Latest Updates
-
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
அம்பானியும், காதலும், ஒரு அட்டகாசமான ஒப்பீடு!
முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் பல தொழில்கள் செய்து வருகிறார். அவர் கால் வைக்காத இடமே இல்லை எனும் அளவிற்கு அவரது நிறுவனம் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் முதன்மை பங்கு வகிக்கிறது.
ஜியோவின் தாக்கம் மற்ற பல போட்டி நிறுவனங்களை நிலை தடுமாற செய்துள்ளது. காலம் ஒருபோதும் ஒரு நபர் வளரும் போது, வளர்ச்சி அடையும் போது அவரை ஒப்பிட மறந்ததே இல்லை.
ஆனால், சமீபத்தில் சமூக தளத்தில் கண்ட ஒரு வேடிக்கையான ஒப்பீடு தான் இது. அம்பானியின் தொழிலும், ஆண்களின் காதலும் என சற்றே விசித்திரமான ஒப்பீடு அது.

ஒன்றோடு நிற்கமாட்டார்கள்!
அம்பானி இந்த ஒரு தொழில் போதும், அல்ல இதுவரை ஆரம்பித்த தொழில் போதுமென நின்றதே கிடையாது. அதே போல தான் ஆண்களின் மனமும்.
காதல் செட்டானாலும் சரி, திருமணமே ஆனாலும் சரி, மற்ற பெண்கள் மீது ஈர்ப்புக் கொள்வது, அவர்களுடன் பழக நினைக்கும் ஆண்களின் காதல் ஒருவருடன் நிற்பது இல்லை.

மல்டி - டாஸ்கிங்!
அம்பானியின் பலமே மல்டி - டாஸ்கிங் போல ஒரே துறை சார்ந்து அல்லாமல், பல துறைகளில் தொழில் செய்து வெற்றி பெறுவது தான்.
அது போல இந்திய ஆண்களும். ஒரே நேரத்தில் பல பெண்களுடன் நட்பு பாராட்டுவது. அதிலும், ஒருவருக்கு தெரியாமல், மற்றொருவருடன் பழகுவது போன்றவற்றில் பலே கில்லாடிகள்.

கீப் ஆன் ட்ரை!
பெப்ஸி உமா தமிழக மக்களுக்கு பயிற்றுவித்த தாரகமந்திரம். முயற்சி செய்துக் கொண்டே இருக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ முயற்சியை விட்டுவிட கூடாது.
இது அம்பானிக்கு ஜியோ வரை உதவியிருக்கிறது. ஆண்களுக்கு காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர உதவுகிறது.

அடுத்தது என்ன?
அம்பானி அடுத்த என்ன தொழில் துவங்க போகிறார் என்பதும், காதலில் அடுத்து ஆண்கள் என்ன செய்வார்கள் என்பதும் யாராலும் கணிக்க முடியாது.

தடுமாற்றம்!
ஆரம்பத்தில் எடுத்து வைக்கும் அடிகளில் சற்று தடுமாறினாலும், கடைசியில் ராஜா போல நிலைப்பதில் இருவருமே வல்லவர்கள்!

திட்டங்கள்!
ஜியோவில் இறங்குவதற்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளாக அம்பானி கடுமையாக உழைத்துள்ளார். அதனால் தான் ஒரே சமயத்தில் இந்தியா முழுவதும் ஜியோ இவ்வளவு பெரிய வெற்றி பெற்றது, மக்களின் வரவேற்ப்பை பெற்றது. திட்டமிட்டு செயல்படுவதில் அம்பானி கில்லாடி.
காதலிலும் இந்திய ஆண்களின் திட்டமிடுதல் மற்றும் செயல்பாடு பற்றி சொல்லி தான் அறிய வேண்டுமா என்ன? எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் கட்டம்கட்டி தூக்கிவிடுவதில் நம்ம ஆட்களும் கில்லாடி தானுங்க!



Click it and Unblock the Notifications
