Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பு சம்திங் ஸ்பெஷல் தாங்க...!
நம் எல்லோருடைய வாழ்விலும் நட்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நம் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமல்ல, நம் சந்தோஷங்களை பல மடங்கு அதிகரிக்கவும், துன்பங்களை முற்றிலும் குறைக்கவும் நமக்கு எப்போதுமே ஒரு நட்பு தேவைப்படுகிறது. இருவருக்குமிடையில் ஒரு நல்ல அலைவரிசை உருவாகுமிடத்தில் நல்லதொரு நட்பு செட் ஆகிவிடும்.
நல்ல நட்புக்கு வயது ஒரு தடை கிடையாது; ஆண்-பெண் பாகுபாடும் இல்லை. அதேபோல், ஆண் நட்பை விட பெண் நட்போ அல்லது பெண் நட்பை விட ஆண் நட்போ சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், ஒரு பெண்ணுடன் கொள்ளும் நட்பை விட, ஒரு ஆணுடன் வைத்துக் கொள்ளும் நட்பு வித்தியாசமானது. ஏன் சம்திங் ஸ்பெஷல் என்று கூட சொல்லலாம்.
நீங்கள் ஆணோ, பெண்ணோ தெரியாது. ஆனால், நீங்கள் ஆண்களின் நட்பையே பெரிதும் விரும்புவீர்கள் என்பதை உணர்ந்துள்ளீர்களா? ஆண்கள் தான் தங்கள் நட்புக்காக எதையும் செய்வார்கள் என்பதும் உண்மை தான். ஆண் நட்பே ஒரு ஸ்பெஷல் தான் என்பதற்கான 8 காரணங்கள் இதோ உங்களுக்காக...

இதயத்தைத் திறப்பார்கள்
ஆண் நட்புக்கு அழகே இதுதான். உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்களாகவே போட்டு உடைக்கும் வரை அநாவசியமாக உங்கள் ஆண் நண்பர்கள் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

அந்த நிமிடத்தில் வாழ்வார்கள்
ஆண் நட்புக்கு தேவையில்லாத ஃபார்மாலிட்டி எல்லாம் கிடையாது. நண்பனின்/நண்பியின் பிறந்தநாளை மறந்து விட்டோமே என்று மூலையில் உட்கார்ந்து அழமாட்டார்கள். இதுபோன்ற அல்பத் தனமான சின்ன விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, சந்தோஷமாக இருப்பார்கள்; நண்பர்களையும் சந்தோஷப்படுத்துவார்கள்.

உங்கள் மதிப்பு தெரியும்
உங்கள் ஆண் நண்பர்களுக்கு உங்கள் குழந்தைகளின் பெயரோ, உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதோ அல்லது உங்கள் சொந்த விஷயங்களோ ஒரு பொருட்டல்ல. உங்களுடன் உணர்வுபூர்வமாக இருப்பது தான் அவர்களுக்கு முக்கியம்!

எப்போதும் உங்கள் பக்கம்
ஆண் நட்பில் பொறாமை என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது. அவர்கள் நட்பு உண்மையானால், உங்களுடைய அனைத்து முடிவுகளிலும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.

நாடகம் ஆடுவதில்லை
பெண் நண்பர்கள் போல் ஆண் நண்பர்களுக்கு நாடகம் ஆடத் தெரியாது. தங்கள் மனதில் எதையும் போட்டு மூடி மறைக்க மாட்டார்கள். எதற்கும் தயங்காமல் பட்பட்டென்று வெளிப்படையாகப் பேசிவிடுவார்கள்.

சக நட்புக்கு மரியாதை
சக நட்புக்கு மரியாதை அளிப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்களே! இதன்மூலம் ஆயுளுக்கும் அவர்கள் உங்களுக்கு நண்பர்களாகவே இருப்பார்கள்.

குறைந்த பேச்சு, நிறைய செயல்
ஆண் நண்பர்கள் வளவளவென்னு அதிகம் பேசுவதில்லை. அதற்குப் பதில், காரியத்தைச் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள்.

உங்களை மதிப்பிட மாட்டார்கள்
ஆண் நட்பின் முக்கிய அம்சமே இதுதான். நீங்க நீங்களாகவே இருக்கலாம். நீங்கள் என்ன பேசுகிறீர்கள், செய்கிறீர்கள் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள் உங்கள் ஆண் நண்பர்கள்.



Click it and Unblock the Notifications