Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
குடும்பத்துடன் ஒன்றாக சாப்பிடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றித் தெரியுமா?
அன்பு, அக்கறை, ஒற்றுமை ஆகிய மூன்று வார்த்தைகள் தான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதன் பந்தத்திற்கும் ஏற்ற சிறந்த வார்த்தைகளாக விளங்குகின்றன. இவ்வளவு ஆண்டுகளை கடந்த பின்பு நாம் வளர்ச்சியடைந்து வருகின்றோம் என்று கருதும் நாம் இந்த உலக நடப்பிற்கேற்ப நமது செயல்களை மாற்றி அமைத்துக் கொள்கின்றோம் என்ற கருத்து இன்றியமையாதது. இப்படி இருக்கையில் குடும்பத்துடன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற காரியங்களை அறவே மறந்து விட்டோம். குடும்பத்துடன் ஒன்றித்து இருப்பது, ஒன்றாக ஒரு இரவு உணவிற்கு வெளியே சென்று நேரத்தை அவர்களுடன் செலவிட்டு மகிழ்வது போன்ற அடிப்படையான விஷயங்களை மறந்து விடுகின்றோம். எப்படியிருந்தாலும் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உண்ணும் போது உங்களுக்குள் இருக்கும் உறவு பலப்படுகின்றது என்ற கருத்தை நாம் மறுக்க முடியாது.
நவீன குடும்ப கலாச்சாரத்தில் இருக்கும் நாம் நேரமின்மையின் காரணமாக நமது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவு செய்ய முடிவதில்லை. இளைஞர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்வை அனுபவிக்கும் தருணத்தில் அதாவது படிப்பு, விளையாட்டு போன்ற காரியங்கள் அவர்களை ஆட்கொள்கின்றது. வேலை தேடுபவர்களும், வேலைக்கு செல்பவர்களும் அவர்களது வேலையில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். இத்தகைய சூழலில் குடும்ப கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்த நினைப்பது சிறிது கடினம் தான். அப்படி செய்ய முடியும் என்றால் அதை எவ்வாறு செய்வது என்று கருத்தில் கொண்டு விரைவில் அதை செயல்படுத்த வேண்டும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியமானதாகும். பெற்றோர்களாகவும், பெரியவர்களாகவும் இருக்கும் நீங்கள் இதை நிச்சயம் புரிந்து கொண்டு குடும்பத்தை ஒன்றுபடுத்தி அதற்கேற்ப நடக்க வேண்டும்.
உங்கள் பழைய நினைவுகளை அலசிப் பார்த்தீர்களானால் உங்களது குடும்பத்துடன் சாப்பிடும் போது நீங்கள் செலவிட்ட சில தருணங்களில் சிறந்த மற்றும் அற்புதமான நேரங்கள் உங்களுக்கு நினைவில் வரும். இது ஒன்றே உங்கள் நினைவில் இருக்கும் பசுமையான நினைவுகளாகும். ஒன்றாக அமர்ந்து நேரத்தையும், வாழ்க்கையையும் மற்றும் அன்று நடந்த சம்பவங்களையும் சாப்பாட்டு மேசையில் பகிர்ந்து கொள்வதே அன்றைய பாரம்பரியமாகும். கீழ்காணும் பகுதியில் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதன் சிறப்புகளையும், அது குடும்பத்தினரை எவ்வாறு ஒன்றுபடுத்துகிறது என்பதையும் நாம் காண்போம்.

சாப்பிடும் போது ஒன்றுபடுவது
ஒன்றாக சாப்பிடும் படலம் உங்களது உறவை பிணைப்பது மட்டுமல்லாமல், உங்களுடைய வாரிசுகளையும் உறவாட வைக்கின்றது. இந்தக்கால இளைஞர்கள் கண்டிப்பாக தினமும் பெற்றோருடன் உறவாட வேண்டும். இச்செயல் உங்களது பிள்ளைகளின் தேவைகளையும் எண்ணங்களையும் உங்களுக்கு தெளிவுபடுத்தும்.
பிரச்சனைகளை தீர்க்குமிடம்
உங்களுக்குள் இருக்கும் கேள்விகளையும் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளும் சிறந்த இடம் உணவு உண்ணும் மேசை தான். இவ்வாறு உங்கள் சந்தேகங்களை தீர்த்து குடும்பத்துடன் இருக்கும் உங்களது உறவை மேலும் சீர் செய்ய முடியும்.
களைப்பை போக்குபவை
அயராது உழைத்த பின் பதற்றத்துடனும் மன அழுத்தத்துடனும் இருப்பது உங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மேலும் காயப்படுத்தும். இந்த சூழ்நிலையில் தனிமையாக இருந்தால் அது மேலும் வலியை கூட்டும். ஆனால் குடும்பத்துடன் ஒன்றாக சாப்பிடும்போது உங்களையே நீங்கள் மறந்து உங்களது மன அழுத்தம் குறைந்து குடும்ப பிணைப்பையும் அதிகரிக்கும்.
குழந்தைகளை கண்காணியுங்கள்
உங்கள் குழந்தைகளை சாப்பாடு மேசையில் காண்பதே அரிதாக இருக்கும். அவர்களுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்தை எவ்வாறு வழங்குவீர்கள்? நீங்களும் அவர்களுடன் சேர்ந்து உண்ணும் போது அவர்களையும் சாப்பிட வைக்கலாம். ஊட்டச்சத்து குறைவின்றி குடும்ப பிணைப்பையும் வளர்க்கலாம்.
தடைகளை உடைப்பது
குறைந்த நேரத்தை குடும்பத்துடன் செலவு செய்வதால் நீங்கள் நீங்களாக வாழவும் அதை குடும்ப அங்கத்தினருடன் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் போய் விடுகின்றது. ஒன்றாக உண்பதன் மூலம் இத்தகைய தடைகளை உடைத்து மற்றவர்களுடன் பேசி உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் உள்ள உறவை மேம்படுத்த முடியும்.
நன்றாக தெரிந்து கொள்ளுதல்
குழந்தைகள் விரைவாக வளர்ந்து விடுகின்றனர். வெகு சீக்கிரம் முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தையும் பெற்று விடுவர். இச்சமயத்தில் சேர்ந்து உண்பதன் மூலம் அவர்களின் எண்ணங்கள், உங்கள் கணிப்புக்கள் ஆகியவற்றை பகிர்ந்து ஒரு ஆரோக்கியமான உரையாடலை செய்து உங்கள் பந்தத்தை உறுதிப்படுத்த முடியும்.
சாப்பிடும் பாங்கு அறிதல்
ஒன்றாக உண்பதன் மூலம் உங்கள் குடும்பம் ஒன்றுபடுவது மட்டுமல்லாமல் உங்கள் பிள்ளைகளுக்கும் சிறந்த சாப்பிடும் பாங்கை (ஒழுங்கு) கற்றுக் கொடுக்க முடியும். இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகின்றது. இத்தகைய பயிற்சிகள் அவர்களுக்கு உதவியாக இருப்பது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அவர்களின் பிள்ளைகளுக்கும் இதை கற்றுத் தர உதவும்.
குடும்பத்தின் பிணைப்பையும் உறவுகளையும் உறுதியாக்கும் வழிகள் பல உள்ளன. இவற்றை பயன்படுத்தி நீண்ட காலத்திற்கு நிலையான மற்றும் மகிழ்ச்சியான உறவை ஏற்படுத்த மறவாதீர்கள். ஒரு குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதற்கு நன்றி சொல்லுங்கள். ஒரு முறை தான் வாழ்க்கை அமையும் என்பதை மறந்துவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications