Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
1 கப் மீல்மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
Soya Kheema Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் அடிக்கடி சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு பெரும்பாலும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் அசைவ சுவையில் சைடு டிஷ் கேட்கிறார்களா? வீட்டில் 1 கப் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு மசாலா செய்யுங்கள்.

இந்த மசாலா அசைவ சுவையில் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். ஒருமுறை இந்த மீல்மேக்கர் கீமா மசாலாவை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அதுவும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
இந்த சோயா கீமா மசாலா ரெசிபி குறித்து chennai_variety_foods என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த மீல் மேக்கர் கீமா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் கீமா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* வேக வைத்த பச்சை பட்டாணி - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
கொதிக்க ஆரம்பித்தும், அதில் 1 கப் மீல் மேக்கரை சேர்த்து 10 நிமிடம்
ஊற வைத்து எடுத்து, அதில் உள்ள அதிகப்படியான நீரை கைகளால்
பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் சேர்த்து ஒருமுறை அரைத்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு , பொடியாக நறுக்கிய வெங்காயம், 1
கொத்து கறிவேப்பிலை, சிறிது புதினா சேர்த்து, வெங்காயம் கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
கிளறி, மூடி வைத்து, தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து,
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மீல் மேக்கரை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் 2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து,
எண்ணெய் பிரிய வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மூடியைத் திறந்து கிளறி, வேக வைத்துள்ள பச்சை பட்டாணியை
சேர்த்து கிளறி, 1 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான மீல் மேக்கர் கீமா மசாலா தயார்.



Click it and Unblock the Notifications