Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
முறிந்து போன நிச்சயதார்த்தத்தில் இருந்து மீள்வது எப்படி?
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு ஏதோ காரணத்தினால், அது முறிந்து போயிருந்தால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வது மிகவும் கடினம். கனவுகள், நம்பிக்கைகள், எதிர்காலத்தைப்பற்றிய ஆசைகள் அனைத்தும் ஒரு கணத்தில் தரை மட்டமாகியிருக்கும்.
வீட்டில் ஆசை ஆசையாக வாங்கி வைத்திருந்த, மணப்பெண்களுக்கான மணக்கோலத்தில் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகள் பீரோவில் தொங்கிக் கொண்டிருக்க, திருமண அழைப்பிதழ்கள், அனுப்பப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்க.. நிச்சயம் மனம் வேதனையின் உச்சத்திற்குச் சென்றிருக்கும்.
நிச்சயதார்த்தம் முறிந்து போய் திருமணம் நின்ற பிறகு, அதன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, உங்களுக்கென்று ஒரு மாறுபட்ட புதிய எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கான சில வழிகளைக் கீழே காண்போம்.
பழைய காதலன்/காதலியைப் போல், வேறு ஒருவரை எங்குமே காண முடியாது என்று நம்பாதீர்கள். அது உடனடியாக இல்லை என்றாலும், நீங்கள் அப்படிப்பட்ட ஒருவரை விரைவிலேயே சந்திப்பீர்கள். எதற்குமே தகுதியானவர் இல்லை என்று தாழ்த்திக் கொள்ளாதீர்கள். அப்படிப்பட்ட எண்ணம் வராமல் தடுத்திடுங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை வரக் காரணம், இரண்டு பேர் சேர்ந்து சரியாக செயல்படாமல் போனது தான்.

பழைய நினைவுகள்
பழைய காதலையும், காதலரைப் பற்றியும் நினைவுபடுத்தும் பொருள்கள் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கான கட்டாயமான முதல் நடவடிக்கை இதுவாகும். அப்பொருட்களை தூக்கி தூரப் போடுங்கள் அல்லது கண்ணுக்குத் தெரியாமல் பரண் மேல் போடவும்.

உணர்ச்சிகள்
அழ முடிந்தால் அழுதுவிடுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுதுவிடுங்கள்.சில நாட்களுக்கு சோகத்தில் புரளுங்கள். சோகத்தை வெளிப்படுத்துகள். இறுதியில் புதிய வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள புத்துணர்வுடன் பூப்போல மலருங்கள். ஒவ்வொரு முடிவிலிருந்தும் ஒரு அழகிய தொடக்கம் பிறக்கும். இதுதான் வாழ்க்கை, உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் நீதி.

தெரியப்படுத்தவும்
பழைய சகஜமான நிலைக்கு உறுதியாகத் திரும்பியவுடன், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் திருமணம் நிறுத்தப்பட்ட விஷயத்தை தெரியப்படுத்தவும். அனைவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, திருமணத்திற்காக பதிவு செய்திருந்த பயணச் சீட்டு, ஹோட்டல் அறைகளை ரத்து செய்யவும். நண்பர்களும் உறவினர்களும் பாசத்தோடு அளித்த பரிசுப் பொருட்களை திருப்பி அனுப்பிவிடுங்கள். வந்திருந்த பரிசுப் பொருட்களைத் தவறாமல் திருப்பி அனுப்பும்போது, "நன்றி" செய்தியுடன் அனுப்ப மறக்காதீர்கள்.

நேரம்
அக்கறை கொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். நின்றுபோன திருமணத்தை நினைவிலிருந்து மறக்க இது உதவும். மேல் அன்பும், பரிவும், பாசமும் காட்டும் மக்கள் உங்களைச் சுற்றி இந்த நேரத்தில் இருப்பது அவசியம். அவர்கள் வேதனையையும், சோகத்தையும் பகிர்ந்து கொண்டு, இம்மாதிரியான சூழ்நிலையை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்று உங்களுக்கு அறிவுரை கூறுவார்கள். மேலும் அவர்கள் தம்மையே ஒரு நிரூபணமாக்கி நம்பிக்கையூட்டுவார்கள்.

தேன் நிலவு
ஒரு உண்மையான நண்பருடனோ அல்லது தனியாகவோ,எங்காவது தூரமான ஒரு இடத்திற்குப் பயணம் சென்று தங்கி வாருங்கள். வித்தியாசமான இடமாக அது இருக்கட்டும். மேலும் வித்தியாசமாக அல்லது துணிச்சலாக ஏதாவது செய்யுங்கள். வழக்கமான வாழ்க்கைப் பயணத்தில் செய்து வந்ததை விட, வித்தியாசமாக ஏதாவது செய்யும் போது புத்துணர்வு பெருகும், பழையன மறந்து போகும். புதிய இடங்களுக்குச் சென்று தங்கியிருக்கும் போது, ரிலாக்ஸ் செய்வதோடு, விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள மறந்துவிடாதீர்கள்.

கற்றுக்கொள்ளுங்கள், மன்னியுங்கள்
திருமண நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் செய்து கொள்வதென்ற முடிவு, இரண்டு நபர்களால் செய்யப்பட்டது. அடுத்தவரிடம் மட்டும் குறை கண்டுபிடிக்கத் தொடங்கி ஆராய்ந்தால், அது கோபத்தினை மேலும் தூண்டிவிடும். என்ன நடந்தது என்று கொஞ்சம் ஆராயுங்கள். மிகையாக அலசி ஆராய வேண்டாம். இரண்டு பக்கமும் தவறு இருப்பதாக கருதினாலோ அல்லது உங்கள் பக்கம் மட்டுமே தவறு உள்ளது என்று கருதினாலோ, அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். தவறினை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். காதலரின்/காதலியின் தவறினை மன்னித்துவிட்டதாகக் கூறுங்கள். அடுத்தவரது தவறுகள் குறித்துக் குறை கூறாமல் அதனை நீக்கும் வண்ணம் மன்னிப்பு அமையட்டும். இனிமையான தருணங்களைத் தந்ததற்காக காதலருக்கு நன்றி கூறுங்கள்.

மோதிரம்
நிச்சயதார்த்த மோதிரத்தினை இன்னும் வைத்திருந்தால், அதனை காதலர்/காதலிக்கு அணிவியுங்கள். அது இல்லையென்றாலோ, விற்றுவிட்டாலோ, காலமெல்லாம் மனம் வருந்தி வருந்தி நொந்து போக நேரிடலாம்.



Click it and Unblock the Notifications











