Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பெண்கள் தினமும் எதிர்கொள்ளும் மூன்று பாதுகாப்பின்மை பிரச்சனைகள்!!!
பெரும்பாலும் பெண்கள் தினம், தினம் பாதுகாப்பின்மையாக உணர்வது அவர்கள் சார்ந்த விஷயத்தில் தான். அவர்களது தினசரி வேலைபாடுகள், அன்றாட செயல்பாடுகளில் தான் இவர்கள் மிகவும் அச்சம் கொள்கிறார்கள். சில சமயங்களில் ஆண் அல்லது வேறு துணை இன்றி தாங்கள் செய்யும் வேலைகள் முழுமையாக வெற்றிபெறுமா என்ற அச்சம் பெண்களிடத்தில் இருக்கிறது.
பெண்களால் சிறு சிறு தோல்விகளை கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நிராகரிப்பு ஏற்படும் சமயங்களில் அவர்கள் செய்யும் சிறு தவறுகள் கூட பூதாகரமாக அவர்களது கண்களுக்கு தெரிகிறது. இதற்கான தீர்வுகள் அவர்களிடத்தில் தான் இருக்கிறது. ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தான் தடைகளை தகர்க்கும் ஒரே கருவி....

தோல்வி / நிராகரிப்பு
பெண்களால் தாங்கிக்கொள்ள முடியாத விஷயம் தோல்வி. தேர்வில் தொடங்கி, வேலை, காதல் உறவு என பெண்களால் பெரிதாய் தோல்விகளையும், நிராகரிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாது. உடனே, ஏதேனும் எதிர்மறை செயல்பாடுகளில் இறங்க தொடங்கிவிடுவார்கள்.

நேரம் வேண்டும்
தோல்வி, நிராகரிப்புகளில் இருந்து வெளிவர சில நேரம் எடுத்துக்கொள்ளும். இங்கு தான் பெண்கள் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள். அவர்களுக்கு தீர்வு உடனே கிடைக்க வேண்டும் என்ற சுபாவம் இருக்கிறது. இதிலிருந்து வெளிவந்து. அனைதிற்கும் நேரம் தேவை, இதுவும் கடந்து போகும் என்ற நிலையை எட்டுவதற்கான முதிர்ச்சியை பெண்கள் அடைய வேண்டும்.

சமூகத்தில் பங்கெடுக்க வேண்டும்
தோல்வியில் இருந்து மனதளவில் மீண்டு வர, நண்பர்கள் மற்றும் சமூகத்தோடு இணைந்து பழக வேண்டும். இது உங்கள் பயத்தை கொல்லும் அருமருந்து.

தன்னம்பிக்கை இன்மை
ஆண்களை விட பெண்கள் அதிகமாக தன்னம்பிக்கை ஊட்டுவார்கள். ஆனால், அவர்களிடம் அந்த நம்பிக்கை கொஞ்சம் குறைவாக தான் இருக்கும். இதிலிருந்து அவர்கள் கொஞ்சம் வெளிவர வேண்டும்.

சூழ்நிலைகளை கண்டு அஞ்ச வேண்டாம்
சூழ்நிலைகள் கண்டு பயந்து ஓடினால் அது நம்மை துரத்திக்கொண்டு தான் வரும். எனவே, நாம் அதை விரட்டி அடிக்க, எதிர்க்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். எனவே, பெண்கள் உறவு / வேலை சார்ந்து எந்த பிரச்சனை என்றாலும் அதை எதிர்த்து போராடும் குணம் கொள்ள வேண்டும்.

எல்லைகள் வரையறுக்க வேண்டாம்
உங்களுக்கான எல்லை இது தான் என்று குறுகிய வட்டத்தினுள் அடைப்பட்டு விட வேண்டாம். முன்னோக்கி செல்லுங்கள், நீங்கள் வெற்றிக் கொள்ளும் ஒவ்வொரு படியும் முடிவல்ல, அடுத்தக்கட்டத்திற்கான அடித்தளம் என்ற எண்ணம் பிறக்க வேண்டும்.

பரிபூரணமான செயல்பாடு
தாங்கள் செய்யும் வேலைகளில் தனியாக பரிபூரணமாக செய்து முடிக்க முடியுமா என்ற அச்சம் பெண்களிடம் இருக்கிறது. எனவே, தங்களது பாதுகாப்பிற்கு ஓர் ஆண் துணையை நாடுவார்கள். அது வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி. இதை விட்டு வெளியேற வேண்டும். உங்களால் முடியும் என்ற எண்ணம் பிறக்க வேண்டும்.

முதல் கோணல், முற்றிலும் கோணல் அல்ல
தோல்விகள் தாண்டாமல் வெற்றியை பறிக்க முடியாது. இல்லறத்தில் ஈடுபடுவதானாலும் சரி, சமைக்க கற்றுக்கொள்ள வேண்டுமானாலும் சரி முதலில் சில தவறுகள் ஏற்பட தான் செய்யும். இதை நீங்கள் பாதுகாப்பின்மை என உணர கூடாது.

முயற்சி திருவினையாக்கும்
முயற்சி செய்துக் கொண்டே இருங்கள். வெற்றி என்றும் உங்கள் வாசல் தேடி வராது. நாம் தான் வெற்றியை பெற வேண்டும். முயற்சி கண்டிப்பாக திருவினையாக்கும். சமையலில் ருசி சேர்க்க மட்டுமல்ல, உங்கள் சுய வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் முயற்சி உதவும்.



Click it and Unblock the Notifications
