Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
நண்பர்களே! டேட்டிங் போறீங்களா? முதல்ல இத படிங்கப்பா...
அருமையான உணர்வுகளில் ஒன்று தான் காதல். அந்த காதல் வந்தால், அப்போது ஆண்களுக்கு காதலியை தவிர வேறு எந்த ஒரு நினைப்புமே இருக்காது. சொல்லப்போனால் எப்போதுமே ஏதோ ஒரு யோசனையில் இருப்பார்கள். அதிலும் காதலை காதலி ஒப்புக் கொண்டால், அப்போது வரும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. இந்த நேரம் ஆண்கள் உலகமே தன் கையில் உள்ளது போலும், நீண்ட நாள் கனவு நிறைவடைந்தது போலும் மிதப்பார்கள். அதுமட்டுமின்றி, தன் காதலி மறக்க முடியாத அளவு, அவளை வியக்க வைக்கும் வகையில் வெளியே டேட்டிங் அழைத்து செல்ல வேண்டுமென்று நினைப்பார்கள். அவ்வாறு முதல் டேட்டிங் செல்லும் போது, ரொமான்ஸாகவும், அவளை சந்தோஷப்படுத்தும் வகையிலும் எந்த இடம் சரியாக இருக்கும் என்று நன்கு யோசித்து, பின்னர் அழைத்து செல்ல வேண்டும்.
பொதுவாக ஆண்கள் டேட்டிங் என்றால் இரவு நேர விருந்து அல்லது சினிமா செல்லலாம் என்று தான் நினைப்பார்கள். ஆனால், சற்று வித்தியாசமாகவும், மனம் விட்டு பேசும் வகையிலும் இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்றால், காதலியின் மனதை ஈர்ப்பதோடு, நீங்கள் எதிர்பாராத வகையில் அவர்கள் நடந்து கொள்வார்கள். முக்கியமாக அவர்களை அழைத்து செல்லும் போது, அவர்களது மனதை நன்கு தெரிந்து கொண்டு, அவர்களுக்கு எந்த மாதிரியான இடங்கள் பிடிக்கும் என்பதை புரிந்து கொண்டு, பின்னர் முடிவெடுப்பது நல்லது. இல்லையெனில் அந்த முதல் டேட்டிங், கடைசி டேட்டிங் ஆகிவிடும். இப்போது டேட்டிங்கிற்கு எந்த மாதிரியான இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம் என்று அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அது என்னவென்று படித்து, உங்கள் டேட்டிங் இடத்தை சிறந்த ரொமான்ஸ் இடமாக மாற்றுங்கள்.

நீர் சூழ்ந்த இடம்
இது என்னவென்றால், நம்மை சுற்றி நீர் இருக்கும் இடம். இந்த மாதிரியான சூழல் அமைதியாக இருப்பதால், எந்த ஒரு இரைச்சலும் இல்லாமல் நிம்மதியாக மனம் விட்டு பேசிப் பழகலாம். அதுமட்டுமின்றி, அதிகமான ரொமான்ஸ் இருக்கும். இது டேட்டிங் செல்வதற்கு சிறந்த ஒரு இடம்.

நீச்சல் குளம்
எப்படி நீச்சல் குளம் சிறந்த டேட்டிங் இடமாக இருக்கும்? என்று கேட்கலாம். நிச்சயம் சிறப்பானதாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கும். எப்படியெனில், இந்த நேரம் நீரில் விளையாடிக் கொண்டே, சும்மா சூப்பராக 'இச் இச் இச் கொடு...' என்ற பாட்டை போல், சூப்பரான ரொமான்ஸோடு பேசலாம். இத்தகைய ஐடியாவும் மறக்க முடியாததாக இருக்கும்.

பார்க்
டேட்டிங் சிம்பிளாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், காதலியை பார்க்கிற்கு அழைத்துக் கொண்டு செல்லலாம். இதனால் மனதில் இருக்கும் விஷயங்களை தெளிவாக எந்த ஒரு தொந்தரவில்லாமல் பேசலாம். மேலும் மனமும் பேசிக் கொண்டிருக்கும் போது, அந்த விஷயத்திலிருந்து மனதை அலைய விடாமல், நன்கு யோசிக்க வைக்கும்.

கடற்கரை
ரொமான்ஸ் செய்வதற்கு கடற்கரையை விட சிறந்தது வேறு எதுவுமில்லை என்று சொல்லலாம். இந்த இடமும் டேட்டிங் சென்று, ரிலாக்ஸ் செய்வதற்கு சிறப்பானது தான்.

ரெஸ்ட்டாரண்ட்
மாலை வேளையில், சூரியன் மறையும் நேரம் திறந்தவெளி ரெஸ்ட்டாரண்ட் அழைத்துச் சென்றாலும், மிகவும் சூப்பராக இருக்கும். அதிலும் இந்த நேரம் சூரியன் மறைவதை பார்த்துக் கொண்டே, ஜூஸ் குடித்துக் கொண்டு பேசினால், அந்த ரொமான்ஸே தனி தான்.

மதிய உணவு
அதிக வேலை உள்ளவர்களாக இருந்தால், அப்போது மதிய வேளையில் திடீரென்று காதலி எதிர்பார்க்காத நேரத்தில், ஏதேனும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, ஒன்றாக உட்கார்ந்து, பேசிக் கொண்டே சாப்பிடலாம்.

பார்ட்டி
உங்களது டேட்டிங் மிகவும் குளிர்ச்சியாக ஒரு பெரிய பார்ட்டி போன்று இருக்க வேண்டுமென்றால், உங்கள் காதலியை டிஸ்கோ அல்லது பப் அழைத்துச் சென்று, இருவரும் நடனம் ஆடிக் கொண்டே, ரொமான்ஸ் செய்வதும் ஒரு தனி சுகம் தான்.

காலை உணவு
காதலிக்கு சற்று வித்தியாசமாக, அவர்கள் மீது உள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்தால், அவர்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு பிடித்ததை தெரிந்து கொண்டு, சமைத்துக் கொடுத்து, அசத்தலாம். பொதுவாக பெண்களுக்கு ஆண்களின் சமையல், அதுவும் காதலன்/கணவன் சமைத்துக் கொடுத்தால், பாசம் அதிகரிக்கும்.

தோட்டம்
பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே அத்தகைய அழகான பூக்கள் சூழ்ந்திருக்க, உங்கள் காதலியை பார்த்து, தோட்டத்தில் உட்கார்ந்து பேசலாம். இவ்வாறு செய்யும் போது, அந்த இடத்தில் யாரும் இல்லாவிட்டால், உங்களுக்கு முத்தம் கிடைக்க கூட வாய்ப்புள்ளது. என்ன நண்பர்களே! இந்த வாய்ப்பை தவற விட போறீங்களா?



Click it and Unblock the Notifications