பருவமெய்திய பெண்கள் பயமில்லாமல் கூறும் சில விஷயங்கள் - அம்மாடியோவ்!!!

By: John
Subscribe to Boldsky

பெண்கள் என்றாலே வெட்கம், மடம், நாணம், பயிர்ப்பு, கூச்சம் போன்ற சுபாவங்கள் உடையவர்கள் என்று (இன்றும்) நீங்கள் எண்ணினால், சாரி பாஸ், அது இறந்த காலம். இன்றைய தேதியில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் தைரியமாக இருக்கிறார்கள்.

முப்பது வயதில் ஆண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!

"நம் நாட்டில் மட்டும் கற்பழிப்பு மற்றும் பெண் பாலிய வன்கொடுமைகளுக்கு சரியான சட்டமும், கடுமையான தண்டனைகளும் பிறப்பிக்கப்பட்டால், நிச்சயமாக நம் நாட்டு பெண்கள் பல துறைகளில் சாதிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன..."

பெண்கள், ஆண்களிடம் இரகசியமாக விரும்பும் சில விஷயங்கள்!!

ஆண்கள் கூட சில விஷயங்களை வெளியில் பேச பயப்படுவார்கள். ஆனால், பருவமெய்திய ஒரு பெண் பயமில்லாமல் சில விஷயங்களை இந்நாட்களில் பேசுகிறாள். அது என்னென்ன என்று இனி பார்க்கலாம்....

"பேச்சுலர் லைஃப் டூ பேஜாரான லைஃப்" - திருமணத்திற்கு பின் ஆண்களின் வாழ்க்கை!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுறவில் எனக்கு விருப்பம் இருக்கிறது

உடலுறவில் எனக்கு விருப்பம் இருக்கிறது

அனைத்து உயிரினங்களின் அடிப்படை விதி உடலுறவு. ஆனால், அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தைகள் கூட பேசிக்கொள்ளும் நமது ஊர்களில், உடலுறவு குறித்து பேசுவதற்கு தயங்குகிறோம். ஆனால், இன்றைய முதிர்ச்சியான பெண்கள் உடலுறவு பற்றி பேசுவதற்கு எல்லாம் தயங்குவதே இல்லை.

என் உடல்வாகை நான் ரசிக்கிறேன்

என் உடல்வாகை நான் ரசிக்கிறேன்

பொதுவாகவே யாரெல்லாம் தங்களை தாங்களே விரும்புகிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள் என்ற ஓர் கூற்று இருக்கிறது. இன்றைய பெண்கள் அவர்களை அழகாக வைத்துக்கொள்வது மட்டுமின்றி. அவர்களை அவர்களே மிகவும் விரும்புகின்றனர். அதை வெளிப்படையாக கூறவும் செய்கின்றனர். (உங்க ஃபேஸ் புக் வாலில் நிறைய பார்த்திருப்பீர்களே!!)

வயதை மறைப்பது இல்லை

வயதை மறைப்பது இல்லை

காலம் காலமாக இரகசியமாக வைத்திருந்த ஒன்றான பெண்களின் வயதை இன்று யாரும் பெரிதாய் மறைப்பதில்லை. ஏனெனில், அன்றெல்லாம் வயது அதிகமானால் யாரும் பெண்களை விரும்பமாட்டார்கள் என்ற எண்ணம் இருந்தது. (இப்ப எல்லாம், பசங்க மூத்த பொண்ணுகள தான் சாமி விரும்புது... இதுக் கூட ஒரு காரணமோ இருக்குமோ!!!)

ஓரின சேர்க்கையாளர்கள்

ஓரின சேர்க்கையாளர்கள்

ஆண்கள் கூட வெளியில் கூற தயங்கும் ஓர் விஷயம் ஓரின சேர்க்கையாளர்கள் என்பது. ஆனால், பெண்கள் தங்களை ஓரின சேர்க்கையாளர்கள் என்று கூறிக்கொள்ள தயங்குவதே இல்லை. கொல்கத்தாவில், பெண்கள் நடத்திய ஓரின சேர்க்கையாளர்கள் போராட்டத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

சமைக்க மாட்டேன் / தெரியாது

சமைக்க மாட்டேன் / தெரியாது

முன்பெல்லாம் ஓர் பெண் தனக்கு சமைக்க தெரியாது, கோலமிட தெரியாது என்றால், அவளெல்லாம் ஓர் பெண்ணா என்று கூறுவார்கள். ஆனால், இன்றோ, இதெல்லாம் தெரியாது என்பது பெண்களுக்கு பெருமையாகிவிட்டது. (சரி விடுங்க பாஸ், பசங்க எவ்வளவு காலமா ஊதாரியா இருந்துருக்காங்க..)

ஆண் நண்பர்கள் பற்றி

ஆண் நண்பர்கள் பற்றி

இது உண்மையிலேயே ஓர் நல்ல முன்னேற்றம் என்று தான் கூற வேண்டும். பெண்கள் தங்களது ஆண் நண்பர்கள் பற்றி கூறுவது, பேசுவது மிக சாதாரணமான ஒன்று. நம்ம தாத்தா, பாட்டீஸ் இத எல்லாம் கேட்ட, "தொடப்பக்கட்ட பிஞ்சிரும் நாயே.." என்ற வாழ்த்துகள் தான் வரும்.

மது, புகை

மது, புகை

இன்றைய பெண்கள் தாங்கள் மது அருந்துவதையோ, புகை பிடிப்பதையோ பெரிய குற்றமாக கருதுவது இல்லை. ஆண்களே, பல காலமாக அதை பற்றி பெரிதாய் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பெண்களுக்கு சாதகமாக இருக்கிறது.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

தாங்கள் அதிகமாக சம்பாதிக்கிறோம் என்பது பற்றி பெண்கள் வெளிப்படையாக கூறுவது. இதில் எந்த தவறும் இல்லை. (என்ன, புருஷனவிட அதிகமா சம்பாதிச்சா பாவம் அந்த பக்கி.... நொந்தே செத்துரும்..) இது குடும்பத்தை வளர்க்க உதவும் ஒன்று தான். ஆண்கள் சம்பாதிக்கும் போது, பெண்கள் சம்பாதிக்க கூடாத என்ன??

திருமணம் குழந்தைகள்

திருமணம் குழந்தைகள்

முன்பெல்லாம் பெண்கள் எனக்கு திருமணம், வேண்டாம் எனக்கு பிடிக்கவில்லை என்றால், "வெளக்கமாறு பிஞ்சிரும்" என்று அம்மாவின் குரல் கேட்கும். ஆனால் இன்று அப்படி இல்லை, பெரும்பாலான் பெற்றோர்களும் அவர்களது குழந்தைகளுக்கு விருப்பமான போது திருமணம் செய்துக் கொள்ளட்டும் என விட்டு விடுகின்றனர். ஆனால், 25-30 வயதிற்கு மேல் பெண்களுக்கு குழந்தைக் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படுவதை அவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

குரல் உசத்துவது

குரல் உசத்துவது

முன்பு நாம் கூறியதை போலவே, பெண்கள் என்றால் வெட்கம், மடம், நாணம், பயிர்ப்பு, கூச்சம் இறந்த காலத்தில் இருந்தது. இன்றைய பெண்கள் ஆண்களுக்கு இணையாக வீட்டிலும், ரோட்டிலும் குரலை உசத்துகின்றனர். இது சமவுரிமை. அவர்களை அவர்கள் காத்துக்கொள்ள குரலை மட்டுமில்ல கையையும் கூட உசத்தலாம். ஆண்கள் வேடிக்கை பார்க்கும் போது, பெண்கள் தானே பெண்களை காத்துக் கொள்ள வேண்டும். (என்ன நான் சொல்றது...!!!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Things Grown Women Do Not Fear Saying

A grown and matured women do not fear to say these twelve things. Take a look.
Subscribe Newsletter