Latest Updates
-
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி அஜித் - ஷாலினி.. காதல் ஸ்ட்ராங்காக இருக்க என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித்குமாரும், நடிகை ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். கடந்த 2000ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆன பிறகும் இரண்டு பேருக்குள்ளும் இருக்கும் காதல் சுத்தமாக குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இந்த வருடத்தில் அவர் நடித்த குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸாகின. இவற்றில் விடாமுயற்சி மோசமான தோல்வியை சந்தித்தது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்தப் படத்துக்கு பிறகு வெளியான குட் பேட் அக்லி விடாமுயற்சியைவிட மோசம் இல்லை என்று பெயர் எடுத்தாலும் அது அஜித் ரசிகர்களுக்கு மட்டும்தான் பிடித்திருந்தது. பொதுவான ரசிகர்கள் கொஞ்சமும் அப்படத்தை ரசிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
ஒரே நேரத்தில் இரண்டில் கவனம்: அஜித் இப்போது கார் ரேஸில் தீவிரமான கவனத்தை செலுத்திவருகிறார். முதலில் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த ரேஸில் தனது ரேஸிங் டீமோடு களமிறங்கி வெற்றி பெற்ற அவர்; இப்போது மலேசியாவில் தனது டீமுடன் முகாமிட்டு ரேஸ் செய்துவருகிறார். மற்ற நாடுகளில் நடந்த ரேஸில் எப்படி தனது டீமோடு தடத்தை பதித்தாரோ அதேபோல் மலேசிய ரேஸிலும் கெத்து காட்டுவார் என்று ஏகே ரசிகர்கள் உச்சபட்ச நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சினிமாவை பொறுத்தவரை அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஷாலினியுடன் திருமணம்: இதற்கிடையே அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அதில் ஹீரோயினாக நடித்த ஷாலினியை காதலித்தார். இந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த ஆம் ஆண்டு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் செய்துகொண்ட கையோடு சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கிவிட்டார் ஷாலினி. அந்தத் தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். மகன் ஆத்விக் கால்பந்தில் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்.
கோலிவுட் ஃபேவரைட்: அஜித்தும் ஷாலினியும் கோலிவுட்டின் ஃபேவரைட் ரியல் ஜோடிகளாக 20 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறார்கள். ஹன்சிகா மோத்வானியுடனான காதலின்போதுகூட, 'நாங்கள் அஜித் - ஷாலினி போன்று ஒற்றுமையாக இருப்போம்' என சிம்பு கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. அவர் மட்டுமின்றி ரசிகர்களும்கூட இவர்கள் இரண்டு பேருக்குள்ளும் இருக்கும் காதலின் ஆழத்தையும், வலிமையையும் பார்த்து மெய்மறந்து ரசிப்பார்கள். இந்நிலையில் அவர்களது காதல் ஸ்ட்ராங்காக இருப்பதற்கான காரணங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
என்ன காரணம்?: அதாவது அஜித்தும், ஷாலினியும் காதலிக்கும்போது மட்டுமின்றி திருமணம் செய்துகொண்ட பிறகும்கூட ஒருவருக்கொருவர் நேரம் செலவிடுவதை முக்கியமாக வைத்திருக்கிறார்களாம். எவ்வளவு வேலையாக இருந்தாலும் சரி அன்று நடந்ததை குறிப்பிட்ட நேரம் இரண்டு பேரும் பேசிக்கொள்வார்களாம். அதேபோல் எந்த பிரச்னை வந்தாலும் அவர்கள் தங்களுக்குள் ஈகோ என்பதையே காட்டாமல் உடனடியாக விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு சென்றுவிடுவார்களாம்.
முடிவு எடுக்கும்போது: அதேபோல் அஜித்தோ அல்லது ஷாலினியோ ஒரு முடிவை எடுக்கும்போது எதிர்காலத்தில் அதனால் வரும் விளைவுகள், இப்போது அந்த முடிவை எடுப்பது நல்லதுதானா என பல விஷயங்களை ஆற அமர்ந்து ஆராய்ந்துதான் எடுப்பார்களாம். இதனால் ஒருவருக்கொருவர் அன்யோன்யம் அதிகரித்து இவ்வளவு காதலோடு மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications