Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் "ச்ச்சீ..." சொல்ல வைக்கும் செயல்கள்!!!
மது, புகையைத் தவிர்த்து பல விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்காது என்று "ச்ச்சீ.." என சொல்லி முகம் சுளிக்கின்றனர் பெண்கள்! பொதுவாகவே பெண்கள் கொஞ்சம் ஆச்சாரம் பார்ப்பவர்கள். வீட்டில் கலீஜ்ஜாக இருந்தாலும் கூட, வெளியிடங்களுக்கு பக்காவாக வருபவர்கள் பெண்கள்.
இன்பமாக இருக்க தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்!!!
ஆனால், ஆண்களோ அழுக்கு லுங்குயை உருவி எறிந்துவிட்டு மாதக் கணக்கில் துவைக்காமல் இருக்கும் ஜீன்ஸை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். இது தான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கின்ற பெரிய வித்தியாசம், பெரும்பாலும் இது மட்டும் தான் ஆண் பெண்ணுக்கு மத்தியில் வித்தியாசமாக கருதப்படுகிறது.
தம்பதிகளே! குடும்பச் சண்டையின் போது இந்த பேச்சுக்களுக்கெல்லாம் 'மூச்'!!
சரி, இனி ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் "ச்ச்சீ..." சொல்ல வைக்கும் செயல்கள் பற்றிக் காணலாம்...
சாக்ஸ் நாற்றம்
பெரும்பாலும் பெண்கள் ஆண்களை பார்த்து "ச்ச்சீ.." சொல்லும் விஷயமாக இருப்பது இந்த சாக்ஸ் நாற்றம் தான். (சாக்ஸை ஒரு நாளுக்கு மட்டும் தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று சட்டம் இருக்கின்றதா என்ன?)
சண்டே குளிக்காமல் இருப்பது...
சண்டே அலுவலகத்திற்கு மட்டும் அல்ல, குளிப்பதற்கும் விடுமுறை என்ற பாணியை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள் ஆண்கள். இதை என்னமோ பெரிய கொலைக் குற்றம் போல கருதி.. ஆண்களிடம் இதை நாங்கள் வெறுக்கிறோம் என்று அறிக்கைவிடாத குறையாகக் கூறுகின்றனர் பெண்கள்.
தொலைக்காட்சி பார்ப்பது
பெண்கள் 24 மணி நேரம் சீரியல் பார்ப்பது குற்றமில்லையாம், ஆனால், ஆண்கள் கிரிக்கெட், புட்பால், ஐ.பி. எல் பார்த்தல் அவர்களுக்கு பிடிப்பதில்லையாம். என்னங்க இது நியாயம்.
வியர்வை நாற்றம்
ஆண்களிடம் அதிகமாக வியர்வை நாற்றம் வீசுவது பெண்களுக்குப் பிடிப்பதில்லையாம். (என்னம்மா பண்றது இதுக்குன்னு செண்டு அடிச்சுகிட்டேவா திரிய முடியும்)
குறட்டை
குறட்டைப் பழக்கம் ஆண்களிடம் பிடிக்காதாம். குறட்டை விடுவது தூக்கத்தைக் கெடுப்பதாகவும், எரிச்சல் அடைய வைப்பதாகவும் கூறுகின்றனர். (நாங்க மட்டும் என்ன வீம்புக்குன்னா குறட்டை விடுறோம், அதுவா வருது....)
ஜொள்ளுவிடுவது
புகை, மதுவை விட மிக கேவலமான பழக்கம் என்று பெண்கள், ஆண்களிடம் பார்ப்பது ஜொள்ளுவிடுவது. (அட, சரிதான்... ஆனா நிப்பாட்றதுக் கொஞ்சம் கஷ்டம் ஆச்சே!!!)