Latest Updates
-
சனிபகவான் வக்ர நிலை அடைவதால் டிசம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் இவங்கதான் -
தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
செட்டிநாடு ஏழுகறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இந்த மாதிரி நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -
இந்த 5 ராசிகளில் பிறந்தவர்களின் தன்னம்பிக்கை மலையை விட பெரிதாம் - இவங்க நினைச்சதை சாதிக்காம விடமாட்டாங்க -
10 வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி அருமையான புலாவ் செய்யுங்க - வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க -
உதட்டில் முத்தம் கொடுக்கும் போது கண்கள் ஏன் தானாக மூடுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு ரகசியம் இருக்கா? -
புதன் மிதுன ராசிக்குள் நுழைவதால் உருவாகும் பத்ர யோகம் இந்த 3 ராசிகளை ஜெயிக்கிற குதிரையாக மாத்தப்போகுதாம் -
இந்த 4 விஷயங்களை பின்பற்றுபவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆவார்களாம் - சாணக்கியர் சொல்லும் வாழ்க்கை ரகசியம் -
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்து நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
ஃபேஸ்புக்கில் இதை எல்லாமா போடுவாங்க? கடுப்பாகாது??
முகநூலில் இது போன்றவைகளை எல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பதை அப்படியே போட்டோ எடுத்து பேஸ் புக்கில் போடுவது நமது வாடிக்கையாகிவிட்டது. எப்போதாவது நாம் குடும்பத்துடன் வெளியில் சென்ற போட்டோவை பேஸ்புக்கில் போடுவது என்பது என்றால் சரி.. அதற்காக உங்களது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயத்தையும் பேஸ் புக்கில் போட்டுக் கொண்டு இருந்தால் அது உங்களுக்கு பின்னாளில் ஒரு பெரும் தலைவலியாக தான் வந்து சேரும்.
நீங்கள் பேஸ்புக்கில் அப்டேட் செய்யும் சில விஷயங்களை உங்களுக்கே தெரியாமல், பின்னனியில் சில பிரச்சனைகளாக உருவாகும். இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் களத்தில் இறங்கினால் உங்கள் நிலை அவ்வளவு தான்...!

துணையின் அனுமதி
ஏதாவது போட்டோவை உங்களது துணையின் டைம் லைனில் ஷேர் செய்யும் முன்னர் உங்களது துணையின் அனுமதி பெற்ற பின்னரே ஷேர் செய்ய வேண்டியது அவசியம். அவரது அனுமதி இல்லாமல் அவரது டைம் லைனில் நீங்கள் ஏதாவது ஷேர் செய்தால், அது அவரை ஏதேனும் ஒரு விதத்தில் பாதித்துவிட்டால், உங்களது உறவில் அது விரிசலை உண்டாக்கிவிடும்.

சண்டை
உங்களது துணை எந்த அளவுக்கு சண்டை போட்டாலும் சரி, உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தாலும் சரி, உங்கள் மீது தவறே ஒரு துளி கூட இல்லை என்றாலும் சரி நீங்கள் உங்களது சண்டை, உங்களது துணையின் மீது உள்ள கோபம் பற்றி பேஸ்புக்கில் ஷேர் செய்யாதீர்கள். உங்களது கோபத்தை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, இது ஒருவித தர்ம சங்கடத்தையும் உங்களது துணைக்கு உண்டாக்கும்.

நெருக்கமான போட்டோ
நீங்களும் உங்களது துணையும் மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கலாம். அடிக்கடி வெளியே சென்று வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்களாக இருக்கலாம். அதே சமயம் உங்களது நட்பு வட்டத்தில், துணையை பிரிந்து, அல்லது இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று புலம்பி வாழ்பவர்களும் இருக்கலாம்... அவர்களது மத்தியில் நீங்கள் உங்களது துணையுடன் மிகவும் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை போட்டால் அது அவர்களை வருத்தப்பட செய்யும். இந்த கடுப்பில் உங்களை அவர்கள் பிளாக் செய்து விடவும் வாய்ப்புகள் உள்ளது.

பரிசுப் பொருட்கள்
நீங்கள் உங்களது துணையுடம் விலை அதிகமுள்ள பரிசுப் பொருட்களை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடுவது வேண்டாம். இது பொருளாதாரத்தில் உங்களுக்கு கீழ் உள்ளவர்களின் மனதை பாதிக்கும். நம்மால் இப்படி எல்லாம் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை தரும்.

முறிவு
உங்களது காதல் முறிவு.. ஏன் அவருடம் உங்களுக்கு பிரேக் அப் ஆனது போன்ற கதைகளை எல்லாம் பேஸ்புக்கில் போட வேண்டாம். உங்களது பிரேக் அப் பிரச்சனையை பேஸ்புக்கில் வந்து கொட்ட வேண்டும் என்று எல்லாம் ஒன்றும் இல்லை. உங்களது நெருங்கிய நண்பரகளிடத்தில் உங்களது பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டாலே போதுமானது.

சின்ன சின்ன விஷயம்
உங்களது துணையும் நீங்களும் மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கலாம். அதற்காக உங்களது நண்பர்கள் அனைவரும் உங்களது வாழ்க்கையில் என்னென்ன விஷயங்கள் நடக்கிறது..திங்கள் கிழமை எங்கே போனீர்கள், செவ்வாய்கிழமை என்ன செய்தீர்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டமாட்டார்கள். மேலும் இந்த பழக்கம் தம்பதிகளுக்கு இடையே உள்ள நெருக்கத்தை குறைப்பதாகவும் இருக்கும்.

எக்ஸ் லவ்வர்
உங்களது எக்ஸ் லவ்வரை உங்களது பிரண்ட் லிஸ்ட்டில் வைத்துக் கொள்வது உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொள்வதை போல ஆகும். இதனை உங்களது காதலி அல்லது மனைவி அறிந்தால், நீங்கள் அவருடன் இன்னும் தொடர்பில் தான் இருக்கிறீர்கள் என்று நினைக்க கூட வாய்ப்புகள் உள்ளது.



Click it and Unblock the Notifications