Latest Updates
-
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க -
ஜூலை 07-ல் வக்ர புதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண கஷ்டம் குறைந்து செல்வம் பெருகும்.. -
தமிழ்நாட்டின் இந்த ஒரு மாவட்டத்தை மட்டும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யவே முடியவில்லையாம் - ஏன் தெரியுமா? -
1 கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா.. இப்படி குழம்பு செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் கோடீஸ்வரராகும் யோகமுள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
கோபமாக இருக்கும் கணவரை கூலாக்குவதற்கான சில ஸ்மார்ட்டான வழிகள்!!!
கோபம் என்பது ஒரு பெரிய எதிரி. இத்தகைய கோபம் ஒருவரிடம் வந்தால், எளிதில் போக்க முடியாது. மேலும் ஒவ்வொருவருக்கும் கோபமானது வித்தியாசமாக இருக்கும். ஆனால் அந்த மாதிரியான கோபமானது உறவுகளுக்கும் வந்தால், அது அந்த உறவையே பாழாக்கிவிடும். பொதுவாக ஆண்கள் அலுவலகத்தில் உள்ள டென்சனை வீட்டில் உள்ள மனைவியிடம் தான் வெளிப்படுத்துவார்கள். அவ்வாறு தேவையில்லாமல் கணவர் கோபத்தை வெளிப்படுத்தும் போது, மனைவிமார்கள் அவர்களை புரிந்து கொண்டு, அவர்களது கோபத்தை போக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
அதிலும் ஒரு நல்ல மனைவிக்கு அழகு என்றால், அது கணவரைப் பற்றி நன்கு தெரிந்திருப்பதே ஆகும். அவ்வாறு கணவரை நன்கு புரிந்திருந்தால், கணவருக்கு வரும் கோபத்தை எளிதில் சரிசெய்யலாம். அத்தகையவர்களுக்காக கணவரது கோபத்தை போக்குவதற்கான சில சூப்பர் டிப்ஸ்களை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்து பாருங்கள்.

* கணவர் கோபமாக இருக்கும் போது, மனைவி நிச்சயம் அமைதியாக இருக்க வேண்டும். அதிலும் தேவையில்லாமல் திடீரென்று கோபத்துடன் பேசுகிறார் என்றால், அலுவலகத்தில் உள்ள டென்சனாகத் தான் இருக்கும் என்று மனைவிமார்கள் சிறிது நேரம் அமைதியாக இருக்க வேண்டும். ஏனெனில் சாதாரணமாகவே பெண்கள் ஆண்களிடம் ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் கணவன் கோபமாக இருக்கும் போது, கேள்விகளை கேட்டால், பின் திட்டாமல் என்ன செய்வார்கள். ஆகவே அவர்களை சற்று நேரம் தனிமையில் விட வேண்டும்.
* ஆர்வக்கோளாறில் கோபத்துடன் இருக்கும் கணவரிடம் சென்று, என்ன பிரச்சனை என்று உடனே அவரது பிரச்சனைகளைப் பற்றி கேட்க வேண்டாம். ஏனெனில் பொதுவாக கோபமாக இருப்பவர்கள் சாந்தமடைய வேண்டுமெனில், அவர்களை தனியாக யோசிக்க விட வேண்டியது தான். இதனால், அவர்கள் கோபத்திற்கான காரணத்தை யோசித்து, அமைதியாகி அவர்களே வந்து பேசுவார்கள்.
* சில நேரங்களில் தனிமையால் கூட கோபத்தை அடக்க முடியாது. அதுமட்டுமின்றி, சிலர் மனதில் உள்ள பாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். எனவே கணவர் கோபமாக இருக்கும் போது, அருகில் சென்று தொடும் போது அவர்கள் அமைதியாக சென்று விடு என்று சொன்னால் மட்டுமே, தனிமையில் விட வேண்டுமே தவிர, அவ்வாறு சொல்லாவிட்டால், அவர்கள் கோபத்தின் காரணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று அர்த்தம். எனவே இதைப் புரிந்து நடந்து கொள்ளுமல் நல்லது.
* பழைய கால ட்ரிக்ஸைக் கூட பயன்படுத்தலாம். அது என்னவென்றால், அவர்கள் கோபமாக இருக்கும் போது, அவர்களை கட்டி அணைத்து, முத்தம் கொடுத்து, அவர்களது மனதை மாற்றலாம். சொல்லப்போனால், இதனால் நிச்சயம் கோபம் போகும்.
* ஒருவேளை கணவர் உங்களது செயலால் தான் கோபமடைந்துள்ளார் என்றால், அப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதிலும் இந்த மாதிரியான காரணத்தினால் வரும் கோபத்தை எளிதில் போக்க முடியாது. ஏன், அவர்களிடம் பேசக்கூட முடியாது. ஏனெனில் அந்த அளவில் கணவருக்கு கோபமானது இருக்கும். ஆகவே இந்த மாதிரியான சூழ்நிலையில், அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு அழகான கவிதை அல்லது மன்னிப்பு என்று எழுதிய பேப்பரை வைத்து கேட்கலாம்.
இவையே கோபமாக இருக்கும் கணவரை ஸ்மார்ட்டாக கூலாக்குவதற்கான சில வழிகள். இவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் கோபத்தைப் போக்கலாம்.



Click it and Unblock the Notifications