர்களாக மட்டும் தான் பார்ப்பேன்...!
என்னுடன் படிக்கு அனைவரும் காதலித்துக் கொண்டிருந்தார்கள்... அவர்கள் அடிக்கடி ஏதோ ஒரு ஒன்றுக்கும் ஆகாத பிரச்சனையை சந்திப்பார்கள்.. அதனை தீர்த்து வைப்பதற்குள் எனக்கு போதும் போதுமென ஆகிவிடும்.. காதலர்களுக்கு இடையில் வரும் ஒன்றுக்கும் உதவாத சண்டைகளை பார்த்து பார்த்து... நமக்கு இந்த லவ் எல்லாம் செட்டே ஆகாது என்று நினைத்துக் கொண்டேன்..!
திருமணம் என்று ஒன்று நடந்தால் அது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டிருந்தேன்...!

சின்ன வயது நண்பன்
என் பக்கத்து வீட்டில் எனக்கு நீண்ட நாள் நெருக்கிய நண்பன் ஒருவன் இருக்கிறான்... அவன் பெயர் வினோத்.. எனக்கு பள்ளிப்பருவத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே தெரியும்.. டியூசன் போகும் போது உண்டான நட்பு தான் எங்களுடையது...! அவனது வீட்டில் என்னையும் அவர்களது மகளாக தான் பார்த்துக் கொள்வார்கள்..! எங்களது வீட்டிலும் அவன் அப்படி தான்..!

புதிய நட்பு
அன்று எனது நெருங்கிய தோழிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.. அங்கே எனக்கு அறிமுகமானவன் தான் சிவா... அவனும் என்னை போலவே அனைவருடனும் சகஜமாக பழக கூடியவன் ஆவான்...! அவனது அறிமுகம் எனக்கு கிடைத்த வரமாக தான் நினைத்தேன்...! என் தோழிகள் அனைவரும் அவனை பற்றி நல்ல விதமாக தான் கூறினார்கள்...!

காதல்
சிவாவிற்கு அப்பா இல்லை.. அவன் தான் தனது குடும்பத்தை கவனித்துக் கொள்வதாக கூறினான்.. அதனால் எனக்கு அவன் மேல் மதிப்பும் மரியாதையும் கூடியது...! ஆனால் அவன் என்னிடம் ஆரம்பத்தில் இருந்தே என்னை காதலிப்பது போல தான் பேசி பழகினான்...! எனக்கும் அவனை ஆழ் மனதில் இருந்து பிடித்திருந்ததால் நான் அவனை காதலிக்க சம்மதம் தெரிவித்தேன்...!

உருகி உருகி காதலித்தேன்
நான் அவனை உண்மையாக காதலித்தேன்.. இரவு எல்லாம் தூங்காமல் பேசிக்கொண்டோம்.. அவனுக்கு தோன்றும் போது எல்லாம் என் புகைப்படத்தை கேட்பான்.. நானும் அனுப்புவேன்..! நான் அவனது மனதை தெரியாமல் கூட காயப்படுத்தியது இல்லை.. அவனது குடும்பத்திற்கு ஏற்றது போல வாழ பழகிக்கொண்டேன்.. இதுவரை சமையல் அறை பக்கமாக செல்லாத நான், அவனுக்கு பிடித்தமான உணவுகளை எல்லாம் சமைக்க கற்றுக் கொண்டேன்..!

ஏமாற்றிவிடுவேன்
எங்களது காதலுக்கு ஒரு மாதம் ஆனது.. அவனை நான் ஒரே முறை தான் சந்தித்து இருக்கிறேன்...! அதுவும் என் தோழியின் நிச்சயதார்த்தத்தில்...! அவன் மெல்ல மெல்ல என்னிடம் சில கேள்விகளை கேட்க தொடங்கினான்....! நாம் உடலுறவு கொள்ளலாமா? திருமணத்திற்கு முன்பு இருவரும் சம்மதித்தால் உடலுறவு கொள்வதில் எந்த தவறும் இல்லை...! நான் எல்லாவற்றையும் முடித்துவிட்டு உன்னை ஏமாற்றிவிட்டால் நீ என்ன செய்வாய்...? என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தான்...!

செருப்படி பதில்
எனக்கு ஆண்களை பற்றி நன்றாக தெரியும்.. அவர்கள் உள் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் திறன் எனக்கு இருந்தது...! அதனால் நான் எனக்கு திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வது சுத்தமாக பிடிக்காது.. நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது...! என்னை நீ ஏமாற்றிவிட்டு சென்றால், நான் உன் வீட்டுக்கே வந்து உன்னை செருப்பால் அடித்து உன் அம்மாவிடம் நியாயம் கேட்பேன் என்று பதிலளித்தேன்...!

நீ எனக்கு வேண்டாம்
அவன் அதோடு அடங்கிவிட்டான்... திரும்ப எனக்கு நான்கு நாட்கள் கழித்து போன் செய்தான்...! என் வீட்டில் நமது திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்...! என்று கூறினான்.. பேசி பார்க்காமல் எப்படி இப்படி சொல்கிறாய்...! நீ என்னை உயிராக காதலிக்கிறேன் என்று கூறுகிறாய்... என்னுடன் வாழ ஆசைப்படுகிறாய்... என்னை பிரிய முடியவில்லை என்று கூறுகிறாய்.. இப்படி துடிக்கும் நீ உன் அம்மாவிடம் எனக்கு இந்த பெண்ணை பிடித்திருக்கிறது என்று கூற என்ன பயம் என்று கேட்டேன்...! வேண்டாம் சம்மதிக்க மாட்டார்கள் என்று என்னை உதறிவிட்டான்...!

காதல் செய்த காயம்
நான் அவனது ஆசைக்கு இணங்கவில்லை என்று என் காதலை உதறி சென்று விட்டான் என்பது எனக்கு நன்றாக புரிந்தது..! ஆனால் நான் அவனை உண்மையாக தானே காதலித்தேன்.. அதனால் என் மனம் அவனை பிரிய முடியாமல் தவித்தது.. அவனிடம் கெஞ்சினேன்... சாப்பிடாமல் இருந்தேன்.. என் கரங்களை பிளேடால் கிழித்துக் கொண்டேன்...! விஷம் குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்...! நான் இத்தனை செய்தும் அவன் என்னை கண்டு கொள்ளவில்லை!

ஆறுதலாக இருந்த நண்பன்
என் சிறு வயது நண்பன் தான் எனக்கு ஆறுதலாக இருந்தான்.. நான் விஷம் குடித்தது எல்லாம் வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான்..! என் காதல் சோகத்தை எல்லாம் நான் சிவாவிடம் தான் சொல்லுவேன்... ஆனால் அவன் எதுவுமே பேசமாட்டான்..! எனக்கு சில நாட்கள் கழித்து தான் சிவா எத்தனை பெண்களை எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறான் என்பது தெரியவந்தது.. எனக்கு அந்த காதல் வலி மாறவில்லை..!

காதலில் உண்மையில்லை
உண்மையாக ஒரு பெண்ணை காதலிக்கும் ஒவ்வொரு ஆணும், காதலிக்கும் போது கண்டிப்பாக திருமணம் பற்றி எல்லாம் பேசுவார்கள்..! காதலிக்கும் பெண்ணை தான் மற்றவர்கள் முன்பு கொண்டாடுவார்கள்... சமூக வலைதளங்களில் இருவருக்கும் இடையை ஏதோ ஒன்று இருப்பது போல காட்டிக் கொள்வார்கள்.. இதில் ஒன்றை கூட சிவா செய்யவில்லை... ஃப்ளே பாய் ஆக தான் இருந்தான்...!

உண்மையான காதல்
இந்த சூழ்நிலையில் தான் என் சிறு வயது நண்பன் என்னை ஆழமாக காதலித்து வந்தது தெரியவந்தது.. அவனது காதலை பற்றி தன் வீட்டில் அனைவரிடமும் சொல்லி வைத்திருந்ததும் எனக்கு தெரியவந்தது...! ஆனால் என்னால் அவனது காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..!

ஒளித்து வைத்த காதல்
ஏன் என்றால் நான் அவனை பல வருடங்களாக நண்பனாக மட்டுமே பார்த்துவிட்டேன்..! அவன் இரகசியமாக எனது பல சிறு வயது புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளான்..! எனக்காக பல கவிதைகளை எழுதி வைத்துள்ளான்...! என்னிடம் காதலை சொல்லி நான் ஒப்புக்கொள்ளாமல் போனால், அதை தாங்கிக் கொள்ள முடியாது என்று என்னிடம் காதலை சொல்லாமலே இருந்துள்ளான்...!

என்ன செய்வது?
வினோத்தின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.. என்னை எவ்வளவு ஆழமாக காதலித்திருந்தால், நான் வேறு ஒருவனுக்காக விஷம் குடித்த போதும் கூட என்னை காப்பாற்ற வந்திருப்பான் என்பது எல்லாம் புரிகிறது...! ஆனால் என்னால் தான் நண்பனை காதலனாக பார்க்க முடியவில்லை...!



Click it and Unblock the Notifications











